தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Missi Roti : நீங்கள் மிஸ் பண்ணிவிடக்கூடாத ஒன்று மிஸ்ஸி ரொட்டி! வட இந்திய பிரபல உணவை செய்வது எப்படி?

Missi Roti : நீங்கள் மிஸ் பண்ணிவிடக்கூடாத ஒன்று மிஸ்ஸி ரொட்டி! வட இந்திய பிரபல உணவை செய்வது எப்படி?

Priyadarshini R HT Tamil

Jun 02, 2024, 11:34 AM IST

google News
Missi Roti : நீங்கள் மிஸ் பண்ணிவிடக்கூடாத ஒன்று மிஸ்ஸி ரொட்டி, வட இந்திய பிரபல உணவை செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள். (social boat)
Missi Roti : நீங்கள் மிஸ் பண்ணிவிடக்கூடாத ஒன்று மிஸ்ஸி ரொட்டி, வட இந்திய பிரபல உணவை செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

Missi Roti : நீங்கள் மிஸ் பண்ணிவிடக்கூடாத ஒன்று மிஸ்ஸி ரொட்டி, வட இந்திய பிரபல உணவை செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

சப்பாத்தி, ரொட்டி என்றாலே அவையனைத்தும் வடஇந்தியாவில்தான் பிரபலம். வடஇந்தியர்கள் பலவகையில் ரொட்டிகளை செய்வார்கள். இவர்கள் ரொட்டி செய்வதற்கு கோதுமை மாவை அடிப்படையாக பயன்படுத்துகிறார்கள். அதனுடன் பிற மாவுகளையும் கலந்து ரொட்டிகளை தயாரிக்கிறார். இதனால் அங்கு பலவகை ரொட்டிகள் தயாரிக்கப்படுகிறது.

ரொட்டிகளில் பல வகை உண்டு. இது வித்யாசமான மிஸ்ஸி ரொட்டி. இதை செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு – ஒரு கப்

கடலை மாவு – ஒரு கப்

வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது)

புதினா இலைகள் – கைப்பிடியளவு பொடியாக நறுக்கியது

கொத்தமல்லி இலை – கைப்பிடியளல பொடியாக நறுக்கியது

ஓமம் – அரை ஸ்பூன்

மல்லித்தூள் – ஒரு ஸ்பூன்

சீரகத் தூள் – ஒரு ஸ்பூன்

சில்லி பிளேக்ஸ் – ஒரு ஸ்பூன்

ஆம்சுர் பவுடர் – ஒரு ஸ்பூன்

கரம் மசாலா தூள் – ஒரு ஸ்பூன்

உப்பு – தேவையான பொருட்கள்

கசூரி மேத்தி – ஒரு ஸ்பூன்

எண்ணெய் – 2 ஸ்பூன்

செய்முறை

பாத்திரத்தில் கோதுமை மாவு, கடலை மாவு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லித்தழை என அனைத்தையும் சேர்த்து வைக்கவேண்டும்.

பின்னர் ஓமம், கொரகொரப்பாக அரைத்த மல்லித் தூள், சீரகத் தூள், சில்லி பிளேக்ஸ், ஆம்சுர் பவுடர், கரம் மசாலா, உப்பு, கசூரி மேத்தி சேர்த்து கலந்துவிடவேண்டும். பின்னர் எண்ணெய் சேர்த்து கலந்து கொஞ்சம் கொஞ்சமா தண்ணீர் சேர்த்து பிசைந்து 10 நிமடங்கள் ஊறவைக்கவேண்டும்.

பின்னர் சிறிய உருண்டைகளாக உருட்டி, மாவில் தோய்த்து சாப்பாத்தி கட்டையில் வைத்து ரொட்டிகளாக தேய்த்துக்கொள்ள வேண்டும். தாவாவை சூடு செய்து தயார் செய்த ரொட்டியை போட்டு மிதமான தீயில் வேகவிடவேண்டும்.

ஒரு பக்கம் வெந்ததும் அடுத்த பக்கம் திருப்பி போட்டு வேகவிடவேண்டும். இரண்டு பக்கமும் எண்ணெய் தேய்த்து, வெந்ததும் கல்லில் இருந்து எடுத்து சூடாக பரிமாறவும். சுவையான மிஸ்ஸி ரொட்டி சாப்பிட ரெடி.

மிஸ்ஸி ரொட்டி

மிஸ்ஸி ரொட்டி என்பது சுவையான மற்றும் முழுமையான இந்திய உணவு. இது கோதுமை மற்றும் கடலை மாவை வைத்து செய்யப்படுவது. இதில், பல முலிகைகளும் பயன்படுதத்தப்படுகிறது. வழக்கமான ரொட்டிகள் மற்றும் ஃபுல்காக்களைவிட இது வித்யாசமானது. இதில் சேர்க்கப்படும் மூலிகைகள் இதற்கு கூடுதல் சுவையைக் கொடுக்கிறது. இந்த சுவை நிறைந்த ரொட்டியை செய்வதும் எளிது. இந்த ரொட்டியின் சுவைக்கு காரணம் நாம் இந்த ரொட்டி மாவிலே எண்ணற்ற பொருட்களை சேர்க்கிறோம்.

இந்த மிஸ்ஸி ரொட்டியில் ஏற்கனவே எண்ணற்ற மசாலாக்கள் சேர்க்கப்படுவதால், இதற்கென ஒரு தனி சைட்டிஷ் தேவையில்லை. பெரும்பாலும் இதை நீங்கள் வெறும் தயிர் மற்றும் ஊறுகாயுடனே சாப்பிட்டு முடித்துவிடலாம். 

ஆனால் உங்கள்க்கு தேவையென்றால், சைவ அசைவ குழம்புகள் அல்லது குருமா, பன்னீர் பட்டர் மசாலா போன்ற கிரேவிகள் என எதனுடன் வேண்டுமானாலும் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும். இந்த மிஸ்ஸி ரொட்டி ஆரோக்கியமும் நிறைந்தது என்பதால், இதை மிஸ் பண்ணாமல் சாப்பிட்டு மகிழுங்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி