Non Veg Foods Allergy: அசைவ உணவுகளால் ஏற்படும் ஆபத்தான அலர்ஜி
Jan 08, 2023, 09:43 PM IST
அசைவ உணவுகளால் ஏற்படும் ஆபத்தான அலர்ஜி குறித்த விழிப்புணர்வையும் அதன் தொடர்ச்சியான சிகிச்சை அறிவுரைகள் பற்றி இங்கு காணலாம்.
நீங்கள் இறைச்சி பிரியரா? கவனமாக இருங்கள், அனைவருக்கும் எல்லா வகையான இறைச்சியும் ஒத்துக் கொள்ளாது. இறைச்சி ஒவ்வாமை சில சமயங்களில் மரணத்தை விளைவிக்கும்.
நீங்கள் எப்போதாவது இறைச்சி சாப்பிட்ட பிறகு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு அனுபவித்திருக்கிறீர்களா? அல்லது குறிப்பிட்ட இறைச்சியை உண்ணும் போதெல்லாம் தலைசுற்றுகிறதா? உங்கள் பதில் ஆம் என்றால், உங்களுக்கு இறைச்சி ஒவ்வாமை இருக்கலாம். உணவு ஒவ்வாமை பொதுவானது, மேலும் பலருக்கு பால் பொருட்கள் போன்ற சில உணவுகளுக்கு ஒவ்வாமை உள்ளது. ஆனால் இந்த இறைச்சி ஒவ்வாமை மற்ற வகை உணவு ஒவ்வாமைகளை விட குறைவான நிகழ்வுகளில் காணப்படுகிறது.
சிலருக்கு கோழிக்கறி சாப்பிட்டவுடன் தோலில் அரிப்பு மற்றும் வீக்கம் ஏற்படும். சிலருக்கு முட்டை சாப்பிட்டால் இப்படி ஆகலாம். ஆட்டிறைச்சி, பன்றி இறைச்சி, மாட்டிறைச்சி இறைச்சியை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு இறைச்சி ஒவ்வாமையின் தீவிரத்தன்மை அதிகமாக இருக்கலாம்.
சில வகையான இறைச்சிகளில் ஒவ்வாமையை தூண்டக்கூடிய புரதங்கள் உள்ளன. நீங்கள் அத்தகைய இறைச்சியை உண்ணும்போது உங்கள் உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு அதிகமாக செயல்படுகிறது. இந்த நேரத்தில் உடல் இரத்த ஓட்டத்தில் ஹிஸ்டமைன் என்ற வேதிப்பொருளை வெளியிடுகிறது. பின்னர் ஒரு ஒவ்வாமை எதிர்வினை ஏற்படுகிறது.
ஹிஸ்டமைன் சில சமயங்களில் கடுமையான பக்கவிளைவுகளைத் தூண்டி, ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்து, சளியை உற்பத்தி செய்யும் செல்கள் செயலில் ஈடுபடும். அப்போது உங்கள் உடல் பல்வேறு வகையான சமிக்ஞைகளை உங்களுக்கு வழங்குகிறது. இதன் பொருள் உங்களுக்கு அந்த இறைச்சி ஒத்துக்கொள்ளவில்லை.
இந்த இறைச்சி ஒவ்வாமைகள் பொதுவாக A அல்லது O வகை ரத்தம் உள்ளவர்களையே பாதிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதனால்தான் ரத்தக் குழுவுக்கு ஏற்ப உணவுப் பொருட்களை (Blood Type Diet) தேர்வு செய்ய மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
நீங்கள் விரும்பாத இறைச்சியை உண்ணும்போது உங்கள் உடல் பின்வரும் அறிகுறிகளைக் காட்ட வாய்ப்புள்ளது:
படை நோய்
திசுக்களில் வீக்கம்
தலைவலி
வயிற்றில் பிடிப்புகள்
வயிற்றுப்போக்கு
குமட்டல் அல்லது வாந்தி
தும்மல்
மூக்கு ஒழுகுதல் அல்லது அடைத்தல்
கண்களில் கண்ணீர் பெருகுதல்
மூச்சு திணறல்
விரைவான இதய துடிப்பு
மயக்கம்
இறைச்சிக்கான இந்த எதிர்வினைகள் லேசானது முதல் கடுமையானது வரை இருக்கும். இது குறிப்பிட்ட இறைச்சி ஒவ்வாமைக்கான உங்கள் உணர்திறனைப் பொறுத்தது. அறிகுறிகள் வேகமாக அல்லது சில மணிநேரங்களில் உருவாகலாம். அரிதான சந்தர்ப்பங்களில், ஒரு இறைச்சி ஒவ்வாமை அனாபிலாக்ஸிஸ் எனப்படும் உயிருக்கு ஆபத்தான நிலைக்கு வழிவகுக்கும். உடனடியாக சிகிச்சையளிக்கப்படாவிட்டால், இந்த அனாபிலாக்ஸிஸ் மயக்கம், கோமா, அதிர்ச்சி, இதயம் அல்லது சுவாச செயலிழப்பு மற்றும் மரணம் கூட ஏற்படலாம்.
எனவே இனி உங்களுக்கு எந்தவகை அசைவ உணவுகள் ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்பதை அறிந்து வைத்துக் கொண்டு சாப்பிடுவது நல்லது.