இயற்கையாகவே கல்லீரலில் இருக்கும் நச்சுக்களை நீக்கும் உணவுகள் எவையொல்லாம் என்பதை பார்க்கலாம்
By Muthu Vinayagam Kosalairaman Nov 23, 2024
Hindustan Times Tamil
கல்லீரல் ஆரோக்கியமாக செயல்பட அவற்றில் இருக்கும் நச்சுக்கள் நீக்கப்பட வேண்டும்
சில உணவுகளை உங்கள் டயட்டில் சேர்ப்பதன் மூலம் இயற்கையாகவே கல்லீரல் இயக்கத்தை மேம்படுத்தி ஒட்டு மொத்த ஆரோக்கியத்தையும் பேனி காக்கலாம்
பூண்டில் இருக்கும் கந்தகம் கல்லீரல் நொதிகளை செயல்படுத்தி அதில் இருக்கும் நச்சுக்களை நீக்க உதவுகிறது
சிட்ரஸ் பழங்களில் இருக்கும் அதிகப்படியான வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கல்லீரல் ஆரோக்கயத்துக்கு உதவுவதுடன், இயற்கையாகவே அதில் இருக்கும் நச்சுக்களை நீக்குகிறது
ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் வீக்கத்துக்கு எதிரான பண்புகள் கொண்டிருக்கும் மஞ்சள் கல்லீரல் செல்களை பழுது பார்த்து, நச்சுக்களை நீக்குகிறது
க்ளோரோபில் அதிகம் நிரம்பியிருக்கும் பச்சை இலை காய்கறிகள் ரத்த ஓட்ட சுற்றுச்சூழலில் இருக்கும் நச்சுக்களை நீக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இவை கல்லீரலில் இருக்கும் நச்சுகளையும் நீக்குகிறது
அதிகப்படியான பெக்டின், பாலிபினால்கள் இடம்பிடித்திருக்கும் ஆப்பிள் பழம் கல்லீரல் செயல்பாட்டை சீராக வைக்க உதவுகிறது. அத்துடன் நச்சுக்களை நீக்கி ஒட்டு மொத்த கல்லீரல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது