தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Mango Thokku : நாக்கில் எச்சில் ஊறவைக்கும் மாங்காய் தொக்கு.. இதோ இப்படி செய்து பாருங்க.. சுவையா இருக்கும்!

Mango Thokku : நாக்கில் எச்சில் ஊறவைக்கும் மாங்காய் தொக்கு.. இதோ இப்படி செய்து பாருங்க.. சுவையா இருக்கும்!

Divya Sekar HT Tamil
Jun 06, 2024 04:57 PM IST

Mango Thokku : மாங்காய் சீசனில் மாங்காய் தொக்கு இல்லை என்றால் எப்படி? பத்து நிமிடத்தில் சுவையான மாங்காய் தொக்கு செய்வது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

நாக்கில் எச்சில் ஊறவைக்கும் மாங்காய் தொக்கு.. இதோ இப்படி செய்து பாருங்க.. சுவையா இருக்கும்!
நாக்கில் எச்சில் ஊறவைக்கும் மாங்காய் தொக்கு.. இதோ இப்படி செய்து பாருங்க.. சுவையா இருக்கும்!

ட்ரெண்டிங் செய்திகள்

1 ஸ்பூன் கடுகு, 

கால் ஸ்பூன் வெந்தயம்

2 ஸ்பூன் நல்லெண்ணெய்

4 காய்ந்த மிளகாய்

2 கொத்து கருவேப்பிலை

2 ஸ்பூன் மிளகாய்த்தூள்

 அரை ஸ்பூன் மஞ்சள் தூள்

 1/2 ஸ்பூன் உப்பு

சோம்புத்தூள்

அரை ஸ்பூன் வெல்லம்

செய்முறை

மாங்காய் தொக்கு  செய்வது எப்படி என்பது குறித்து பார்க்கலாம் மாங்காய் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் குறிப்பாக இந்த கோடைகாலத்தில் தொக்கு நமக்கு சுலபமாக கிடைக்கும் இந்த மாங்காயில் ஊறுகாய் சுவையாக செய்யலாம் புளிப்பு குறைவாக உள்ள மாங்காய் இருந்தால் தொக்கு இன்னும் சுவையாக இருக்கும்.

மாங்காய் சீசனில் மாங்காய் தொக்கு இல்லை என்றால் எப்படி பத்து நிமிடத்தில் சுவையான மாங்காய் தொக்கு செய்வது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

புளிப்பில்லாத மாங்காயை எடுத்துக் கொள்ளுங்கள் அதை தோல் சீவி கேரட் துருவல் போல மாங்காயை துருவிக் கொள்ளவும். புளிப்பு இல்லாத மாங்காயாய் இருந்தால் உப்பு காரம் நாம் குறைவாக சேர்த்தாலே போதும் எனவே புளிப்பு இல்லாத மாங்காயை எடுத்து ஊறுகாய் செய்வது சிறந்தது.

முதலில் ஒரு கடையை எடுத்துக் கொள்ளுங்கள் அதில் ஒரு ஸ்பூன் கடுகு, கால் ஸ்பூன் வெந்தயம் சேர்த்து வறுத்துக்கொள்ளுங்கள். அதனை ஒரு மிக்ஸியில் சேர்த்து தூளாக அரைத்துக் கொள்ளுங்கள். கடுகு பொரியும் வரை வறுத்து எடுத்து அரைக்க வேண்டும்.

ரெண்டு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய், ஒரு ஸ்பூன் கடுகு, 4 காய்ந்த மிளகாய், ரெண்டு கொத்து கருவேப்பிலை, துருவின மாங்காய் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.

 பின்னர் அதில் 2 ஸ்பூன் மிளகாய்த்தூள், அரை ஸ்பூன் மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன் உப்பு சேர்த்து நன்கு கிளரிக் கொள்ளவும் 10 நிமிடம் அடுப்பை சிம்மில் வைத்துக் கொள்ளுங்கள். தண்ணீர் சேர்க்க வேண்டாம் இடையிடையே கிளறி விடவும். என்னை பிரிந்து மாங்காய் நன்கு தொக்கு போல வந்துவிடும். இப்போது நீங்கள் பொடி பண்ணி வைத்த கடுகு சோம்புத்தூளை இதில் சேர்த்து கிளறி விடவும்.

 பின்னர் அரை ஸ்பூன் வெல்லம் சேர்த்து நன்கு கிளறி விடவும் என்னை நன்கு பிரிந்ததும் அடுப்பை அணைத்து விடுங்கள். இப்போது சுவையான மாங்காய் தொக்கு ரெடி. இதனை நீங்கள் ஒரு வாரம் வைத்து சாப்பிடலாம். என்னை அதிகமாக ஊற்றி சமைத்தால் ஒரு மாதம் கூட வைத்து சாப்பிடலாம்.

மாங்காயின் நன்மைகள்

மாங்காய் என்றாலே பலருக்கு அப்படியே சாப்பிட பிடிக்கும். பலர் மாங்காயுடன் மிளகாய் பொடி உப்பு கலந்து சாப்பிட விரும்புவர். மாங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன பாருங்கள்.

மாங்காய் ஹீட் ஸ்ட்ரோக்கின் அறிகுறிகளைக் குறைக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

மாம்பழத்தை விட மாங்காய் சர்க்கரை அளவு குறைவு. எனவே நீரிழிவு நோயாளிகள் மாம்பழம் பதிலாக மாங்காய் சாப்பிட்டால் சுவையை அனுபவிக்க முடியும்.

மாங்காய்யில் மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் உள்ளது. இவை இரண்டும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். இது இதயத்துக்கு நல்லது. எனவே இதய நோயாளிகள் இதை சாப்பிடலாம்.

மாங்காய் சாப்பிடுவதால் கொலஸ்ட்ரால் கட்டுக்கும் அடங்கும். மாங்காய் அளவோடு சாப்பிட வேண்டும். அதேசமயம் அதிகமாக சாப்பிடுவது உடல் நலத்திற்கு நல்லதல்ல.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்