Kambu laddu: குழந்தைகளும் விரும்பும் குண்டு குண்டு கம்பு லட்டு!
Aug 02, 2023, 11:27 AM IST
நன்றாக ஆறிய பிறகு ஒரு டப்பாவிற்கு மாற்றி வைத்து விட்டால் ஒரு வாரம் ஆனாலும் கெட்டுப்போகாது.
கம்பு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் உடல் நலத்திற்கும் மிகவும் நல்லது. கம்பை அடிக்கடி உணவில் சேர்த்துகொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆனால் உங்கள் வீட்டு குழந்தைகள் கம்பை வெறுக்கிறார்களா. அப்படியானால் இப்படி ஒரு லட்டு செய்து கொடுத்து பொருங்கள்
தேவையான பொருட்கள்
கம்பு
பாசிப்பருப்பு
அரிசி
நிலக்கடலை
வெல்லம்
ஏலக்காய்
நெய்
தேங்காய்
முந்திரி
செய்முறை
முதலில் கம்பை நன்றாக கழுவி எடுத்து அடி கனமான பாத்திரத்தில் கம்பை சேர்த்து நன்றாக பொரிய விட வேண்டும். கம்பு நன்றாக வெடிக்க ஆரம்பிக்கும் போது ஒரு பாத்திரத்தில் கொட்டி ஆற விட வேண்டும். பின்னர் அரிசி, பாசிப்பருப்பு நிலக்கடலை ஆகியவற்றை தனித்தனியாக நன்றாக வறுத்து ஆற விட வேண்டும்.
இந்தநிலையில் வெல்லத்தை லேசாக பாகு காய்ச்சி வடித்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். நன்றாக ஆறிய கம்பு, பாசிப்பருப்பு நிலக்கடலை, அரிசி, ஏலக்காய் ஆகியவற்றை மிக்சியில் நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும் அரைத்த மாவுடன் வெல்லப்பாகை சேர்த்து கை பொறுக்கும் சூட்டோடு இருக்கும் போதே நன்றாக உருட்டி எடுத்து வைக்க வேண்டும்.
விருப்பம் உடையவர்கள் ஒரு ஸ்பூன் நெய்யில் தேங்காய் துருவலை நன்றாக வதக்கி இந்த கலவையுடன் சேர்த்து உருண்டை பிடித்து கொள்ளலாம். முந்திரிப்பருப்பு அவரவர் விருப்பம் தான். நன்றாக ஆறிய பிறகு ஒரு டப்பாவிற்கு மாற்றி வைத்து விட்டால் ஒரு வாரம் ஆனாலும் கெட்டுப்போகாது. அதற்கும் அதிகமாக வைத்திருக்க விரும்புவோர் பிரிட்ஜில் வைத்துக்கொள்ள வேண்டும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்