மிக்சர இப்படி செஞ்சு பாருங்க! அனைவரும் விரும்பி சாப்பிடுவாங்க! சூப்பர் ரெசிபி!
Nov 07, 2024, 02:19 PM IST
வீட்டில் ஏதேனும் ஸ்நாக்ஸ் வேண்டும் என்றாலே உடனே இருப்பது மிக்சர் தான், அந்த அளவிற்கு இது ஒரு முக்கியமான உணவாக மாறி விட்டது.
வீட்டில் ஏதேனும் ஸ்நாக்ஸ் வேண்டும் என்றாலே உடனே இருப்பது மிக்சர் தான், அந்த அளவிற்கு இது ஒரு முக்கியமான உணவாக மாறி விட்டது. ஆனால் இந்த மிக்சரை கடைகளில் சென்று வாங்கும் போது அவ்வளவு சுவையாக இருப்பதில்லை. மேலும் சுகாதரமாகவும் இருப்பதில்லை. இந்த மிக்சரை நாமே வீட்டில் செய்யும் எளிய முறையை காணலாம்.
தேவையான பொருட்கள்
2 கப் கடலை மாவு
அரை கப் அரிசி மாவ
அரை கப் பொட்டுக்கடலை
அரை கப் வேர்கடலை
10 முதல் 12 முந்திரி
அரை கப் அவுல்
அரை டேபிள்ஸ்பூன் மஞ்சள் தூள்
அரை டேபிள்ஸ்பூன் பெருங்காய தூள்
பேக்கிங் சோடா
பூண்டு
தேவையான அளவு மிளகாய் தூள்
தேவையான அளவு உப்பு
தேவையான அளவு எண்ணெய்
சிறிதளவு கறிவேப்பிலை
செய்முறை
முதலில் ஒரு அகன்ற பாத்திரதிதில் கடலை மாவு, அரிசி மாவு, சிறிதளவு மஞ்சள் தூள், சிறிதளவு பெருங்காய தூள், தேவையான அளவு உப்பு, மற்றும் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய்யை சேர்த்து அதை நன்கு கலந்து விடவும். பின்பு அதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து பிசைந்து தனியாக மூடி வைத்துக் கொள்ளவும். இப்பொழுது மற்றொரு கிண்ணத்தில் கடலை மாவு, அரிசி மாவு, சிறிதளவு பெருங்காய தூள், பேக்கிங் சோடா, மிளகாய் தூள், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அதை நன்கு கலந்து விடவும். இந்த கலவையில் தண்ணீர் ஊற்றி மாவாக்கி கொள்ளவும். ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் காராபூந்தியை பொரித்து எடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். சூடானதும் ஜவ்வரிசி கரண்டியை எடுத்து எண்ணெய்யின் மேல் வைத்து அதில் நாம் செய்து வைத்திருக்கும் மாவை ஒரு கரண்டியின் மூலம் எடுத்து ஊற்றி அதை நன்கு தேய்த்து விடவும்.இந்த காராபூந்தி இருபக்கம் நன்றாக வெந்ததும் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பின்னர் ஓம பொடி மாவை எடுத்து ஒரு இடியாப்ப அச்சில் வைத்து அதை கடாயில் இருக்கும் எண்ணெய்யில் சுத்தி பிழிந்து விடவும். இரு பக்கமும் நன்றாக வெந்த பின் அதனை எடுத்து ஒரு தட்டில் வைத்து சூடு ஆறிய பின் அதை பக்குவமாக கைகளின் மூலம் நொறுக்கி வைத்து கொள்ளவும். அடுத்து பொட்டுக்கடலை, வேர்க்கடலை, முந்திரி, மற்றும் அவுலை ஒன்றன் பின் ஒன்றாக தனித்தனியாக எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுத்து கொள்ளவும். பின்பு கடைசியாக அடுப்பை அணைத்து விட்டு பூண்டு மற்றும் கறிவேப்பிலையை போட்டு பொரித்து எடுத்து வைத்து கொள்ளவும்.
பிறகு ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்து அதில் பொரித்தெடுத்து வைத்திருக்கும் அனைத்தையும் அவரவர் விருப்பத்திற்கேற்ப ஒன்றாக சேர்த்து அதை நன்கு கலந்து விடவும். இந்த கலவையில் தேவையான அளவு மிளகாய் தூள், உப்பு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து சாப்பிடலாம். மிகவும் ருசியான மற்றும் சுத்தமான மிக்சர் தயார். இதனை வீட்டில் உள்ள அனைவருக்கும் கொடுத்து நீங்களும் சாப்பிடுங்கள்.
டாபிக்ஸ்