இத மட்டும் செஞ்சு பாருங்க! காரசாரமான சிக்கன் ஊறுகாய்! அசத்தலா செய்யலாம் வாங்க!
Nov 24, 2024, 10:47 AM IST
வீட்டிலேயே சுவையான ஊறுகாய் செய்ய முடியும். புது விதத்தில் சிக்கனை வைத்து ருசியான ஊறுகாய் செய்யலாம். இதை மட்டும் செய்து வைத்தால் போதும். வீட்டிலேயே எளிமையான முறையில் சிக்கன் ஊறுகாய் செய்யும் முறையை தெரிந்து கொள்ள இதனை முழுமையாக படியுங்கள்.
வீட்டில் குழம்பு எதுவும் வைக்க முடியாத சமயங்களில் பெரும்பாலானோர் பயன்படுத்தும் ஒரு முக்கிய இணை உணவு தான் ஊறுகாய். இந்த ஊறுகாய் இருந்தால் போதும் சாதம், தோசை, சப்பாத்தி என அனைத்திற்கும் இணையாக வைத்து சாப்பிடலாம். வேகமாக இயங்கும் வாழ்க்கையில் சமையலுக்கு என்று தனியாக நேரம் ஒதுக்க முடிவதில்லை. அனைத்தையும் கடைகளிலேயே வாங்கும் பழக்கம் வந்துவிட்டது. மேலும் இது போன்ற வெளி உணவுகள் உடலுக்கு நன்மை பயப்பதில்லை. வீட்டிலேயே சுவையான ஊறுகாய் செய்ய முடியும். புது விதத்தில் சிக்கனை வைத்து ருசியான ஊறுகாய் செய்யலாம். இதை மட்டும் செய்து வைத்தால் போதும். வீட்டிலேயே எளிமையான முறையில் சிக்கன் ஊறுகாய் செய்யும் முறையை தெரிந்து கொள்ள இதனை முழுமையாக படியுங்கள்.
தேவையான பொருட்கள்
மசாலா தூள் அரைக்க
2 துண்டு பட்டை
5 ஏலக்காய்
6 முதல் 8 கிராம்பு
4 டேபிள்ஸ்பூன் மல்லித்தூள்
2 டீஸ்பூன் சீரகம்
1 டீஸ்பூன் கடுகு
சிறிதளவு வெந்தயம்
சிக்கன் ஊறுகாய் செய்ய
அரை கிலோ எலும்பில்லாத சிக்கன்
அரைத்த மசாலா தூள்
மஞ்சள் தூள்
தேவையான அளவு உப்பு
3 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
நல்லெண்ணெய்
அரை கப் மிளகாய் தூள்
எலுமிச்சைபழச்சாறு
செய்முறை
முதலில் சிக்கனை கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை கழுவும் போது கல் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கழுவ வேண்டும். பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் பட்டை, ஏலக்காய், கிராம்பு, மல்லித்தூள், சீரகம், கடுகு, வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து குறைந்த தீயில் பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு இதனை நன்கு ஆறவிட்டு ஒரு மிக்சியில் போட்டு நன்கு பொடியாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் சிக்கனில் மஞ்சள் தூள், உப்பு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின்பு இதனை கடாயில் சேர்த்து தண்ணீர் வற்றி வரும் வரை கலந்துவிட வேண்டும். பிறகு இதில் நல்லெண்ணெய் சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அதில் மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்துவிட வேண்டும். பிறகு இதில் அரைத்த மசாலா தூள் சேர்த்து கலந்துவிட வேண்டும். இப்பொழுது அடுப்பை குறைந்த தீயில் வைத்து 3 நிமிடம் வேகவிட வேண்டும். பின்பு அடுப்பை அணைத்து விட்டு எலுமிச்சைபழச்சாறு ஊற்றி கலந்துவிடவும். இப்பொழுது ருசியான சிக்கன் ஊறுகாய் தயார். இதனை வீட்டில் இருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை செய்து கொடுக்கலாம். இதனை சாதம், சப்பாத்தி, தோசை என எல்லா உணவுகளுக்கும் இணை உணவாக எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறு சிக்கன் ஊறுகாய் செய்து வீட்டிலேயே வைத்திருந்தால் சீக்கிரம் கேட்டுப் போகாமல் இருக்கும். அதிகமான நல்லெண்ணெய் ஊற்றி இந்த ஊறுகாய் செய்யப்படுவதால் நீண்ட நாட்களுக்கு இது சுவையாக இருக்கும். நீங்களும் இதனை உங்கள் வீட்டில் ட்ரை செய்து பார்த்து மகிழுங்கள்.
டாபிக்ஸ்