தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Remedies For Wrinkles: இயற்கை வழியில் முக சுருக்கங்களை போக்க எளிய வழி! இது இருந்தா போதும்!

Remedies For Wrinkles: இயற்கை வழியில் முக சுருக்கங்களை போக்க எளிய வழி! இது இருந்தா போதும்!

Suguna Devi P HT Tamil

Oct 03, 2024, 07:05 PM IST

google News
Remedies For Wrinkles: முகத்தில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்க பல விலை உயர்ந்த செயற்கை பொருட்களை பயன்படுத்துகின்றனர். ஆனால் இதற்கு இயற்கை பொருட்களே போதும்.
Remedies For Wrinkles: முகத்தில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்க பல விலை உயர்ந்த செயற்கை பொருட்களை பயன்படுத்துகின்றனர். ஆனால் இதற்கு இயற்கை பொருட்களே போதும்.

Remedies For Wrinkles: முகத்தில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்க பல விலை உயர்ந்த செயற்கை பொருட்களை பயன்படுத்துகின்றனர். ஆனால் இதற்கு இயற்கை பொருட்களே போதும்.

முகத்தில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்க பல விலை உயர்ந்த செயற்கை பொருட்களை பயன்படுத்துகின்றனர். ஆனால் இதற்கு இயற்கை பொருட்களே போதும். இந்த நவீன காலக்கட்டத்தில் சுருக்கங்களுக்கு விலையுயர்ந்த கிரீம்கள் மற்றும் சீரம்களைப் பயன்படுத்துவதில் பலர் எதிர்பார்த்த பலன்களை பெறுவதில்லை. அது போன்ற சமயங்களில் வீட்டில் இருக்கும் இயற்கையான பொருட்களை தொடர்ந்து பயன்படுத்துவதன் வாயிலாக சிறந்த மாற்றத்தை பெரிய முடியும். 

முகச்சுருக்கம்

பொதுவாக 40 வயதில் இருந்து 50 வயதிற்குள் தோலின் ஈரப்பதம் குறைந்து, முகத்தின் தடிமன் குறைவதால் சுருக்கங்கள் ஏற்படுகின்றன. அதிக நேரம் சூரிய ஒளியில் இருப்பதும் சுருக்கங்கள் ஏற்பட முக்கிய காரணமாக உள்ளது.   2013 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், 80 சதவிகித தோல் சுருக்கம் சூரிய ஒளியினால் ஏற்படுகிறது என்று கண்டறிந்துள்ளது. இந்த தோல் சுருக்கங்களை சரி செய்ய பல பொருட்கள் உள்ளன. 

கற்றாழை

கற்றாழையில் ஏராளமான குணப்படுத்தும் பண்புகள் உள்ளன. 90 நாட்களுக்கு தொடர்ந்து தினசரி கற்றாழையை முகத்தில் அப்ளை செய்து வந்தால் முகத்தின் சுருக்கங்கள் ஏற்படுவது தடுக்கப்படுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. கற்றாழை சருமத்தில் கொலாஜன் மற்றும் நீரேற்றத்தை பாதுகாக்கிறது. 

வாழைபபழ மாஸ்க்

வாழைப்பழத்தில் இயற்கையான எண்ணெய்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன, அவை சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும். கால் பகுதி வாழைப்பழத்தை மென்மையான பேஸ்ட் ஆகும் வரை பிசைந்து பேஸ்ட் ஆக்கி அதனை முகத்தில் போட்டு வரவும். இதனை தொடர்ந்து பயன்படுத்தினால் கண்கூடான சரும மாற்றத்தை பார்க்க முடியும். 

ஊட்டச்சத்து உணவுகள் 

ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் பெரும்பாலும் சுருக்கங்களைத் தடுக்கவும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. இது குறித்தான ஆராய்ச்சி ஒன்றில் ஆரோக்கியமான உணவுப் பழக்கம் கொண்ட ஆண்களுக்கு குறைவான சுருக்கங்கள் இருப்பதைக் கண்டறிந்துள்ளது. அதே ஆய்வில், இறைச்சி மற்றும் சிற்றுண்டி உணவுகளை அதிகம் உட்கொள்பவர்களை விட, அதிக பழங்களை உண்ணும் பெண்களுக்கு சுருக்கங்கள் குறைவாக இருந்தன.

முட்டையின் வெள்ளைக்கரு

முட்டை வெள்ளைக் கருவை தொடர்ந்து பயன்படுத்தினால் முகத்தின் தோற்றத்தில் ஒரு சிறிய மாற்றம் அடைகிறது. இது குறித்து 2016 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், முட்டை சவ்வு மூலம் செய்யப்பட்ட க்ரீமைப் பயன்படுத்துவது சுருக்கத்தின் ஆழத்தை கணிசமாகக் குறைத்து, கொலாஜன் உற்பத்தியை அதிகரித்தது, இது சருமத்தை மிருதுவாகவும் நீட்டவும் செய்கிறது. இருப்பினும், முட்டைகளுக்கு ஒவ்வாமை உள்ளவர்கள் தங்கள் சுருக்கங்களுக்கு சிகிச்சையளிக்க அவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

 எண்ணெய்கள்

சிறிய அளவிலான அத்தியாவசிய எண்ணெய்களை கேரியர் எண்ணெயுடன் கலந்து சுருக்கங்கள் மீது தடவுவது அவற்றைக் குறைக்க உதவும். பெரும்பாலும், அத்தியாவசிய எண்ணெய்கள் குறிப்பிட்ட கலவைகளில் பயன்படுத்தப்படுகின்றன, அவை எரிச்சலை ஏற்படுத்தாமல் சருமத்தை குணப்படுத்துகின்றன, அவை கேரியர் எண்ணெயுடன் நீர்த்தப்படும் வரை.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒரு போதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.
அடுத்த செய்தி