Veg Pancake: விட்டமின்கள் நிறைந்து இருக்கும் வெஜ் பான்கேக் செய்வது எப்படி? தெரிஞ்சுக்க இத படிங்க!
Sep 26, 2024, 11:22 AM IST
Veg Pancake: காய்கறிகள் மற்றும் பழங்களில் அதிகமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதனை தினமும் உணவில் சேர்த்து கொள்வது உடலுக்கு வலிமை சேர்க்கும். இத்தகைய காய்கறிகளில் வித விதமாக உணவுகள் செய்து தருவதும் சுலபமான ஒன்றாகும்.
அதிவேகமாக மாறி வரும் நமது வாழ்க்கை முறைகளால் நமது உணவு முறைகளும் மாறி வருகின்றன. மேலும் இந்த மாதிரியான வேறுபட்ட உணவு வகைகளில் சத்தான காய்கறிகளையும் சேர்த்து சிறப்பான உணவாக கொடுக்கலாம். காய்கறிகள் மற்றும் பழங்களில் அதிகமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதனை தினமும் உணவில் சேர்த்து கொள்வது உடலுக்கு வலிமை சேர்க்கும். இத்தகைய காய்கறிகளில் வித விதமாக உணவுகள் செய்து தருவதும் சுலபமான ஒன்றாகும்.
காய்கறிகளை வைத்து மாடர்ன் உணவான பான் கேக் செய்யும் எளிமையான செய்முறையை இங்கு காணலாம். மேலும் இந்த பான் கேக்கை குழந்தைகளுக்கு செய்து தரும் போது மிச்சம் வைக்காமல் சாப்பிடுவர்.
தேவையான பொருட்கள்
அரை கப் கோதுமை மாவு
அரை கப் பொட்டுக்கடலை
ஒரு முட்டைகோஸ்
2 கேரட்
ஒரு பெரிய வெங்காயம்
3 பச்சை மிளகாய்
5 பல் பூண்டு
ஒரு டீஸ்பூன் மிளகு தூள்
ஒரு டீஸ்பூன் சீரகத்தூள்
ஒரு டீஸ்பூன் மிளகாய் தூள்
தேவையான அளவு உப்பு
தேவையான அளவு கொத்தமல்லி
தேவையான அளவு எண்ணெய்
தேவையான அளவு தண்ணீர்
செய்முறை
முதலில் பொட்டுக்கடலையை மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடாகியதும், அதில் வெங்காயத்தை நறுக்கி போட்டு ஒரு நிமிடம் வரை அதை வதக்கவும். பிறகு நறுக்கி வைத்திருக்கும் கேரட், முட்டைகோஸ், மற்றும் பூண்டை போட்டு நன்கு கிளறவும். அது நன்கு வதங்கிய பிறகு அதில் மிளகாய் தூள், உப்பு, மிளகு தூள், மற்றும் சீரகத்தூளை சேர்த்து நன்கு கிளறவும். அதில் தண்ணீர் சேர்த்து நன்கு கிளறி விட்டு ஒரு மூடி போட்டு மிதமான சூட்டில் வேக வைக்கவும்.
அந்தக் காய்கறிகள் நன்றாக வெந்ததும், அதனை ஒரு பாத்திரத்தில் வைத்து ஆற விட வேண்டும். காய்கறி கலவை ஆறியதும், நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லி, கோதுமை மாவு, மற்றும் அரைத்து வைத்திருக்கும் கடலைமாவை போட்டு நன்கு கிளறவும். பின்பு அதில் சிறிது சிறிதாக தண்ணீரை தெளித்து மாவை கலக்க வேண்டும். ஒரு தோசை சட்டியை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் காய விடவு. பின்னர் சிறிதளவு எண்ணெய் விட்டு அதில் கலந்து வைத்திருக்கும் மாவு கலைவையில் இருந்து ஒரு கரண்டி எடுத்து சப்பாத்தி வடிவத்திற்கு தட்டி தோசை சட்டியில் போட்டு எடுக்க வேண்டும்.
பின்பு அதை சுமார் மூன்றிலிருந்து நான்கு நிமிடம் நன்கு பொன் நிறமாக மாறும் வரை வேக விடவும். அது பொன்னிறமானதும் அதை திருப்பிப் போட்டு அந்தப் பக்கமும் பொன்னிறமாகும் வரை வேக வைக்கவும். சூடா வெஜ் பான்கேக் தயார். இதனை அனைவருக்கும் பரிமாறி மகிழ்ச்சியுடன் சாப்பிடவும்.
இது போன்று காய்கறிகள் சேர்க்கப்பட்ட உணவு அனைவரும் சாப்பிடலாம். மேலும் கூடுதல் சுவையுடன் இருக்கும் காரணத்தால் அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவாகவும் இந்த பான்கேக் அமைகிறது. உங்கள் விட்டு குழந்தைகளுக்கு இதனை செய்து கொடுத்து அவர்களுக்கு பிடித்தமா உணவில் ஊட்டச்சத்துக்களையும் வைத்து கொடுங்கள்.
டாபிக்ஸ்