சுவையான முட்டைக்கோஸ் மஞ்சூரியன் செய்வது எப்படி? இப்படி செஞ்சு பாருங்க! ஈசி ரெசிபி
Dec 22, 2024, 09:48 PM IST
அசைவ உணவுகளைப் போலவே சைவ காய்கறிகளை வைத்து சுவையான உணவுகள் தயாரிக்கலாம். ஆனால் இது போன்ற உணவுகளை செய்வது குறித்து பெரும்பாலும் அதிகம் பேருக்குத் தெரியாது. ஆனால் இங்கு முட்டைக்கோஸ் வைத்து சுவையான மஞ்சூரியன் செய்வது எப்படி எனபதை இங்கு காண்போம்.
அசைவ உணவுகளைப் போலவே சைவ காய்கறிகளை வைத்து சுவையான உணவுகள் தயாரிக்கலாம். ஆனால் இது போன்ற உணவுகளை செய்வது குறித்து பெரும்பாலும் அதிகம் பேருக்குத் தெரியாது. ஆனால் இங்கு முட்டைக்கோஸ் வைத்து சுவையான மஞ்சூரியன் செய்வது எப்படி எனபதை இங்கு காண்போம்.
தேவையான பொருட்கள்
1 முட்டைகோஸ்
1 பெரிய வெங்காயம்
1 குடை மிளகாய்
5 பல் பூண்டு
சிறிய அளவு இஞ்சி துண்டு
2 டேபிள்ஸ்பூன் சோள மாவு
2 டேபிள்ஸ்பூன் மைதா மாவு
1 டேபிள்ஸ்பூன் டார்க் சோயா சாஸ்
2 டேபிள்ஸ்பூன் ரெட் சில்லி சாஸ்
2 டேபிள்ஸ்பூன் டொமேட்டோ கெட்சப்
1 டேபிள்ஸ்பூன் வினிகர்
அரை டேபிள்ஸ்பூன் மிளகு தூள்
தேவையான அளவு மிளகாய் தூள்
தேவையான அளவு உப்பு
தேவையான அளவு எண்ணெய்
சிறிதளவு ஸ்பிரிங் ஆனியன்
செய்முறை
முதலில் ஒரு அகன்ற பாத்திரத்தில் துருவிய முட்டைக்கோசை போட்டு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், தேவையான அளவு உப்பு, மிளகாய் தூள், மற்றும் மிளகு தூள் சேர்த்து அதை கலக்கவும். பின்பு அதில் சோள மாவு மற்றும் மைதா மாவை சேர்த்து அதை நன்கு கலக்கவும். பின் இதனை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஒரு வைத்து அதை சில நிமிடங்கள் பிரிட்ஜில் வைத்து எடுக்கவும். பிறகு ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சுட்ட பின் அதில் கடாயின் அளவிற்கேற்ப அதில் உருட்டி வைத்திருக்கும் உருண்டைகளை ஒவ்வொன்றாக போடவும். பின்பு அது ஒரு புறம் பொன்னிறமானதும் அதை மறு புறம் திருப்பி விட்டு அது பொன்னிறம் ஆகும் வரை அதை வேக விடவும்.
முட்டைகோஸ் உருண்டை இரு புறமும் பொன்னிறமானதும் அதை எடுத்து எண்ணெய்யை வடித்து அதை ஒரு தட்டில் வைத்து சிறிது நேரம் ஆற விடவும். அடுத்து ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சுட்ட பின் அதில் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு வதக்கவும். பின் அதில் இஞ்சி மற்றும் பூண்டை போட்டு அதனின் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும். பின்னர் அதில் நறுக்கிய குடை மிளகாயை போட்டு வதக்கவும். பிறகு அதில் சோயா சாஸ், வினிகர், டொமேட்டோ கெட்சப், மற்றும் ரெட் சில்லி சாஸ்ஸை ஊற்றி அதை நன்கு கலந்து விட்டு அதில் சுமார் அரை கப் அளவு தண்ணீர் ஊற்றி மீண்டும் நன்கு கலந்து விட்டு அதை சுமார் 2 மணி நேரம் வரை கொதிக்க விடவும். மேலும் சிறிதளவு சோள மாவில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கரைத்து அதில் சேர்த்து கொள்ளவும். பின்னர் பொரித்த முட்டைகோஸ் உருண்டைகளை அதில் போட்டு மசாலாவோடு சேருமாறு கிளறி விடவும். பின்பு அதில் சிறிதளவு ஸ்பிரிங் ஆனியன்னை தூவி கிளறி அடுப்பிலிருந்து இறக்கி அதை ஒரு தட்டில் வைத்து சுட சுட பரிமாறவும்.
டாபிக்ஸ்