தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Ht Tour Special : தென்னிந்தியாவின் சிரபுஞ்சி எது தெரியுமா? மழையோடு இயற்கையில் கரைந்திட வேண்டுமா? அப்போ கிளமபுங்க!

HT Tour Special : தென்னிந்தியாவின் சிரபுஞ்சி எது தெரியுமா? மழையோடு இயற்கையில் கரைந்திட வேண்டுமா? அப்போ கிளமபுங்க!

Priyadarshini R HT Tamil

Jan 08, 2024, 03:55 PM IST

google News
Karnataka Tour : அகும்பேவில் இருந்து 40 கி.மீட்டர் தொலைவில் உள்ளது. உடுப்பி செல்லும் வழியில் சீதா நதியின் கரையில் உள்ளது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி செல்லலாம். அங்கு செல்வதற்கு முன்னரும் அனுமதி வேண்டும். கர்நாடக வனத்துறையின் அனுமதி பெற்ற செல்ல முடியும்.
Karnataka Tour : அகும்பேவில் இருந்து 40 கி.மீட்டர் தொலைவில் உள்ளது. உடுப்பி செல்லும் வழியில் சீதா நதியின் கரையில் உள்ளது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி செல்லலாம். அங்கு செல்வதற்கு முன்னரும் அனுமதி வேண்டும். கர்நாடக வனத்துறையின் அனுமதி பெற்ற செல்ல முடியும்.

Karnataka Tour : அகும்பேவில் இருந்து 40 கி.மீட்டர் தொலைவில் உள்ளது. உடுப்பி செல்லும் வழியில் சீதா நதியின் கரையில் உள்ளது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி செல்லலாம். அங்கு செல்வதற்கு முன்னரும் அனுமதி வேண்டும். கர்நாடக வனத்துறையின் அனுமதி பெற்ற செல்ல முடியும்.

அகும்பே, கர்நாடகவின் மல்நாட் பகுதியில் உள்ளது. இது தென்னிந்தியாவின் சிரபுஞ்சி என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் இங்கு ஆண்டுக்கு 7,000 மி.மீட்டர் மழை ஆண்டுதோறும் பெறப்படுகிறது. இந்த இடம் கர்நாடகாவின் ஷிமோகா மாட்டத்தில் உள்ளது. இதற்கு மங்களூர், உடுப்பு மற்றும் ஷிமோகாவில் இருந்து எளிதாக செல்ல முடியும். இயற்கையோடு கரைந்திட விரும்புவோருக்கு அகும்பே ஒரு சிறந்த இடம். இது ஒரு சிறிய மலைவாசஸ்தலம்தான் இங்கு எப்போதும் வானிலை இதமாக இருக்கும்.

அகும்பே மலைத்தொடர்களில் கார் ஓட்டுவது உங்களை மூர்ச்சையடையச் செய்யும். பெரிய பேருந்துகள் மற்றும் டிரக்குகள் செல்ல இந்த மலைப்பகுதியில் அனுமதியில்லை. இங்கு ஜீன் முதல் ஜனவரி மாதத்தில் நீங்கள் சுற்றுலா சென்றால் வானிலை இதமாக இருக்கும். ஹனிமூன் தம்பதிகளுக்கு மிகவுமே சிறப்பு வாய்ந்த தேன்நிலவு அனுபவத்தை கொடுக்கும்.

இங்கு செல்லும்போது அருகில் நீங்கள் பார்க்க வேண்டிய இடங்கள்!

அகும்பே மலைப்பகுதி – வியூ பாயின்ட்

ஜோகி குண்டி அருவி

ஒனாக்கே அபி அருவி

சோமேஸ்வரா வன உயிரியல் பூங்கா

அகும்பே மழைக்காடுகள் ஆராய்ச்சி மையம்

குந்தாதிரி மலைகள்

கூட்லு தீர்த்தா அருவி

வழிகள்

பெங்களூரூ – ஷிமோகா – திர்தல்லி – அகும்பே

மங்களூர் – உடுப்பி – மணிப்பால் – ஹெப்ரி – அகும்பே என இவ்வழிகளில் அகும்பேவை அடைய முடியும்.

தங்குமிடம்

அகும்பேவில் வீட்டில் தங்கும் வாய்ப்புகள் உள்ளது. சில இடங்களுக்குச் செல்வதற்கு வனத்துறையின் அனுமதி வேண்டும். எனவே அருவிகளுக்கு செல்வதற்கு முன் உள்ளூர் மக்களின் உதவியை பெறுவது சிறந்தது.

சூரியன் மறையும் வ்யூ பாயின்ட்

முக்கிய நகரில் இருந்து சில கி.மீட்டர்கள் பயணத்தில் வ்யூ பாயின்ட் சென்றுவிடலாம். அங்கு மெய்சிலிர்க்கச் செய்யும் மேற்கு தொடர்ச்சி மலைகளில் அழகில் கரையலாம். பனிபடர்ந்த மாலைகள், குளிர் இரவுகள் என உங்களை மகிவிக்கச் செய்யும். கோடை காலத்தில் அங்கு செல்வதை தவிர்க்கவும். அங்கு குளிர்தான் ஸ்பெஷலே.

அகும்பேவில் இருந்து 5 கி.மீட்டர் தொலைவில் உள்ளது ஜோகி குண்டி அருவி. அருவிக்கு ஒரு கி.மீட்டருக்கு முன்னரே வண்டியை நிறுத்திவிட்டு காடுகளுக்கு நடந்து சென்று அருவியை அடைய வேண்டும். குகை அருவி போல் இருக்கும். தண்ணீர் மிக ஆழமாக இருக்கும் எனவே குளிக்கும்போது அதிகவனம் தேவை.

அகும்பேவில் இருந்து 4 கி.மீட்டர் தொலைவில் ஒனக்கே அபி அருவி உள்ளது. இங்கும் வாகன நிறுத்தத்தில் இருந்து 3-4 கிலோ மீட்டர் தொலைவு மலையேறி அருவியை அடைய வேண்டும். இதற்கு வனத்துறை அனுமதி பெற வேண்டும். இங்கு ஆகஸ்ட் – அக்டோபர் மாத்தில் செல்லாம்.

பர்கானா அருவி செல்லவும் வனத்துறை அனுமதி வேண்டும். மலையேறும்போது வனத்துறையினரும் உங்களுடன் வருவார். 5 கி.மீட்டர் நீங்கள் மலையேறி அருவியை அடைய வேண்டும். இங்கு அட்டை அதிகம் இருக்கும் எனவே உப்பும், புகையிலையும் எடுத்துச்செல்ல வேண்டும். எப்போது மலையேறும்போது நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.

அகும்பேவில் இருந்து 40 கி.மீட்டர் தொலைவில் உள்ளது. உடுப்பி செல்லும் வழியில் சீதா நதியின் கரையில் உள்ளது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி செல்லலாம். அங்கு செல்வதற்கு முன்னரும் அனுமதி வேண்டும். கர்நாடக வனத்துறையின் அனுமதி பெற்ற செல்ல முடியும்.

மழைக்காடுகள் ஆராய்ச்சி மையம் அகும்பேவில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. காடுகள் நிறைந்தப்பகுதி மெய்சிலிர்க்க வைக்கும்.

17ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜெயின் கோயில் குண்டாதிரி மலைக்கோயில், தீர்த்தங்கரர்களுக்காக எழுப்பப்பட்ட கோயில். அகும்பேவில் இருந்து 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

கூட்லு தீர்த்த அருவி, அகும்பேவில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு 300 அடியில் இருந்து தண்ணீர் கொட்டுகிறது. வழக்கமான சுற்றுலா பெங்களூரு செல்லாமல் அகும்பேவுக்கு ஒரு மழைக்கால விசிட் கொடுத்துப்பாருங்களேன்.

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.
அடுத்த செய்தி