தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Kerala Chammanthi : மாதம்பட்டி ரங்கராஜ் ரெசிபி! கேரளா ஸ்பெஷல் தேங்காய் – மாங்காய் சம்மந்தி செய்வது எப்படி?

Kerala Chammanthi : மாதம்பட்டி ரங்கராஜ் ரெசிபி! கேரளா ஸ்பெஷல் தேங்காய் – மாங்காய் சம்மந்தி செய்வது எப்படி?

Priyadarshini R HT Tamil

Jun 07, 2024, 02:32 PM IST

google News
Kerala Chammanthi : மாதம்பட்டி ரங்கராஜ் செய்முறையில் கேரளா ஸ்பெஷல் தேங்காய் மற்றும் மாங்காய் சம்மந்தி செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
Kerala Chammanthi : மாதம்பட்டி ரங்கராஜ் செய்முறையில் கேரளா ஸ்பெஷல் தேங்காய் மற்றும் மாங்காய் சம்மந்தி செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

Kerala Chammanthi : மாதம்பட்டி ரங்கராஜ் செய்முறையில் கேரளா ஸ்பெஷல் தேங்காய் மற்றும் மாங்காய் சம்மந்தி செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

கேரளாவில் இது பரவலாக இட்லி, தோசைக்கு பரிமாறப்படும் உணவு ஆகும். இதை செய்வதற்கு தேங்காய் மற்றும் மாங்காய் இரண்டும் முக்கிய பொருட்களாக உள்ளது.

இந்த சம்மந்தியை இட்லி, தோசை, சாதம் என அனைத்துக்கும் நல்ல சைட்டிஷ் ஆகும்.

தேவையான பொருட்கள்

மாங்காய் – கால் கப்

தேங்காய் துருவல் – கால் கப்

தேங்காய் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

பெரிய வெங்காயம் – 1

இஞ்சி – ஒரு இன்ச்

பூண்டு – 5 பல்

பச்சை மிளகாய் – 4

மல்லித்தழை – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

கடலை – 2 ஸ்பூன்

தாளிக்க தேவையான பொருட்கள்

தேங்காய் எண்ணெய் – 2 ஸ்பூன்

கடுகு – அரை ஸ்பூன்

உளுந்து – அரை ஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

செய்முறை

மாங்காயை பொடியாக நறுக்கிக்கொள்ளவேண்டும்.

கடாயில் இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து அதில் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், மல்லித்தழை என அனைத்தும் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளவேண்டும்.

கடலையை வறுத்து எடுத்துக்கொள்ளவேண்டும்.

அனைத்தும் ஆறியவுடன், தேங்காய், மாங்காய், வறுத்து ஆறவைத்த பொருட்கள், கடலை மற்றும் உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவேண்டும்.

இதை நைசாக அரைத்துவிடக்கூடாது. சுவை நன்றாக இருக்காது. கடாயில் எண்ணெய் சூடாக்கி, அதில் கடுகு, உளுந்து மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அரைத்த சம்மந்தியில் சேர்க்கவேண்டும்.

சூப்பர் சுவையில் தேங்காய் சம்மந்தி தயார். இது கேரளாவில் பரவலாக செய்யப்படுகிறது. குறிப்பாக மாங்காய் சீசனில் இதை அதிகம் செய்வார்கள்.

இதை இட்லி, தோசை மற்றும் சாதம் என எதற்கு வேண்டுமானாலும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். சுவை நன்றாக இருக்கும்.

குறிப்புகள்

சம்மந்தி செய்வதற்கு மீடியம் புளிப்புள்ள மாங்காய்தான் எடுக்கவேண்டும். அதிக புளிப்பாக இருந்தால் சுவை வித்யாசமாகிவிடும். சிலருக்கு பிடிக்காது.

தேங்காயும் ரொம்ப இளந்தேங்காயாக இருக்கக்கூடாது. கொஞ்சம் முற்றியதாக இருக்கவேண்டும். அப்போதுதான் சம்மந்தி சுவையாக இருக்கும்.

பெரிய வெங்காயத்துக்குப்பதில் சின்ன வெங்காயமும் சேர்த்துக்கொள்ளலாம்.

தேங்காய், மாங்காய், சின்ன வெங்காயம் மட்டுமே சேர்த்தும் இதை மிக எளிமையாக செய்துகொள்ளலாம்.

கேரளாவில் பரிமாறப்படும் ஓண சத்யாவில் இந்த ரெசிபியில் இதுவும் கட்டாயம் இடம்பெறும்.

சம்மந்தி பொடியும் கேரளாவில் பிரபலம். அது கேரள மட்டை அரிசி சாதத்துடன் பரிமாறப்படும்.

சம்மந்திக்கு பச்சை மிளகாய்க்கு பதில் சிவப்பு மிளகாயையும் பயன்படுத்தலாம். தாளிக்கும்போது தேவைப்பட்டால் இரண்டு குண்டு மிளகாய்களும் சேர்த்துக்கொள்ளலாம்.

மாங்காயின் நன்மைகள்

உடல் எடையை குறைக்க மாங்காய் உதவும். அசிடிட்டி பிரச்னையை தீர்க்க உதவும். கர்ப்பிணிகளுக்கு, புளிப்பு சுவையை சாப்பிட சிலருக்கு தோன்றும். அப்போது மாங்காயை சாப்பிடலாம். அது அவர்களுக்கு கர்ப்பகாலத்தில் காலை நேரத்தில் ஏற்படும் சோர்வை தடுக்க உதவும்.

மாங்காயை சாப்பிடும்போது, அது உடலுக்கு ஆற்றலை அளிக்கிறது. இதனால் மாங்காயை மதிய உணவுக்குப்பின்னர் எடுத்துக்கொண்டால் அது உடலுக்கு ஆற்றலை வழங்கி, தூங்கி விழுவதிலிருந்து தப்பிக்க வைக்கும். மாங்காய் பித்தத்தை அதிகம் சுரக்கச்செய்கிறது.

இதனால், கல்லீரலுக்கு மாங்காய் நன்மை தரும் உணவு. குடலில் உள்ள தொற்றுகளை குணப்படுத்தவும் மாங்காய் உதவுகிறது. குடலை சுத்தம் செய்கிறது. மாங்காய் வெயில் காலத்தில்தான் அதிகம் கிடைக்கும்.

மாங்காயை அப்போது எடுத்துக்கொள்வது வெயிலால் ஏற்படும் வியர்குரு வராமல் தடுப்பதுடன், வெயிலால் ஏற்படும் அபாயங்களில் இருந்தும் நம்மை காக்கிறது. மாங்காயில் உள்ள வைட்டமின் சி ரத்த நாளங்களின் நீட்சித்தன்மையை அதிகரிக்கிறது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி