தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Mental Health : மயக்கமா? கலக்கமா? மனதிலே குழப்பமா? இந்த வைட்டமின் குறைபாடும் காரணமாகலாம்!

Mental Health : மயக்கமா? கலக்கமா? மனதிலே குழப்பமா? இந்த வைட்டமின் குறைபாடும் காரணமாகலாம்!

Priyadarshini R HT Tamil

Jan 22, 2024, 04:04 PM IST

google News
Mental Health : மயக்கமா? கலக்கமா? மனதிலே குழப்பமா? இந்த வைட்டமின் குறைபாடும் காரணமாகலாம்!
Mental Health : மயக்கமா? கலக்கமா? மனதிலே குழப்பமா? இந்த வைட்டமின் குறைபாடும் காரணமாகலாம்!

Mental Health : மயக்கமா? கலக்கமா? மனதிலே குழப்பமா? இந்த வைட்டமின் குறைபாடும் காரணமாகலாம்!

மனகோளாறுகளின் அறிகுறிகளை புறக்கணிக்க வேண்டாம்

மனஅழுத்ததின் சில அறிகுறிகளை நாம் எப்போதும் பெரும் பொருட்டாக கருதுவதில்லை. அதிலும் குறிப்பாக மறதி போன்ற விஷயங்களை நாம் ஒரு பொருட்டாகவே கருதமாட்டோம். ஆனால், குழப்பம் மற்றும் மனஅழுத்தம் ஆகியவை அதிக பிரச்னைகளை ஏற்படுத்தக்கூடியவை. இவை உடல் மன ஆரோக்கியத்துக்கும், எதிர்காலத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை. இதன் அறிகுறிகள் வெளியே தெரியாமல் இருக்கும்.

அதை நாம் அப்படியே விட்டுவிட்டால், ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் அது மோசமாகும். குழப்பம், சோகம், நம்பிக்கையின்மை ஏற்படும். இவையெல்லாம் மனஅழுத்தத்தின் முக்கிய அறிகுறிகள். இது ஒரு முக்கியமான ஆரோக்கிய குறைபாடு. இதுகுறித்த அக்கறை கட்டாயம் தேவை.

இதற்கு பின்னால் உள்ள காரணத்தை தெரிந்துகொள்ளுங்கள்

இந்த அறிகுறிகளை புறக்கணிப்பது, உடலின் ஒட்டுமொத்த இயக்கத்திலுமே பிரச்னையை ஏற்படுத்துகிறது. உறவுகள், பணி மற்றும் அன்றாட வாழ்க்கை என அனைத்தையும் பாதிக்கிறது. கூடுதலாக, குணப்படுத்தாத மன அழுத்தம், உடல் சார்ந்த பிரச்னைகளையும் ஏற்படுத்துகிறது. மறைந்திருக்கும் அறிகுறிகள் மனஅழுத்த பிரச்னைகள் மற்றும் மனக்கோளாறுகளுடன் தொடர்புடையவையாக இருக்கலாம்.

இதை முன்னரே கண்டுபிடித்துவிட்டால், நன்முறையில் சிகிச்சை கொடுத்துவிடலாம். இதற்கு நண்பர்கள், உறவினர்கள் அல்லது மனநல மருத்துவர்களின் உதவியைப்பெறலாம். அது மிகவும் முக்கியமான ஒன்று. எனவே குறைவான அறிகுறிகளை தெரியப்படுத்துவதும், அறிந்துகொள்வதும் மிகவும் அவசியம்.

எனவே இதுகுறித்து ஆரோக்கியமான அணுகுமுறையை ஆரம்பத்தில் இருந்தே கடைபிடித்து, வியாதி அதிகரிக்கும் முன் தடுத்துக்கொள்வது சிறந்தது.

இது காரணமாகலாம்

வைட்டமின் பி12 உடலில் குறைவாக இருப்பதற்கும் அதற்கும் காரணம் இருக்கலாம். ஏனெனில் இந்த வைட்டமின் நினைவாற்றல் ஆரோக்கியத்தை பேணுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது செரோட்டினின், டோப்பமைன் போன்ற மனதை மகிழ்ச்சிப்படுத்தும் ஹார்மோன்களை சுரக்கச் செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த ஹார்மோன்தான் மனநிலை, உணர்வு மற்றும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. வைட்டமின் பி12 மனஅழுத்தம், பதற்றம், நினைவாற்றல் இழப்பு போன்ற பல்வேறு மனநலக்கோளாறுகளுடன் தொடர்புடையது.

மன ஆரோக்கியத்தை பராமரிப்பதில் வைட்டமின் பி12ன் பங்கு

உடலில் வைட்டமின் பி12 குறைவாக இருந்தால், அது மைலின் ஷியாத் என்ற நரம்புகளை பாதுகாக்கம் கவசம் அழிவதற்கு காரணமாக இருக்கலாம். இது நரம்பியல் செயல்பாடுகளை குறைத்து, நினைவாற்றல் குறைபாட்டை ஏற்படுத்துகிறது. இதனால் நினைவாற்றல் இழப்பு, கவனமின்மை மற்றும் மனக்குறை ஆகியவை ஏற்படுகிறது.

வைட்டமின் பி12 நரம்புகளை அழுத்தத்தில் இருந்து பாதுகாக்கிறது. மற்றும் அடினோசில் மெத்தியோனைன் என்ற மனமகிழ்ச்சிதரும் உட்பொருளுக்கும் காரணமாகிறது.

யாருக்கு வைட்டமின் பி12 குறைபாடு ஏற்படும்?

அதிகளவில் சைவ உணவுகளை மட்டுமே சாப்பிடுபவர்களுக்கு இந்த வைட்டமின் பி12 குறைபாடு ஏற்படும். வயோதிகர்கள், சிலருக்கு ஊட்டச்சத்து உறிஞ்சுவதில் பிரச்னைகள் உள்ளவர்களுக்கும் இந்த பிரச்னை ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. மனஆரோக்கியம் மற்றும் நினைவாற்றலை வளர்த்துக்கொள்வதற்கு வைட்டமின் பி12 மிகவும் முக்கியமானது.

வைட்டமின் பி12 குறைபாட்டின் அறிகுறிகள் என்ன?

இதனால் பல்வேறு அறிகுறிகள் தோன்றும். பொதுவான அறிகுறிகளாக சோர்வு, மயக்கம், சருமம் வெளிர்தல் ஆகியவை இருக்கும். நினைவிழப்பு, மரத்துப்போதல், கவனமின்மை ஆகியவை நரம்பியல் கோளாறுகளாக ஏற்படுகின்றன.

அனீமியா, மூச்சு திணறல், இதயம் படபடப்பு முக்கிய அறிகுறியாகும். எரிச்சல், மனஅழுத்தம் போன்ற மனநிலை மாற்றங்கள் ஏற்படும். குறிப்பாக சைவ உணவுகளை மட்டும் சாப்பிடுபவர்களுக்கு இந்த ஆபத்துக்கள் அதிகம். வயோதிகர்கள், செரிமான கோளாறு உள்ளவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

வைட்டமின் பி12 அதிகம் நிறைந்த உணவுகள்

வைட்டமின் பி12 நிறைந்த உணவுகள் பெரும்பாலும் இறைச்சி உணவுகள் தான். வைட்டமின் பி12 ரத்த சிவப்பணுக்கள் உருவாகவும், நரம்பியல் இயக்கத்துக்கும் உதவுகிறது. பன்றி இறைச்சி, மாட்டு இறைச்சி, ஆடு, கோழி, வான்கோழி ஆகியவற்றில் அதிகம் உள்ளது. ஃபேட்டி ஃபிஷ் போன்ற சால்மன், டூனா மற்றும் மெக்கரீல் ஆகிய மீன்களிலும் சிப்பி உணவு வகைகளிலும் அதிகம் உள்ளது.

பால் பொருட்களான பால், சீஸ், தாவர பால்கள், பருப்புகள், ஈஸ்ட் ஆகியவற்றில் அதிகம் வைட்டமின் பி12 உள்ளது. உங்கள் மருத்துவரையும் தேவைப்பட்டால் அணுகி தனிப்பட்ட முறையில் சிகிச்சை மற்றும் அறிவுரை எடுத்துக்கொள்ளலாம்.

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.
அடுத்த செய்தி