Monsoon Allergies : அலர்ஜியை தடுத்து, ஆரோக்கியத்துக்கு உறுதியளிக்கும் அற்புத டிப்ஸ்கள்!
Aug 21, 2023, 01:00 PM IST
மழைக்காலத்தில் பல்வேறு தொற்றுகளுடன் அலர்ஜியும் சேர்ந்துகொள்ளும். அலர்ஜியை தடுத்து ஆரோக்கியமாக வாழும் வழிகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
சளி, சருமம் மற்றம் கண் ஆகியவற்றில் அலர்ஜி ஏற்படுகிறது. இதனால் தொற்று, அஜீரண கோளாறு உள்ளிட்ட மழைக்கால பிரச்னைகள் ஏற்படுகின்றன. மழைக்காலத்தில் ஏற்படும அலர்ஜியை நாம் சீஸ்னல் அலர்ஜி என்று குறிப்பிடுகிறோம். நீங்கள் எச்சரிக்கையுடன் இருந்தால் மழைக்காலத்தில் ஏற்படும் அலர்ஜிகளை தடுக்கலாம்.
அலர்ஜிகளால் நமது உடல் நிலை அதிகம் பாதிக்கப்படும். மழைக்காலத்துக்கு முன்னர் தூசி அதிகம் இருப்பது ஏற்கனவே அலர்ஜி உள்ளவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஒரு சிலருக்கு எல்லா காலங்களிலும் அலர்ஜி ஏற்படும். இது நோய் எதிர்ப்பு தன்மை குறைவால் ஏற்படுகிறது.
அலர்ஜியால் சளி, இருமல் ஏற்பட்டு பாதிக்கப்படுகிறீர்களா? அதற்கு நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிக்க பின்வருவற்றை பயன்படுத்த வேண்டும்.
சுகாதாரத்தை பேணுங்கள்
கையை அடிக்கடி நன்றாக சோப்பு போட்டு கழுவவேண்டும். நல்ல சானிடைசரை உபயோகிக்க வேண்டும். அது கிருமிகள் பரவாமல் தடுக்கும். முகத்தை அடிக்கடி தொடுவதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக வாய், கண், மூக்கில் கை வைக்கவே கூடாது. உணர் உறுப்புகள் வழியாகத்தான் கிருமிகள் நமது உடலை அடைகின்றன. அவற்றை நாம் கைகளால் தொட்டால், கிருமிகள் பரவி, அலர்ஜி நமக்கு விரைவில் தொற்றிக்கொள்ளும்.
நோய் எதிர்ப்பு திறனை அதிகரியுங்கள்
நோய் எதிர்ப்பு தன்மை குறைவாக இருந்தால், அலர்ஜிகள் அடிக்கடி ஏற்படும். எனவே உங்கள் நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்க, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைபிடியுங்கள். சரிவிகித உணவு உட்கொள்வது, அதிலும் குறிப்பாக பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், புரதம் என அனைத்தையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். நீர்ச்சத்துடன் இருங்கள், உடற்பயிற்சியை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள், நன்றாக ஓய்வெடுத்து உங்கள் நோய் எதிர்ப்புத்திறன் அதிகரிக்க உதவுங்கள்.
மன அழுத்தத்தை குறையுங்கள்
நீண்ட கால மன அழுத்தம் உங்கள் உடலில், கார்டிசால் என்ற மன அழுத்த ஹார்மோனை சுரக்கச் செய்கிறது. அது உங்கள் உடலின் நோய் எதிர்ப்புத்திறனை தாக்கி, உங்களை பலவீனமாக்குகிறது. எனவே மன அழுத்தத்தை குறைக்கும் மூச்சுப்பயிற்சி, யோகா, தியானம் ஆகியவற்றை செய்யுங்கள். உங்களுக்கு பிடித்த பொழுதுபோக்கின் மூலம் உங்கள் மனதை அழுத்தமின்றி பராமரித்துக்கொள்ளுங்கள்.
அலர்ஜியை அதிகரிக்கச் செய்பவற்றை தவிர்த்து விடுங்கள்
உங்களுக்கு பருவகால அலர்ஜி இருந்தால் உங்கள் நோய் அறிகுறிகளை அதிகரிக்கும் விஷயங்களை கண்டுபிடித்து தவிர்த்து விடுங்கள். ஏதேனும் பொடி, தூசி, வளர்ப்பு பிராணிகள் முடி, சில உணவுகள் சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தும். எனவே அவற்றை தவிர்ப்பது நல்லது. உங்கள் வீட்டை சுத்தமாக பராமரியுங்கள். காற்றி சுத்தமாக்கும் கருவிகளை பயன்படுத்தி சுத்தத்தை பேணுங்கள்.
சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருங்கள்
உங்கள் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருங்கள். பூச்சிக்கொல்லிகளை அடிக்கடி தெளித்து சுற்றுப்புறத்தை சுத்தமாக பேணுங்கள். இது வைரஸ், பாக்டீரியா தொற்றுகளில் இருந்து காக்கிறது.
அலர்ஜி மருந்துகளை பயன்படுத்துங்கள்
அலர்ஜிக்கு தேவையான மருந்துகளை எப்போது கையில் வைத்திருந்து, தேவைப்படும்போது பயன்படுத்துங்கள். தேவைப்பட்டால் மருத்துவரை அணுகி உங்கள் அலர்ஜிக்கு தேவையான மருந்துகளை பெற்றுக்கொள்ளுங்கள்.
உடல் நலமில்லாதவர்களிடம் இருந்து விலகியிருங்கள், தடுப்பூசி எடுத்துக்கொள்ளுங்கள்
உங்கள் வீட்டில் உடல் நலமில்லாதவர்கள் இருந்தால், அவர்களிடம் இருந்து விலகியிருங்கள். குறிப்பாக சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்ட கோளாறு உள்ள நபர்களிடம் இருந்து விலகியிருங்கள். தேவையான தடுப்பு ஊசிகளை மருத்துவரின் பரிந்துரையின் பேரில் எடுத்துக்கொண்டு உங்களை தற்காத்துக்கொள்ளுங்கள்.
டாபிக்ஸ்