Cauliflower Gravy: தனி ருசியில் காலிபிளவர் கிரேவி.. எப்படி செய்யணும் பார்க்கலாம் வாங்க
Oct 21, 2023, 06:00 AM IST
காலி பிளவர் என்றாலே சில்லி அல்லது சாம்பாரில் சேர்ப்பதுதான் அதிகம். ஆனால் மிகவும் ருசியான காலிபிளவர் கிரேவியை எப்படி செய்யலாம் என பார்க்கலாம்.
காலி பிளவர் என்றாலே சில்லி அல்லது சாம்பாரில் சேர்ப்பதுதான் அதிகம். ஆனால் மிகவும் ருசியான காலிபிளவர் கிரேவியை எப்படி செய்யலாம் என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
காலிபிளவர்
மஞ்சள்தூள்
மிளகாய் தூள்
மல்லித்தூள்
கரம் மசாலா தூள்
உப்பு
எண்ணெய்
சோம்பு
பட்டை
கிராம்பு
பிரியாணி இலை
ஏலக்காய்
கடுகு
உளுத்தம் பருப்பு
வெங்காயம்
தக்காளி
இஞ்சி
பூண்டு
தேங்காய்
கசகசா
முந்திரி பருப்பு
சின்ன வெங்காயம்
உப்பு
கறிவேப்பிலை
கொத்தமல்லி
செய்முறை
காலிபிளவரை சுத்தம் செய்து அதை குட்டி குட்டியாக வெட்டி கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் அதில் காலிபிளவரை போட்டு அதில் கொஞ்சமாக மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும். பின்னர் அடுப்பை அணைத்து விட்டு 10 நிமிடம் மூடி வைக்க வேண்டும். பின்னர் நீரை வடித்து காலிபிளவரை தனியாக எடுத்து கொள்ள வேண்டும்.
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் 2 பத்தை தேங்காய், ஒரு ஸ்பூன் சோம்பு, ஒரு ஸ்பூன் கசகசா மற்றும் 5 முந்திரி, 10 சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக அரைக்க வேண்டும். இந்த பேஸ்ட்டை மைய அரைத்து எடுத்து கொள்ள வேண்டும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு அதில் இரண்டு துண்டு பட்டை, 3 கிராம்பு, 2 ஏலக்காய், ஒரு ஸ்பூன் சோம்பு சேர்த்து நன்றாக பொரிய விட வேண்டும். அதில் ஒரு ஸ்பூன் கடுகு உளுத்தம்பருப்பையும் சேர்த்து பொரிய விட வேண்டும்.
அதில் 2 பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் நன்றாக சிவந்து வரும் போது அதில் இரண்டு ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து வதக்க வேண்டும். அதில் இரண்டு கொத்து கறிவேப்பிலையையும் சேர்த்து கொள்ள வேண்டும்.
இஞ்சி பூண்டு பச்சை வாடை போன பிறகு இரண்டு தக்காளி நறுக்கி சேர்த்து கலந்து விட வேண்டும். தக்காளி நன்றாக வதங்கிய பின் அதில் காலி பிளவரை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். அதில் ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், இரண்டு ஸ்பூன் மல்லித்தூள், ஒரு ஸ்பூன் கரம் மசாலா சேர்த்து கலந்து விட வேண்டும். பின்னர் நன்றாக அரைத்த தேங்காய் பேஸ்ட்டை சேர்த்து கொள்ள வேண்டும். கிரேவி நன்றாக கொதிக்க வைத்து கொள்ள வேண்டும்.
குழம்பு கெட்டியாக வரும் போது அதில் மல்லி இலையை தூவி இறக்கி விடலாம். அவ்வளவு கமகமன்னு மணக்கும் காலி பிளவர் கிரேவி ரெடி.
சூடான சாதம், சப்பாத்தி , தோசைக்கு சரியான காமினேஷன். இந்த கிரேவியை நன்றாக வற்ற வைத்து கூட்டு போல் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். சூடான சாத்தில் ரசம் சேத்த்து இந்த காலிபிளவர் கூட்டுடன் சாப்பிடுவதும் மிகவும் ருசியாக இருக்கும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்