தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  ஜவ்வரிசி வடை! ஈவினிங் ஸ்நாக்ஸ்க்கு புது சாய்ஸ்! இப்போவே செஞ்சு பாருங்க!

ஜவ்வரிசி வடை! ஈவினிங் ஸ்நாக்ஸ்க்கு புது சாய்ஸ்! இப்போவே செஞ்சு பாருங்க!

Suguna Devi P HT Tamil

Oct 10, 2024, 01:36 PM IST

google News
குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் புது விதமான வடை ஒன்றை பற்றி தெரிந்து கொள்ள போகிறோம். இந்த வடை செய்வதற்கு மாவு ஆட்ட தேவை இல்லை. வீட்டில் பாயாசம் செய்ய வைத்திருக்கும் ஜவ்வரிசியே போதும். (yummy tummy aarthi)
குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் புது விதமான வடை ஒன்றை பற்றி தெரிந்து கொள்ள போகிறோம். இந்த வடை செய்வதற்கு மாவு ஆட்ட தேவை இல்லை. வீட்டில் பாயாசம் செய்ய வைத்திருக்கும் ஜவ்வரிசியே போதும்.

குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் புது விதமான வடை ஒன்றை பற்றி தெரிந்து கொள்ள போகிறோம். இந்த வடை செய்வதற்கு மாவு ஆட்ட தேவை இல்லை. வீட்டில் பாயாசம் செய்ய வைத்திருக்கும் ஜவ்வரிசியே போதும்.

ஒவ்வொரு வீட்டிலும் மாலை நேரம் வந்து விட்டாலே சுடச்சுட டீயும், வடையும் சாப்பிடுவது வழக்கமான பழக்கம் ஆகிவிட்டது. மேலும் பள்ளி முடிந்து வீடு திரும்பும் குழந்தைகளும், அலுவலகத்தில் இருந்த வருபவர்களும் என மாலை நேர சிற்றுண்டிக்காகவே வேகமாக வருவர். அவ்வாறு வருபவர்களுக்கு சுவையான புதிய ஸ்நாக்ஸ் செய்து கொடுத்தால் அதிக மகிழ்ச்சி அடைவார்கள். இப்போது குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் புது விதமான வடை ஒன்றை பற்றி தெரிந்து கொள்ள போகிறோம். இந்த வடை செய்வதற்கு மாவு ஆட்ட தேவை இல்லை. வீட்டில் பாயாசம் செய்ய வைத்திருக்கும் ஜவ்வரிசியே போதும். ஜவ்வரிசியை வைத்து சுவையான வடை செய்வது எப்படி என்பதை இங்கு காண்போம். 

  தேவையான பொருட்கள்  

1 கப் ஜவ்வரிசி

1 வேகவைத்த உருளைக்கிழங்கு

அரை கப் வறுத்த நிலக்கடலை 

2 டீஸ்பூன் வெங்காயம்

சிறிதளவு கொத்தமல்லி இலைகள்

சிறிதளவு கறிவேப்பிலை

சிறிதளவு நறுக்கிய இஞ்சி

1 பச்சை மிளகாய்

1  டீஸ்பூன் சீரகம்

 1 டீஸ்பூன் மிளகாய் தூள்

2 டீஸ்பூன் கடலை மாவு

தேவையான அளவு உப்பு

செய்முறை 

முதலில் ஒரு பாத்திரத்தில் ஜவ்வரிசியை ஊற வைக்கத் தேவையான தண்ணீரை எடுத்து அதில் ஊற வைக்க வேண்டும். குறைந்தபட்சம் 6 முதல் 7 மணி நேரங்கள் இந்த ஜவ்வரிசி ஊற விட வேண்டும். பின்னர் நன்கு ஊறிய ஜவ்வரிசியில் இருந்து தண்ணீரை வடிகட்ட வேண்டும். நன்கு வடிகட்டிய பின்பு ஒரு அகன்ற பாத்திரத்தில் இந்த ஜவ்வரிசியை எடுத்துக் கொள்ளவும். பின் அதில் வேகவைத்து எடுத்த உருளைக் கிழங்கை அதில் போட்டு மசித்து விட வேண்டும். பின்னர் வருத்த நிலக்கடலையை இடித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். மேலும் 2 டிஸ்பூன் கடலை மாவையும், இடித்த நிலக்கடலையையும் இந்த கலவையில் போட்டு கலக்கவும். 

பின்னர் அந்த பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை மற்றும் இஞ்சி, மிளகாய், கறிவேப்பிலை என எல்லாவற்றையும் பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். இறுதியாக சீரகம், தேவையான அளவு மிளகாய் பொடி மற்றும் தேவையான அளவு உப்பை போட்டு நன்கு பிசையவும். இந்த கலவை மிகவும் ஈரப்பதம் நிறைந்து இருக்க கூடாது. அப்படி இருந்தால் கூடுதலாக கடலை மாவை சேர்த்து சமண செய்யலாம். இதில் இருந்து வடை சுடுவதற்கு தேவையான சிறு உருண்டைகளாக பிடித்து தட்டி எடுத்தக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கடாயில் வடை சுடுவதற்கான எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும். பின் அந்த எண்ணெய் சூடானதும், மிதமான தீயில் வடையை போட்டு பொரித்து எடுக்க வேண்டும். இருபக்கமும் பொன்னிறமாக மாறும் வரை பொரித்து எடுத்துக் கொள்ளுங்கள். மீதமுள்ள மாவையும் பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.  இப்போது ருசியான மற்றும் கிரிஸ்பியான ஜவ்வரிசி வடை தயார். இதனை உங்களது வீடுகளில் எளிமையாக 20 நிமிடங்களில் செய்யலாம். அனைவருக்கும் இந்த புது விதமான வடை மிகவும் பிடிக்கும். நீங்களும் உங்களது வீடுகளில் செய்து பார்த்து அசத்துங்கள். 

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.
அடுத்த செய்தி