தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Methi Leaves Dhal Kootu : வெந்தய கீரை பருப்பு கூட்டு; ஆரோக்கியம் நிறைந்தது!

Methi Leaves Dhal Kootu : வெந்தய கீரை பருப்பு கூட்டு; ஆரோக்கியம் நிறைந்தது!

Priyadarshini R HT Tamil

Mar 02, 2024, 11:44 AM IST

google News
Methi Leaves Dhal Kootu : வெந்தய கீரை பருப்பு கூட்டு; ஆரோக்கியம் நிறைந்தது!
Methi Leaves Dhal Kootu : வெந்தய கீரை பருப்பு கூட்டு; ஆரோக்கியம் நிறைந்தது!

Methi Leaves Dhal Kootu : வெந்தய கீரை பருப்பு கூட்டு; ஆரோக்கியம் நிறைந்தது!

தேவையான பொருட்கள்

சமைத்த பருப்பு செய்ய

துவரம் பருப்பு – அரை கப்

கடலை பருப்பு – 2 ஸ்பூன்

பாசி பருப்பு – 2 ஸ்பூன்

மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

மேத்தி தால் செய்ய

மேத்தி இலை (வெந்தயக் கீரை) – ஒரு கொத்து

நெய் – ஒரு ஸ்பூன்

சீரகம் – ஒரு ஸ்பூன்

பெருங்காய தூள் – கால் ஸ்பூன்

இஞ்சி – சிறிதளவு

பூண்டு – 4 பல்

பச்சை மிளகாய் – 1

வெங்காயம் – 1

காஷ்மீரி மிளகாய் தூள் – 2 ஸ்பூன்

சீரகப் பொடி – ஒரு ஸ்பூன்

தக்காளி – 1

கரம் மசாலா – ஒரு ஸ்பூன்

கொத்துமல்லி தழை – கைப்பிடியளவு

தட்கா செய்ய தேவையான பொருட்கள்

நெய் – 2 ஸ்பூன்

சீரகம் – அரை ஸ்பூன்

சிவப்பு மிளகாய் – 2

சிவப்பு மிளகாய் தூள் – கால் ஸ்பூன்

கொத்துமல்லி தழை - கைப்பிடியளவு 

செய்முறை –

ஒரு பெரிய கிண்ணத்தில் துவரம் பருப்பு, கடலை பருப்பு மற்றும் பாசி பருப்பு ஆகியவற்றை எடுத்துக்கொள்ளவேண்டும்.

பருப்பைக் கழுவி 30 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைக்கவேண்டும்.

ஊறவைத்த பருப்புகளை பிரஷர் குக்கருக்கு மாற்றி, மஞ்சள் தூள், உப்பு சேர்க்கவும். தண்ணீர் சேர்த்து, மிதமான தீயில் 4 – 5 விசில் வரும் வரை பிரஷர் செய்யவேண்டும்.

அகன்ற கடாயை எடுத்து நெய் சேர்க்கவேண்டும்.

சீரகம் மற்றும் பெருங்காய தூள் சேர்க்கவேண்டும்.

நறுக்கிய பூண்டு, இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் சேர்க்கவேண்டும். சில நொடிகள் வதக்கவேண்டும். நறுக்கிய வெங்காயம் சேர்த்து 3 நிமிடங்கள் வதக்கவேண்டும்.

மிளகாய் தூள் மற்றும் சீரக தூள் சேர்த்து, நன்றாக கலக்கவேண்டும். தக்காளி, உப்பு சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.

பொடியாக நறுக்கிய மேத்தி இலைகளை சேர்த்து, கலந்து தண்ணீர் சேர்க்கவேண்டும். 5 நிமிடங்கள் சமைக்கவேண்டும். சமைத்த பருப்பு, தண்ணீர் சேர்க்கவுவேண்டும். மிதமான தீயில் 10 நிமிடம் மூடி வைத்து சமைக்கவேண்டும்.

10 கடைசியாக கரம் மசாலா தூள் சேர்க்கவேண்டும். நன்றாக கலக்கவேண்டும். கொத்தமல்லி தழை சேர்த்து கலந்து கடாயை தனியாக வைக்கவேண்டும்.

தட்காவிற்கு, ஒரு பாத்திரத்தில் நெய் எடுக்கவேண்டும்.

சீரகம், சிவப்பு மிளகாய், சிவப்பு மிளகாய் தூள் மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்த்து வதக்க வேண்டும். வதக்கி முடிந்ததும், தாளிப்பை பருப்புக்கு மாற்றி நன்றாக கலக்க வேண்டும்.

மெத்தி தால் தட்கா பரிமாற தயாராக உள்ளது.

நன்றி - ஹேமா சுப்ரமணியன். 

வெந்தயத்தை தண்ணீரில் ஊறவைத்து பருகுவதால் ஏற்படும் நன்மைகள்

ஒரு ஸ்பூன் வெந்தயத்தை ஒரு கப் தண்ணீரில் அறை வெப்ப நிலையில் ஓரிவு ஊற வைக்க வேண்டும். அடுத்த நாள், அதை வடித்து, வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

இதில் உள்ள பாக்டீரியாக்களுக்கு எதிரான பொருட்கள், வாயுவை குறைத்து, வயிறு உப்புசத்தை தடுத்து ஜீரணத்துக்கு உதவுகிறது.

கொழுப்பை குறைக்கிறது. வெந்தயத்தில் ஸ்டிராய்டல் சப்போனின்கள் அதிகம் உள்ளது. அவை, வயிற்றில் கொழுப்பை உறிஞ்சுவதை கட்டுப்படுத்தி, மொத்த கொழுப்பு அளவை கட்டுப்படுத்துகிறது. அது ரத்தத்தில் ட்ரைகிளிசிரைட் அளவை குறைக்கிறது.

வெந்தயத்தில் அதிகம் காலாக்டோமன்னான் உள்ளது. அது அஜிரணக்கோளாறை குறைக்கிறது. மலச்சிக்கல் மற்றும் வேறு எந்த வயிறு தொடர்பான பிரச்னைகளும் வராமல் இருக்க உதவுகிறது.

நீரிழிவு நோயை தடுக்க உதவுகிறது. வெந்தய தண்ணீரில் ரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவி, நீரிழிவு நோய் வராமல் தடுக்கிறது.

இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. வெந்தயத்தில் உள்ள நார்ச்சத்துக்கள், இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. ரத்தம் உறைதலை தடுக்க உதவுகிறது.

காலையில் வெறும் வயிற்றில் வெந்தய தண்ணீரை குடிப்பது, உடற்சூட்டை அதிகரிக்கு எடை குறைத்து, பராமரிப்பதில் உதவுவதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.

ஆய்வுகளின்படி, வெந்தய தண்ணீரை குடிப்பது தலைமுடி வளர்ச்சிக்கு உதவுவதுடன், தலைமுடியின் வேர்க்கால்களை வலுப்படுத்துகிறது. தலையில் பொடுகு தொற்று ஏற்படாமலும் தடுக்கிறது.

சிறுநீரகத்தின் செயல்பாடுகளை அதிகரிக்க உதவுகிறது. வெந்தய தண்ணீரில் பாலிபிஃனாலிக் ஃபிளேவனாய்ட்கள் உள்ளது. அது சிறுநீரகத்தின் செயல்பாடுகளை அதிகரிக்கிறது. சிறுநீரகத்தில் கற்கள் வராமல் இருக்க உதவுகிறது.

வெந்தய தண்ணீரில் வைட்டமின் கே மற்றும் சி உள்ளது. அது சரும ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. முகப்பரு, சுருக்கம், கரும்புள்ளிகள் மற்றும் கோடு ஆகியவைகள் ஏற்படாமல் தடுக்கிறது.

நிபுணர்களைப்பொறுத்தவரை, வெந்தயத்தில் ஃப்யூரோடானோலிக் சாப்போனின்கள் அதிகம் உள்ளது. அது டெஸ்ட்ஸ்ரோன் அதிகரிக்கவும், ஸ்பெர்ம் எண்ணிக்கை அதிகரிக்கவும் உதவுகிறது.

நீர்ச்சத்துடன் இருக்க உதவுகிறது. காலையில் வெறும் வயிற்றில் வெந்தய தண்ணீரை குடிப்பதன் மூலம், மயக்கம், சோர்வு, காலை நேர சோர்வு மற்றும் தலைவலி ஆகிய அனைத்தையும் குறைக்க உதவுகிறது.

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.
அடுத்த செய்தி