தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Evening Snacks: மாலை நேர தேநீருக்கு சிறந்த காம்போவாக இருக்கும் டன் சுவை மிகுந்த அவல் கட்லட்!

Evening Snacks: மாலை நேர தேநீருக்கு சிறந்த காம்போவாக இருக்கும் டன் சுவை மிகுந்த அவல் கட்லட்!

Dec 01, 2023, 05:42 PM IST

google News
காலை, மாலை என இரு வேலையும் உப்புமா, தோசை உள்பட பல்வேறு வகைகளில் சிற்றுண்டியாக உட்கொள்ளப்படும் அவல், உடல் ஆரோக்கியத்தை நன்மை தரும் உணவாக உள்ளது. இந்த அவலுடன் கொஞ்சம் உருளை, பட்டாணி, மசாலக்கள் சேர்த்து அதை கட்லட்டாகவும் ருசிக்கலாம்.
காலை, மாலை என இரு வேலையும் உப்புமா, தோசை உள்பட பல்வேறு வகைகளில் சிற்றுண்டியாக உட்கொள்ளப்படும் அவல், உடல் ஆரோக்கியத்தை நன்மை தரும் உணவாக உள்ளது. இந்த அவலுடன் கொஞ்சம் உருளை, பட்டாணி, மசாலக்கள் சேர்த்து அதை கட்லட்டாகவும் ருசிக்கலாம்.

காலை, மாலை என இரு வேலையும் உப்புமா, தோசை உள்பட பல்வேறு வகைகளில் சிற்றுண்டியாக உட்கொள்ளப்படும் அவல், உடல் ஆரோக்கியத்தை நன்மை தரும் உணவாக உள்ளது. இந்த அவலுடன் கொஞ்சம் உருளை, பட்டாணி, மசாலக்கள் சேர்த்து அதை கட்லட்டாகவும் ருசிக்கலாம்.

இந்திய வகை உணவுகளில் மிகவும் ஆரோக்கியமான சிற்றுண்டி வகையாகவும், ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவாகவும் அவல் உள்ளது. உப்புமா, தோசை, இட்லி என பல வகைகளில் உணவாக சேர்த்துக்கொள்ளப்படும் அவல், கொஞ்சம் வித்தியாசமான முறையில் கட்லட்டாக சமைத்து சாப்பிடுவது எப்படி என்பதை பார்க்கலாம்.

அவல் கட்லட் செய்வதற்கு தேவையான பொருள்கள்

அவல் - 1 கப்

உருளைக்கிழங்கு - 2 (வேக வைத்து மசித்தது)

வெங்காயம் - 2 டேபிள் ஸ்பூன் (பொடிதாக நறுக்கியது)

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டிஸ்பூன்

பட்டாணி - 1/4 கப் (வேக வைத்தது)

கேரட் - 1/4 கப் (துருவியது)

மஞ்சள் பொடி - 1/4 டிஸ்பூன்

கரம் மசாலா பொடி - 1 டிஸ்பூன்

சிவப்பு மிளகாய் பொடி - 1 டிஸ்பூன்

சாட் மசாலா பொடி - 1/4 டிஸ்பூன்

கொத்தமல்லி இலை - 1 டிஸ்பூன் (பொடிதாக நறுக்கியது)

உப்பு - தேவைக்கு ஏற்ப

ஆச்சாரி மாயோ - 1/2 கப்

சோளமாவு - 3 டிஸ்பூன்

தண்ணீர் - தேவைக்கு ஏற்ப

பிரட்தூள்கள் - 1/2 கப்

எண்ணெய் - பொறிப்பதற்கு ஏற்ப

செய்முறை

தண்ணீரல் அவலை ஐந்து நிமிடம் வரை ஊறவைக்க வேண்டும். பின்னர் தண்ணீரை நன்கு வடித்து, டிக்கிக்கு தேவையான அனைத்து பொருள்களையும் பிசைந்து மாவாக்கி, சிறிய உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.

பந்தை உருண்டையாக உருட்டும்போது 1 டிஸ்பூன் ஆச்சாரி மாயோவை நடுவில் சேர்த்து, பந்துபோல் உருட்டவும். இதன் பின்னர் அதை தட்டையாக்கி கட்லெட் போல் மாற்றிக்கொள்ளவும்.

டிக்கிகள் தயார் செய்து அதை தனியாக வைத்துக்கொள்ளவும். சோளமாவை மிக்ஸ் செய்வதற்கு தேவையான அனைத்து பொருள்களையும் சேர்த்து மாவு ஆக்க வேண்டும். பின்னர் தயார் செய்து வைத்த டிக்கிக்களை சோள மாவு மிக்ஸில் நனைத்து, பிரட் தூள்களில் பிரட்டி எடுக்கவும்.

இதனை சூடான எண்ணெய்யில் நன்கு பொறித்து எடுக்கவும். பின்னர் அதில் லேசாக சாட் மசாலா தூவ வேண்டும். இந்த டிக்கிக்கு சைடு டிஷ்ஷாக கொத்தமல்ல சட்னி, ஆச்சாரி மாயோ ஆகியவற்றை சேர்த்துக்கொள்ளலாம்.

நன்மைகள்

அவல் குடலுக்கும், செரிமானத்துக்கு மிகவும் லேசான உணவாக உள்ளது. இதிலுள்ள இரும்புச்சத்து, கார்போஹைட்ரேட் உடல் எடை குறைப்புக்கு பேருவதவியாக உள்ளது. குறைவான கலோரி இருப்பதோடு, ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. இந்த தட்டையான அரிசி சிறந்த புரோபையோடிக்காக உள்ளது. நெல் மணியாக இருக்கும் இவை நன்கு புழுங்கல் செய்யப்பட்டு, சில மணி நேரம் வெயில் உலர்த்திய பிறகு கிடைக்கிறது.

இந்தியாவில் அதிகம் சாப்பிடும் காய்கறி வகைகளில் ஒன்றாக உருளைக்கிழங்கு உள்ளது. இதில் உள்ள அதிகப்படியான ஆன்டிஆக்சிடன்ட்கள் நோய்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்கிறது. அதுமட்டுமில்லாமல் வைட்டமின்கள், தாதுக்கள் அதிகமாக இருப்பதால், உடல் சரியாக செயல்பட உதவுகிறது. நார்ச்சத்துக்கு சிறந்த ஆதாரமாக உருளை இருப்பதால் நீண்ட நேரம் வயிறு முழுமையாக இருக்கும் உணர்வை ஏற்படுத்துகிறது.

பச்சை பட்டாணி செரிமான ஆரோக்கியத்துக்கு சிறந்ததாக உள்ளது. இதுமட்டுமில்லாமல் கண் ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு திறனை அதிகரிப்பது போன்ற நன்மைகளை தருகிறது. இதில் புரதம், வைட்டமின் ஏ, பி, சி, ஈ, பொட்டாசியம், துத்தநாகம், நார்ச்சத்து, மற்ற ஆன்டிஆக்சிடன்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது. வீக்கத்தை குறைத்து, நீரழிவு, இதய நோய், கீல்வாதம் உள்பட நாள்பட்ட நோய் பாதிப்புகளை குறைக்கிறது.

கண்களுக்கு ஆரோக்கியத்துக்கு நன்மை தரும் உணவாக கேரட் உள்ளது. சூரிய கதிர்கள், கண்புரை பாதிப்பு, கண்கள் தொடர்பான பிரச்னைகள் ஏதும் ஏற்படாமல் பார்த்துக்கொள்கிறது. கேரட்டில் கரோடீன், வைட்டமின் கே1, பொட்டாசியம், ஆன்டிஆக்சிடன்ட்கள் உள்பட அதிகப்படியான ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. கேரட் எடை குறைப்புக்கு உதவுவதுடன், கொலஸ்ட்ராஸ் அளவை குறைக்கிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.
அடுத்த செய்தி