தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Pongal Special: இந்த பொங்கலுக்கு சர்க்கரை பொங்கலோடு இந்த ரவை பொங்கலை டிரை செய்து பாருங்க!

Pongal Special: இந்த பொங்கலுக்கு சர்க்கரை பொங்கலோடு இந்த ரவை பொங்கலை டிரை செய்து பாருங்க!

Jan 11, 2024, 10:30 AM IST

google News
ரவா பொங்கல் தேங்காய் சட்னியுடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும். இப்படி ஒரு பொங்கல் செய்து குடுத்தால் உங்கள் வீட்டில் சிறியவர்கள் முதல் பெரியவர்களை வரை விரும்பி சாப்பிடுவார்கள்.
ரவா பொங்கல் தேங்காய் சட்னியுடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும். இப்படி ஒரு பொங்கல் செய்து குடுத்தால் உங்கள் வீட்டில் சிறியவர்கள் முதல் பெரியவர்களை வரை விரும்பி சாப்பிடுவார்கள்.

ரவா பொங்கல் தேங்காய் சட்னியுடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும். இப்படி ஒரு பொங்கல் செய்து குடுத்தால் உங்கள் வீட்டில் சிறியவர்கள் முதல் பெரியவர்களை வரை விரும்பி சாப்பிடுவார்கள்.

ரவை பொங்கல் இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க ருசி அருமையாக இருக்கும்.

தேவையான பொருட்கள்

ரவை

பாசிப்பருப்பு

முந்திரி பருப்பு

நெய்

மிளகு

சீரகம்

இஞ்சி

கறிவேப்பிலை

பெருங்காயம்

உப்பு

செய்முறை

100 கிராம் பாசிப்பருப்பை 300 மில்லி லிட்டர் தண்ணீர் சேர்த்து குக்கரில் வேக வைக்க வேண்டும். ஒரு 5 விசில் விட்டு எடுத்து கொள்ள வேண்டும். வெந்த பருப்பை நன்றாக மசித்து வைத்து கொள்ள வேண்டும். 

அரைக்கிலோ ரவை எடுத்து கொள்ள வேண்டும். ஒரு கடாயில் 50 மில்லி லிட்டர் நெய்யை சேர்த்து கொள்ள வேண்டும். நெய் சூடான பிறகு அதில் ஒரு கைபிடி முந்திரி பருப்பை நன்றாக வறுக்க வேண்டும். அதில் 2 ஸ்பூன் மிளகு மற்றும் 1 ஸ்பூன் சீரகம் சேர்த்து கொள்ள வேண்டும். மிளகு பொரிய ஆரம்பிக்கும் போது பொடியாக நறுக்கி வைத்த இஞ்சியை 2 ஸ்பூன் அளவு சேர்த்து கொள்ள வேண்டும். பின் அதில் ஒரு கொத்து கறிவேப்பிலையை சேர்த்து கொள்ள வேண்டும்.

பின்னர் அடுப்பை மிதமான தீயில் வைத்து அரைக்கிலோ ரவையை சேர்த்து லேசாக வறுக்க வேண்டும். ரவை வறுத்து மணம் வர ஆரம்பிக்கும். அப்போது அதில் ஏற்கனவே வேகவைத்து எடுத்து வைத்த பாசிப்பருப்பை சேர்க்க வேண்டும். இதில் தேவையான அளவு உப்பை சேர்த்து கொள்ள வேண்டும். மேலும் ஒரு ஸ்பூன் பெருங்காய பவுடரை சேர்த்து கொள்ள வேண்டும்.

பின்னர் அதில் ஒரு லிட்டருக்கு கொஞ்சம் அதிகமாக தண்ணீரை சூடாக்கி சேர்த்து கொள்ள வேண்டும். பருப்பு வேக வைத்த தண்ணீர் இருந்தாலும் சேர்த்து கொள்ளலாம்.

பின்னர் இந்த தண்ணீரில் ரவை நன்றாக வெந்து வரும் வரை காத்திருக்க வேண்டும். ரவையும் தண்ணீரும் பின்னி வரும் போது அடுப்பை குறைவான தீயில் வைத்து ஒரு 50 மில்லி நெய் சேர்த்து கிளறி விட வேண்டும். அவ்வளவு தான் ருசியான ரவா பொங்கல் ரெடி.

இந்த பொங்கல் தேங்காய் சட்னியுடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும். இப்படி ஒரு பொங்கல் செய்து குடுத்தால் உங்கள் வீட்டில் சிறியவர்கள் முதல் பெரியவர்களை வரை விரும்பி சாப்பிடுவார்கள்.

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.
அடுத்த செய்தி