தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Masala Powder : இந்த ஒரு மசாலா பொடி மட்டும் அரைச்சு வெச்சுக்கங்க! அனைத்து வகை குழம்பு, பொரியலுக்கும் ஏற்றது!

Masala Powder : இந்த ஒரு மசாலா பொடி மட்டும் அரைச்சு வெச்சுக்கங்க! அனைத்து வகை குழம்பு, பொரியலுக்கும் ஏற்றது!

Priyadarshini R HT Tamil

Jan 14, 2024, 10:00 AM IST

google News
Masala Powder : இந்த ஒரு மசாலா பொடி மட்டும் அரைச்சு வெச்சுக்கங்க! அனைத்து வகை குழம்பு, பொரியலுக்கும் ஏற்றது!
Masala Powder : இந்த ஒரு மசாலா பொடி மட்டும் அரைச்சு வெச்சுக்கங்க! அனைத்து வகை குழம்பு, பொரியலுக்கும் ஏற்றது!

Masala Powder : இந்த ஒரு மசாலா பொடி மட்டும் அரைச்சு வெச்சுக்கங்க! அனைத்து வகை குழம்பு, பொரியலுக்கும் ஏற்றது!

மசாலா அரைக்க தேவையான பொருட்கள்

வர கொத்தமல்லி – ஒரு கிலோ

வர மிளகாய் – 300 கிராம்

மிளகு – 50 கிராம்

சீரகம் – 50 கிராம்

வெந்தயம் – 25 கிராம்

சோம்பு – 50 கிராம்

கடுகு – 100 கிராம்

விரலி மஞ்சள் – 50 கிராம்

பெருங்காயம் – 50 கிராம்

கடலை பருப்பு – 150 கிராம்

துவரம் பருப்பு – 150 கிராம்

செய்முறை

இந்தப்பொருட்கள் அனைத்தையும் சுத்தம் செய்து, சிறிது நேரம் வெயிலில் உலர்த்தி எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஒவ்வொன்றாக வறுத்து தனித்தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும். அரைத்த அனைத்தையும் ஆறவிட்டு, மிஷினில் கொடுத்தோ அல்லது மிக்ஸியில் சேர்த்தோ பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்த ஒரு மசாலாப்பொடி போதும், இதை அனைத்து வகை சைவம், அசைவம், புளிக்குழம்பு என எந்த வகை குழம்புக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம். குழம்பின் சுவையை அதிகரிக்கும்.

எந்த வகை காய்களும் வறுப்பதற்கும் இந்தப்பொடியை பயன்படுத்திக்கொள்ளலாம். வறுவலின் சுவையையும் அதிகரிக்கும்.

நல்ல தரமான பொருட்களை பயன்படுத்தும்போது, பொடி மேலும் சுவை நிறைந்ததாக இருக்கும். எனவே தரமான பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

அதிகம் வேண்டுமெனில் கொடுக்கப்பட்டுள்ள அளவுகளை அப்படியே அதிகரித்துக்கொள்ள வேண்டும்.

இவை வீட்டில் தயாரிக்கப்படுபவை என்பதால், இதில் எவ்வித ப்ரிசர்வேட்டிவ்களும் கலக்கப்படவில்லை. அதனால் இதை 3 முதல் 6 மாதங்கள் வரைதான் வைத்துக்கொள்ள முடியும். எனவே போதிய அளவு மட்டுமே தயாரித்துக்கொள்வது நல்லது.

ப்ரிசர்வேட்டிவ்கள் கலக்கப்படாததால் இவை ஆரோக்கியம் நிறைந்தவை. பேச்சுலர்களுக்கு இவற்றை செய்து பேக் செய்து கொடுத்துவிட்டால் போதும். அவர்கள் எளிதாக குழம்பு வகைகள் மற்றும் காய்கறி வறுவல் செய்து சாப்பிட வசதியாக இருக்கும். எனவே வீட்டைவிட்டு, வெளியே தங்கியிருப்போருக்கு இந்தப்பொடி ஒரு நல்ல தேர்வு. அவர்கள் இதை செய்து வைத்துக்கொள்ளலாம்.

இதில் சேர்க்கப்படும் பொருட்கள் அனைத்தும் உடலுக்கு ஆரோக்கியத்தையும், நோய் எதிர்ப்பாற்றலையும் வழங்குபவை என்பதால், இது உங்கள் உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்குகிறது. வீட்டிலே தயாரிக்கப்படுவதால், உங்கள் ஆரோக்கியம் மேலும் மேம்பட உதவுகிறது.

இந்தப்பொடியை நீங்கள் தினமும் உபயோகிக்கலாம். தினசரி பயன்பாட்டுக்கு உகந்தது.

நீங்கள் அதிகம் செய்தால், அதை ஒரு காற்றுப்புகாத கண்ணாடி பாட்டில் அல்லது எவர்சில்வர் பாத்திரத்தில் அடைத்து வைத்துவிடவேண்டும். அன்றாட உபயோகத்திற்கு ஒரு சிறிய டப்பாவில் எடுத்து வைத்துக்கொண்டு பயன்படுத்துவது. அந்தப்பொடியின் சுவையை மாற்றாமல் இருக்கும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.
அடுத்த செய்தி