தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Mango Chutney : காரசாரமான மாங்காய் சட்னி.. கர்ப்பிணிகளுக்கு மிகவும் பிடிக்கும்.. சூடான சாதத்துடன் சாப்பிட்டால் அட்டகாசம்

Mango Chutney : காரசாரமான மாங்காய் சட்னி.. கர்ப்பிணிகளுக்கு மிகவும் பிடிக்கும்.. சூடான சாதத்துடன் சாப்பிட்டால் அட்டகாசம்

Apr 02, 2024, 08:57 AM IST

google News
Mango Chutney Recipe: பொதுவாக சீசனில் மாங்காயை பயன்படுத்தி பல உணவுகள் தயாரிக்கப்படுகின்றன.அப்படி ஒரு உணவுதான் மாங்காய் சட்னி. சீசன் முடிவதற்குள் உடனடி மாங்காய் சட்னி செய்து பாருங்கள். மிக மிக சுவையானது. இந்த சட்னி செய்ய வெறும் 5 நிமிடம் போதும்.
Mango Chutney Recipe: பொதுவாக சீசனில் மாங்காயை பயன்படுத்தி பல உணவுகள் தயாரிக்கப்படுகின்றன.அப்படி ஒரு உணவுதான் மாங்காய் சட்னி. சீசன் முடிவதற்குள் உடனடி மாங்காய் சட்னி செய்து பாருங்கள். மிக மிக சுவையானது. இந்த சட்னி செய்ய வெறும் 5 நிமிடம் போதும்.

Mango Chutney Recipe: பொதுவாக சீசனில் மாங்காயை பயன்படுத்தி பல உணவுகள் தயாரிக்கப்படுகின்றன.அப்படி ஒரு உணவுதான் மாங்காய் சட்னி. சீசன் முடிவதற்குள் உடனடி மாங்காய் சட்னி செய்து பாருங்கள். மிக மிக சுவையானது. இந்த சட்னி செய்ய வெறும் 5 நிமிடம் போதும்.

Mango Chutney Recipe: கோடை காலம் வந்தாலே நமக்கு முதலில் நியாபகம் வருவது மாங்காய் தான். மாங்காயை பார்த்தாலே பலருக்கும் வாயில் எச்சில் ஊரும். மாங்காய் மாம்பழம் சாப்பிடாமல் கோடை காலம் எப்போதும் நிறைவடையாது. ஆனால் சீசனில் மாங்காயை பயன்படுத்தி பல உணவுகள் தயாரிக்கப்படுகின்றன.அப்படி ஒரு உணவுதான் மாங்காய் சட்னி. சீசன் முடிவதற்குள் உடனடி மாங்காய் சட்னி செய்து பாருங்கள். மிக மிக சுவையானது. இந்த சட்னி செய்ய வெறும் 5 நிமிடம் போதும்.

உண்மையில், ஏப்ரல் மாதம் தொடங்கும் போது, ​​மாங்காய் சந்தையில் ஏராளமாக வரும். மேலும் மா மரங்களில் காய்கள் நிறைந்துள்ளன. இந்த மாங்காய் ஊறுகாய்க்கு பயன்படுகிறது. மாங்காயில் ஊறுகாய் மட்டும் அல்ல. மாங்காய் சாதம், மாங்காய் பச்சடி, மாங்காய் சட்னி என பல வகையாக சமைக்கலாம்.

மாங்காய் சட்னி செய்ய தேவையான பொருட்கள்

மாம்பழம் - 1

கடலைப்பருப்பு - 1 ஸ்பூன்

உளுந்தம்பருப்பு - 1 ஸ்பூன்

பெருங்காயம் - 1/4 ஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 4

பச்சை மிளகாய் - 2

கடுகு - 1 ஸ்பூன்

பெருங்காயம் சிறிதளவு

பூண்டு இரண்டு

கறிவேப்பிலை சிறிதளவு

உப்பு அளவு.

மாங்காய் சட்னி செய்வது எப்படி

அடுப்பில் வாணலியை வைத்து மிதமான தீயில் எண்ணெய் சேர்க்கவும்.

பிறகு கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு சேர்த்து வதக்கவும். இப்போது காய்ந்த மிளகாய் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். காரமாக வேண்டுமானால் காய்ந்த மிளகாய் அளவை அதிகமாக சேர்த்துக்கொள்ளலாம்.

பிறகு மிக்ஸி ஜாடியை எடுத்து அதில் வறுத்த மசாலா, சீரகம், பூண்டு, மாங்காய், உப்பு சேர்த்து அரைக்கவும்.

கொரகொரப்பாக அரைக்க வேண்டும். அதன் பிறகு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு கடுகு உளுந்து , பெருங்காயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

அதன் பிறகு கலவை பொருட்களை தாளிப்புடன் சேர்க்கவும்.

சிறிது நேரம் வதக்க வேண்டும். பின்னர் இறுதியாக அதை சுவைத்து, நீங்கள் உப்பு சேர்க்க வேண்டுமா இல்லையா என்று பாருங்கள். அவ்வளவுதாள் சுவையான மாங்காய் சட்னி தயார்.
இந்த சட்னி சில சமயங்களில் புளிப்பாக மாறும். இந்த நிலையில் சட்னியில் நெய் சேர்க்கலாம். சாதத்தில் நெய் சேர்த்தால் மாங்காய் புளிப்பு அவ்வளவு இருக்காது. கர்ப்பிணிகள் மற்றும் சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடலாம். இந்த மாங்காய் சட்னி சூடான சாதத்துடன் சாப்பிட அட்டகாசமான காமினேஷன்.

குறிப்பு:விருப்பம் உள்ளவர்கள் அதில் ஒரு சிறிய துண்டு வெல்லத்தை சேர்த்து கொள்ளலாம்.

மாங்காயின் நன்மைகள்

மாங்காய் என்றாலே பலருக்கு அப்படியே சாப்பிட பிடிக்கும். பலர் மாங்காயுடன் மிளகாய் பொடி உப்பு கலந்து சாப்பிட விரும்புவர். மாங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன பாருங்கள்.

மாங்காய் ஹீட் ஸ்ட்ரோக்கின் அறிகுறிகளைக் குறைக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

மாம்பழத்தை விட மாங்காய் சர்க்கரை அளவு குறைவு. எனவே நீரிழிவு நோயாளிகள் மாம்பழம் பதிலாக மாங்காய் சாப்பிட்டால் சுவையை அனுபவிக்க முடியும்.

மாங்காய்யில் மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் உள்ளது. இவை இரண்டும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். இது இதயத்துக்கு நல்லது. எனவே இதய நோயாளிகள் இதை சாப்பிடலாம்.

மாங்காய் சாப்பிடுவதால் கொலஸ்ட்ரால் கட்டுக்கும் அடங்கும். மாங்காய் அளவோடு சாப்பிட வேண்டும். அதேசமயம்  அதிகமாக சாப்பிடுவது உடல் நலத்திற்கு நல்லதல்ல.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.
அடுத்த செய்தி