தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Tamarind Rice: இனி புளியோதரை இப்படி செஞ்சு பாருங்க! சூப்பர் ரெசிபி!

Tamarind Rice: இனி புளியோதரை இப்படி செஞ்சு பாருங்க! சூப்பர் ரெசிபி!

Suguna Devi P HT Tamil

Oct 02, 2024, 10:41 AM IST

google News
Tamarind Rice: வீடுகளில் செய்யும் உணவுகளை விட இந்து கோயிலில் வழங்கப்படும் பிரசாதம் மிகவும் சுவையானதாக இருக்கும். இவைகளின் தனிப்பட்ட சுவைக்காகவே பலர் கோயில் பிரசாதத்தை மிகவும் விரும்பி உண்ணுகின்றனர்.
Tamarind Rice: வீடுகளில் செய்யும் உணவுகளை விட இந்து கோயிலில் வழங்கப்படும் பிரசாதம் மிகவும் சுவையானதாக இருக்கும். இவைகளின் தனிப்பட்ட சுவைக்காகவே பலர் கோயில் பிரசாதத்தை மிகவும் விரும்பி உண்ணுகின்றனர்.

Tamarind Rice: வீடுகளில் செய்யும் உணவுகளை விட இந்து கோயிலில் வழங்கப்படும் பிரசாதம் மிகவும் சுவையானதாக இருக்கும். இவைகளின் தனிப்பட்ட சுவைக்காகவே பலர் கோயில் பிரசாதத்தை மிகவும் விரும்பி உண்ணுகின்றனர்.

வீடுகளில் செய்யும் உணவுகளை விட இந்து கோயிலில் வழங்கப்படும் பிரசாதம் மிகவும் சுவையானதாக இருக்கும். இவைகளின் தனிப்பட்ட சுவைக்காகவே பலர் கோயில் பிரசாதத்தை மிகவும் விரும்பி உண்ணுகின்றனர். குறிப்பாக சர்க்கரை பொங்கல், புளியோதரை போன்ற உணவுகள் மிகவும் பிரசித்த பெற்ற பிரசாதம் ஆகும். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களும் இந்த பிரசாத உணவுகளுக்காக கோயில் செல்வர். கோயில் ஸ்டைலில் வீட்டிலேயே புளியோதரை செய்யும் எளிய முறையை இங்கு காண்போம். 

தேவையான பொருட்கள்

1 கப் பச்சரிசி

100 கிராம் நிலக்கடலை

சிறிதளவு புளி 

10 வற மிளகாய்

சிறிதளவு மல்லி விதை

1 டேபிள் ஸ்பூன் மிளகு

2 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு

2 டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு

2 டேபிள் ஸ்பூன் வெந்தயம்

சிறிதளவு வெள்ளை எள்

1 டேபிள் ஸ்பூன் பெருங்காய தூள்

1 டேபிள் ஸ்பூன் கடுகு

1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள்

சிறிய வெல்லத்துண்டு

தேவையான அளவு நல்லெண்ணெய்

தேவையான அளவு மிளகாய் தூள்

தேவையான அளவு உப்பு

சிறிதளவு கறிவேப்பிலை

செய்முறை

முதலில் பச்சரிசியை ஒரு குக்கர் அல்லது ஒரு பாத்திரத்தில் போட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் மல்லி, மிளகு, வற மிளகாய் ஆகியவற்றை போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின் அதே கடாயில் சிறிதளவு கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றை போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின்பு அதே கடாயில் வெந்தயம், வெள்ளை எள் என தனித்தனியாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பிறகு கடைசியாக அந்த கடாயில் சிறிதளவு கருவேப்பிலை போட்டு அதை நன்கு மொறு பொறுப்பான பதத்திற்கு வறுத்து எடுத்து வைத்து கொள்ளவும். இப்பொழுது வறுத்த அனைத்து பொருட்களையும் சிறிது நேரம் ஆற வைத்து அனைத்தையும் ஒரு மிக்ஸியில் போட்டு அதை அரைத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் புளியை ஊற வைத்து அந்த தண்ணீரை வடிக்கட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும். 

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றை தாளித்து விடவும். பின்பு அதில் வறமிளகாய் சேர்த்து தாளிக்கவும். பின்பு அதில் அரை டீஸ்பூன் வெந்தயம், மஞ்சள் தூள், பெருங்காய தூள், வேர்க்கடலை, மற்றும் கறிவேப்பிலையை போட்டு அதை நன்கு கலந்து விடவும். பின்னர் அதில் தேவையான அளவு உப்பு மற்றும் மிளகாய் தூளை சேர்த்து நன்கு கிளறவும். பின்னர் அதில் புளி தண்ணீரை ஊற்றி கலக்கவும். சிறிதளவு வெல்லம் சேர்த்து நன்கு கலந்து விடவும். தண்ணீர் நன்கு வற்றியவுடன் அதில் அரைத்து வைத்திருக்கும் பொடியில் இருந்து சுமார் ஒன்றரை மேஜைக்கரண்டி அளவு இதில் சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு கொதிக்க விடவும்.பின்னர் சூடான சாதத்தில் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி கிளறி விடவும்.   அடுத்து புளிக்காய்ச்சல் நன்கு வற்றியவுடன் அதிலிருந்து சாதத்திற்கு தேவையான அளவு புளி காய்ச்சலை எடுத்து ஊற்றி சாதத்தை நன்கு கிளறி விடவும். பின்பு அதில்  அரைத்து வைத்திருக்கும் பொடியை சேர்த்து அதை பரிமாறவும். 

 

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.
அடுத்த செய்தி