Mushroom Manjoorian : மணமணக்கும் மஸ்ரூம் மஞ்சூரியன் – இப்டி செஞ்சு பாருங்க, சும்மா டேஸ்ட் அள்ளும்!
Aug 20, 2023, 07:30 AM IST
Mushroom Manjurian : மணமணக்கும் மஸ்ரூம் மஞ்சூரியனை இப்படி செஞ்சு பாருங்க வாயும், வயிறும் வாழ்த்தும்.
காளானின் நன்மைகள்
வயிற்று பிரச்சனை தீரும் காளானில் வயிற்று புண்ணை எதிர்க்கும் குணங்கள் இருக்கின்றன. எலும்புகளை பலமாக்கும் காளானில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது. பசியை குறைக்கிறது காளானை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ள பசியும் அடிக்கடி எடுக்காது. காளான் நம் சருமத்திற்கும் நன்மை தரும்
மஸ்ரூம் மஞ்சூரியன் செய்ய தேவையான பொருட்கள்
மேரியனேட் செய்து பொறிப்பதற்கு
மஸ்ரூம் – 200 கிராம்
மைதா – 2 ஸ்பூன்
கார்ன் ஃப்ளார் – 2 ஸ்பூன்
அரிசி மாவு – 2 ஸ்பூன்
மிளகாய்ப் பொடி – அரை ஸ்பூன்
தயிர் – கால் கப்
கரம் மசாலா - ஒரு ஸ்பூன்
எலுமிச்சை – அரை பழம் பிழிந்தது
இஞ்சி-பூண்டு விழுது – 1 ஸ்பூன்
கசூரி மேத்தி – ஒரு ஸ்பூன்
கொத்தமல்லித்தழை – 2 கொத்து
பொறிக்க
எண்ணெய் – தேவையான அளவு
தாளிக்க
பெரிய வெங்காயம் – 1 (சதுரமாக தனித்தனியாக வெட்டியது)
குடை மிளகாய் – 1 (சதுரமாக வெட்டியது)
இஞ்சி-பூண்டு – பொடியாக நறுக்கியது
வெங்காயத்தாள் – 2 கொத்து (பொடியாக நறுக்கியது)
தக்காளி சாஸ் – 2 ஸ்பூன்
மிளகாய் சாஸ் – 1 ஸ்பூன்
சோயா சாஸ் – அரை ஸ்பூன்
செய்முறை
மேரியனேட் செய்ய கொடுத்துள்ள பொருட்களான மைதா, அரிசி மாவு, கார்ன் மாவு, மிளகாய்த்தூள், தயிர், எலுமிச்சை, இஞ்சி-பூண்டு விழுது, கரம் மசாலா, கசூரி மேத்தி, பொடியாக நறுக்கிய மல்லித்தழை, உப்பு அனைத்தையும் ஒரு பெரிய பவுலில் சேர்த்து நன்றாக கலந்துகொள்ள வேண்டும்.
அதில் இரண்டாக வெட்டிய மஸ்ரூம்களையும் சேர்த்து, நன்றாக ஊறவைக்கவேண்டும். இவை நன்றாக ஒரு மணி நேரம் ஊறட்டும்.
இவற்றை எண்ணெய் காய வைத்து பொறித்து எடுத்துக்கொள்ள வேண்டும். இதுவும் சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும். கார்ன் மாவு அதிகம் சேர்த்தால் கொஞ்சம் மொறுமொறுப்பாக இருக்கும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து, மிக பொடியாக நறுக்கிய இஞ்சி-பூண்டு சேர்த்து வறுக்கவும்.
பின்னர் சதுரமாக வெட்டிய வெங்காயம், குடை மிளகாய் சேர்த்து வதக்க வேணடும்.
இதில் தக்காளி சாஸ், மிளகாய் சாஸ், சோயா சாஸ் சேர்த்து நன்றாக கலந்துவிட்டுக்கொள்ள வேண்டும்.
இதில் பொறித்துவைத்துள்ள மஸ்ரூமை சேர்க்க வேண்டும். நன்றாக பிரட்டி எடுத்தால் சுவையான மஸ்ரூம் மஞ்சூரியன் தயார்.
உப்பு சரிபார்த்துக்கொண்டு, பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள், மல்லித்தழை இரண்டையும் மேலே தூவி இறக்கி சிறிது நேரம் மூடி வைக்கவேண்டும்.
இப்போது திறந்து பார்த்தால் மஸ்ரூம் மஞ்சூரியன் சாப்பிடதயாராக இருக்கும்.
இதை சாப்பாத்தி அல்லது ஃப்ரைட் ரைஸ் என எதனுடன் வேண்டுமானாலும் பரிமாறலாம்.
குழந்தைகள் மிகவும் விரும்பி உண்ணும் ஒன்றாக இந்த மஸ்ரூம் மஞ்சூரியன் இருக்கும்.
டாபிக்ஸ்