தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  How To Make Your Face Glow

Beauty Tips: முகம் பளபளப்பாக ஜொலிக்க வைக்கும் அழகு டிப்ஸ்கள்!

I Jayachandran HT Tamil

May 19, 2023, 07:48 PM IST

முகம் பளபளப்பாக ஜொலிக்க வைக்கும் அழகு டிப்ஸ்கள் பற்றி இங்கு அறிந்து கொள்ளுங்கள்.
முகம் பளபளப்பாக ஜொலிக்க வைக்கும் அழகு டிப்ஸ்கள் பற்றி இங்கு அறிந்து கொள்ளுங்கள்.

முகம் பளபளப்பாக ஜொலிக்க வைக்கும் அழகு டிப்ஸ்கள் பற்றி இங்கு அறிந்து கொள்ளுங்கள்.

பிறரை நாம் கவரவேண்டுமென்றால் நமது தோற்றம் எடுப்பாக இருக்க வேண்டும். தோற்றத்துக்கு முக்கியம் நமது முகம். முகம் பளிச்சென இருந்தால் நமது அழகால் பிறரை எளிதாகக் கவரலாம். அதற்கு முக்கியமான அழகுக்குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

ட்ரெண்டிங் செய்திகள்

Cognitive Function : உங்கள் அறிவாற்றலை பெருக்க வேண்டுமா? இதோ இந்த வைட்டமின்களை உணவில் சேருங்கள்!

Hair Fall Remedy : கைப்பிடி கறிவேப்பிலையை இப்படி செஞ்சு குடிச்சு பாருங்க! தலையில் இருந்து ஒரு முடி கூட கொட்டாது!

Parenting Tips : கவனம் பெற்றோர்களே! இந்த விஷயங்களை உங்கள் குழந்தைகளிடம் கூறிவிடாதீர்கள்!

Pomegranate Peel Tea : உடலுக்கு தேவையான எத்தனை நன்மைகளை கொடுக்கிறது பாருங்கள் இந்த ஒரு தேநீர்!

முகம்

சருமத்தை நன்கு சுத்தம் செய்து மாய்ஸ்சுரைசரை பூசுவதற்கு முன்பு ஹைட்ரேட்டிங் சீரம் அப்ளை செய்யவும். பிறகு பிரைமர் மற்றும் சரும நிறத்துக்கேற்ற ஃபவுண்டேஷனை பூசவும். கருவளையம், கரும்புள்ளிகளை மறைக்க கன்சீலரைப் பூசிய பிறகு. லூஸ் பவுடரை பூசவும்.

கன்னங்கள்

சருமத்தில் இயற்கையான பொலிவைப் பெற, ஹை லைட்டர் ஸ்டிக்கைப் பயன்படுத்தவும். பிறகு கன்ன எலும்புகளில் பீச் நிற பிளஷ்ஷை பூசவும். நன்கு பிளெண்ட் செய்யவும். இது இயற்கையான பொலிவைத் தரும். பீச் நிறத்தில் பவுடரையும் பூசினால் பொலிவான தோற்றத்தை பெற முடியும்.

கண்கள்

ரோஸ் கோல்ட் நிறத்தில் ஐஷாடோவை முதலில் கண் இமையின் மீது பூசவும். கண்களின் ஓரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவும். கண்களின் வெளிப்புறத்திற்கு பிரவுன் நிற ஐஷாடோவை பயன்படுத்தவும். நன்றாக பிளெண்ட் செய்யவும். கண் மையை அடர்த்தியாக இடவும். நெத்தி அருகே இதை ஸ்மட்ஜ் செய்யவும். திக்காக மஸ்காராவை பூசுங்கள்.

உதடுகள்

உதட்டில் இருக்கும் இறந்த செல்களை எக்ஸ்ஃபோலியேட் செய்யவும். பிறகு, நிறமில்லாத லிப் பாமை பயன்படுத்தி உதட்டிற்கு பளிச் லுக்கை தரவும்.

இளமையான தோற்றத்தைப் பெறுவதற்கு அழகுக்கலை நிபுணர் ஆர்.பிரியா தரும் மேலும் சில குறிப்புகள்-

உங்கள் சுத்தமான சருமத்தில் மாய்ஸ்சுரைஸரைப் பூசவும்.

கண்களுக்கு கீழே கன்சீலரைப் பயன்படுத்தவும்.

இதைத் தொடர்ந்து லிக்விட் ஃபவுண்டேஷனைப் பூசவும். இது கிளியர் சருமம் தரும்.

கலர் இல்லாத (நியூடு) ஐஷாடோவை கண் இமையின் நடுவே பூசவும்.

வெள்ளை நிற கண்மை பென்சிலைக் கொண்டு இமையின் மேலே கோட்டை வரையவும்.

மையிடும் இடத்திலும் இதை பூசவும்.

ஆப்பிள் நிற பிலஷ்ஷை கன்னங்களில் பூசவும்.

மஸ்காராவை நன்றாக பயன்படுத்தவும்.

ஹைலைட்டரை முகத்தில் கொஞ்சம் பயன்படுத்துவதால் பிரகாசமாக இருக்கும்.

லிப் பாம் மற்றும் பிங்க் நிர கிலாஸ் உங்களுக்கு பர்ஃபெக்ட் லுக்கைத் தரும்.

சிறப்பான பிளஷ் தோற்றத்துக்கு-

மங்கலான தோல் நிறத்துக்கு மென்மையான ப்ளஷர்ஸ் நன்கு வேலை செய்யும்.

வளமான பவழம், பர்ன்ட் ஆரஞ்சு, தங்கத்துடன் சேர்ந்த ரோஸ் பிங்க் மற்றும் வெண்கல வண்ணங்கள் அழகை கூட்டும். இப்படி செய்யும் போது பழுப்பு, வெளிர் பிங்க் மற்றும் வெள்ளி நிறங்களை தவிர்க்கவும்.

அவை உங்கள் தோற்றதை மேலும் மங்கலாக்கும். அதே நேரம் மாய்ஸ்சுரைசிங், அழுக்கு நீக்கிகள் போன்றவற்றைப் பயன்படுத்துவது உங்கள் முகத்துக்கு ஒளியூட்டும். பொதுவாக எல்லோரும் செய்வதைப் போல முகத்துக்கு அதிகமாக பவுடர் போடுவதை தவிர்த்து விடுங்கள். அது மங்கலான தோற்றத்தை அளிக்கும்.

டாபிக்ஸ்