தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  மண்ணே தேவையில்லை, தண்ணீரிலே வளரந்துவிடும்! வீட்டின் அழகை அதிகரிக்க உதவும் செடிகள் இவைதான்!

மண்ணே தேவையில்லை, தண்ணீரிலே வளரந்துவிடும்! வீட்டின் அழகை அதிகரிக்க உதவும் செடிகள் இவைதான்!

Priyadarshini R HT Tamil

Oct 08, 2024, 07:00 AM IST

google News
மண்ணே தேவையில்லை, தண்ணீரிலே வளரந்துவிடும். வீட்டின் அழகை அதிகரிக்க உதவும் செடிகள் இவைதான். வீட்டில் வளர்த்து அழகை அதிகரிக்கச் செய்யுங்கள்.
மண்ணே தேவையில்லை, தண்ணீரிலே வளரந்துவிடும். வீட்டின் அழகை அதிகரிக்க உதவும் செடிகள் இவைதான். வீட்டில் வளர்த்து அழகை அதிகரிக்கச் செய்யுங்கள்.

மண்ணே தேவையில்லை, தண்ணீரிலே வளரந்துவிடும். வீட்டின் அழகை அதிகரிக்க உதவும் செடிகள் இவைதான். வீட்டில் வளர்த்து அழகை அதிகரிக்கச் செய்யுங்கள்.

இந்த செடிகளை வளர்ப்பதற்கு மண்ணே தேவையில்லை. இது தண்ணீரிலே வளர்ந்துவிடும் உங்கள் வீட்டின் அழகையும் அதிகரிக்கச் செய்யும். இந்த தாவரங்களை நீங்கள் சரியான மண்ணுடன் உரங்கள், ஆர்கானிக் உரங்கள் என முறையாக கலந்துகொள்ள வேண்டும். அதில்தான் நீங்கள் தாவரங்களை வளர்க்கவேண்டும். தாவரங்கள் வளர்வதற்கு அடிப்படை என்றால் அது மண்தான். ஆனால் நீங்கள் மண் இல்லாமல் தண்ணீரில் மட்டுமே வைத்து சில செடிகளை வீட்டில் வளர்க்க முடியும். அது வீட்டுக்கு அழகையும் தரும். அந்த செடிகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். அவற்றுக்கு வெறும் தண்ணீர் மட்டும் கொடுத்து அவற்றின் அழகை அதிகரியுங்கள்.

பொத்தோஸ்

பொத்தோஸ் செடிகளை நீங்கள் தண்ணீர் மட்டுமே வைத்து எளிதாக வளர்த்துவிட முடியும். இதற்கு மண் மற்றும் சகதி என எதுவும் தேவையில்லை. ஆனால் அது நன்றாக வளரும். நல்ல ஆரோக்கியமான பொத்தோஸ் செடியை நீங்கள் பாட்டில் அல்லது ஒரு தொட்டியில் தண்ணீர் நிரப்பி அதை வைத்தால் போதும். அது சரசரவென வளர்ந்துவிடும். மொத்தமாக தண்ணீரில் மூழ்கும்படி வைத்தால் அழுகிவிடும். அது குறிப்பிட்ட அளவு மட்டுமே மூழ்க வேண்டும். சிறிது வெளியே நீட்டிக்கொண்டு இருக்கவேண்டும்.

பாம்புச் செடி

பாம்புச் செடியை நீங்கள் வீட்டில் வைத்து வளர்ப்பது எளிது. இது வீடுகளில் அழகுக்காக வளர்க்கப்படும் ஒன்றாகும். இதன் இலைகளை நீங்கள் வெட்டி தண்ணீரில் வைத்தால் போதும். வேர்ப்பகுதியில் உள்ள தாவரத்தை வெட்டி, முக்கோண வடிவாக்கி, ஒரு பாட்டிலில் தண்ணீர் நிரப்பி அதில் வைத்தால் போதும். அடிப்பகுதி மட்டும் தண்ணீரில் மூழ்கியிருக்கவேண்டும். வேர்களும், தாவரமும் கடகடவென வளர்ந்துவரும்.

புதினா

புதினாவையும் நீங்கள் தண்ணீரிலே வளர்த்துவிட முடியும். ஒரு புதினாவின் ஃபிரஷ் தண்டை எடுத்துக்கொள்ளுங்கள். அதை நீங்கள் ஒரு தண்ணீர் நிறைந்த பாட்டில் அல்லது டம்ளரில் வைத்து விடுங்கள். அதன் இலைகள் மட்டும் தண்ணீருக்கு மேல் இருக்கட்டும். 4 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீரை மாற்றுங்கள். விரைவில் புதிய வேர்கள் விட்டு செடிகள் முளைக்கத் துவங்குவதை நீங்கள் காணலாம்.

கோலியஸ்

கோலியஸ் செடியின் இலைகள் பிங்க், பசுமை மற்றும் பர்பிள், பிரவுன் என பல வண்ணங்கள் கலந்து பார்ப்பவர்கள் கண்களை கவரும் வகையில் இருக்கும். இந்தச் செடியையும் நீங்கள் தண்ணீரில் வைத்தே வளர்த்துவிடலாம். இந்தச் செடியை தண்டுடன் வெட்டியெடுத்து, அதில் உள்ள கூடுதல் இலைகளையும் வெட்டிவிட்டு, தண்டை தேனில் நனைத்து பாட்டில் உள்ள தண்ணீரில் வைத்தால் அது உங்களுக்கு செடிகள் வளர உதவும்.

அதிர்ஷ்ட மூங்கில்

அதிர்ஷ்ட மூங்கிலையும் நீங்கள் தண்ணீரிலே வளர்த்துவிட முடியும். மூங்கில் தண்டுகளை நீங்கள் ஒரு பவுலில் வைக்கவேண்டும். அது நன்றாக செழித்து வளர வகை செய்ய வேண்டும். தண்ணீர் ஊற்றி அதில் பாதியளவு மூழ்கும் வரை செடியை வைக்க வேண்டும். சூரிய ஒளியில் இந்த தொட்டிகளை இரண்டு மணி நேரம் வைக்கவேண்டும். தினமும் அல்லது வாரத்துக்கு ஒருமுறை தண்ணீரை மாற்ற வேண்டும்.

ஸ்பைடர் ப்ளான்ட்

ஸ்பைடர் தாவரம், கூம்பு போல் இலைகளைக் கொண்டது. இது தரையில் தவழும் வகையில் வளரக்கூடியது. இதை நீங்கள் வீட்டுக்குள் வைத்தால், வீட்டின் அழகு அதிகரிக்கும். இதை நீங்கள் மண் இல்லாமல் வளர்க்க முடியும். ஒரு சிறிய செடியில் இருந்து ஒரு துண்டை வெட்டவேண்டும். அதன் வேர்களை நீங்கள் தண்ணீரில் மூழ்கும்படி வைத்துக்கொள்ளவேண்டும். தண்ணீரில் கரையக்கூடிய உரங்களை இதற்கு இடவேண்டும். இது தாவரத்தின் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

ரோஸ்மேரி

ரோஸ்மேரி செடியை நீங்கள் வீட்டிலே வளர்க்க முடியும். அதையும் தண்ணீரிலே வளர்த்துவிட முடியும். ஒரு சிறிய துண்டு ரோஸ்மேரி செடியை வெட்டிக்கொள்ளவேண்டும். அதில் ஆரோக்கியமான இலைகள் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். அதன் தண்டுகள் பாதியளவு மூழ்கும்படி வேஸ் அல்லது பாட்டிலில் வைத்துக்கொள்ளவேண்டும். அதை தினமும் ஒரு மணி நேரத்துக்கு மேல் சூரியஒளியில் காட்டவேண்டும்.

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி