தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Child Care: குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் தக்காளி சூப் செய்முறை

Child care: குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் தக்காளி சூப் செய்முறை

I Jayachandran HT Tamil

Jan 24, 2023, 03:19 PM IST

google News
குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் தக்காளி சூப் செய்முறை பற்றி இங்கு காணலாம்.
குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் தக்காளி சூப் செய்முறை பற்றி இங்கு காணலாம்.

குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் தக்காளி சூப் செய்முறை பற்றி இங்கு காணலாம்.

குழந்தைகளுக்கு திட உணவுகளைத் தரத் தொடங்கும் போது அவர்கள் வித்தியாசமான சுவையில் உணவுகளை விரும்புவார்கள். குளிர்காலத்தில் குழந்தைக்கு உணவளிக்கும் போது கூடுதல் கவனிப்பு தேவை. குழந்தைக்கு கொடுக்கும் உணவுகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் சளி காய்ச்சலில் இருந்து பாதுகாக்க செய்யும். அப்படியான ஒன்று தக்காளி சூப். இதன் தயாரிப்பு முறை குறித்து பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்-

தக்காளி- 2 அல்லது 3

சாம்பார் வெங்காயம்- 2 (பொடியாக நறுக்கியது)

பூண்டு - 4 பொடியாக நறுக்கவும்

ரொட்டி க்யூப்- தேவையெனில் (குழந்தையின் வயதை பொறுத்து)

வெண்ணெய் அல்லது நெய் - அரை டீஸ்பூன்

மிளகுத்தூள்- அரை டீஸ்பூன்

க்ரீம்- 1 டீஸ்பூன்

செய்முறை-

தக்காளி அழுகல் இல்லாமல் ஃப்ரெஷ்ஷாக இருக்கட்டும். தக்காளியை சில நிமிடங்கள் நீரில் ஊறவிட்டு பிறகு சுத்தம் செய்து வேகவைக்கவும். இதை இட்லி பானையில் வைத்து ஆவியில் வேக வைத்து எடுக்கலாம்.

தக்காளியின் தோலை எடுத்து தக்காளியை நன்றாக மசிக்கவும். பிறகு ப்ரெட் க்யூப் சேர்ப்பதாக இருந்தால் அதை வெண்ணெயில் வறுத்து எடுக்கவும்.

மீதியுள்ள வெண்ணெய் அல்லது நெய்யில் நறுக்கிய வெங்காயம் மற்றும் பூண்டு சேர்க்கவும். வெங்காயம் நன்றாக பொன்னிறமாக மாறியவுடன் மசித்த தக்காளியை சேர்க்கவும்.

பிறகு கால் கப் தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விட்டு இறக்கும் போது தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள் காரத்துக்கேற்ப, ப்ரெஷ் க்ரீம் சேர்த்து நன்றாக கலக்கவும். பிறகு ப்ரெட் க்யூப்ஸ் சேர்த்து பரிமாறவும். அருமையான சுவையில் தக்காளி சூப் தயார்.

எப்படி கொடுப்பது

குழந்தைக்கு 1 வயதான பிறகு இந்த சூப் வகை கொடுக்கலாம். அதிலும் அளவாக கொடுப்பது நல்லது. ஆரம்பத்தில் 3 டீஸ்பூன் அளவு தொடங்கி பிறகு ஒவ்வாமை குறித்து பரிசோதனைக்கு பிறகு படிப்படியாக கொடுக்கலாம். நண்பகலுக்கு பிறகு மாலை நேரத்தில் கொடுக்கலாம். 6 மணிக்கு மேல் கொடுக்க வேண்டாம். குழந்தைக்கு செரிமான பிரச்னை உண்டு செய்யலாம்.

குழந்தையின் சுவைக்கேற்ப மிளகுத்தூள், உப்பு, வெண்ணெய் மற்றும் க்ரீம் பயன்படுத்துவது நல்லது.

சுவைக்கு என்று மறந்தும் சர்க்கரை போன்ற இனிப்பை பயன்படுத்த வேண்டாம்.

தக்காளி சூப் நன்மைகள்

குழந்தைக்கு தக்காளி சேர்ப்பதன் மூலம் வைட்டமின் சி கிடைக்கும் இது இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. குழந்தையை புத்துனர்ச்சியுடன் வைத்திருக்க இவை உதவும்.

நடுத்தர தக்காளிப்பழம் ஒன்று 7 முதல் 12 மாத குழந்தைகளின் தினசரி வைட்டமின் சி அளவில் 34 % கொடுத்து விடுகிறது. இது உடலில் இரும்பு உறிஞ்சுதலுக்கு உதவும். மேலும் இது நோய் எதிர்ப்பு சதியை அதிகரிக்க செய்கிறது காயம் மற்றும் குணப்படுத்தலை விரைவு செய்கிறது.

குழந்தைகள் திட உணவு

வைட்டமின் ஏ தக்காளியில் அதிகம் இது 7 முதல் 12 மாத குழந்தைகளின் தினசர் தேவைகளில் 10% வைட்டமின் ஏ அளித்துவிடுகிறது. இது செல்லுலார் தொடர்பு, பார்வை வளர்ச்சி மற்றும் நோயெதிர்ப்பு செயல்பாடுகளை ஊக்குவிக்கிறது. இதில் உள்ள லைக்கோபீன் ஆனது ஃப்ரீ ரேடிக்கல்களால் உருவாக்கப்பட்ட சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது.

இது 94% தண்ணீர் அடங்கியது என்பதால் குழந்தைக்கு மலச்சிக்கல் தவிர்க்க உதவும்.

7 மாதத்துக்கு மேற்பட்ட குழந்தைக்கு கொடுப்பதானால் நெய், க்ரீம், வெண்ணெய் தவிர்த்து அளவாக கொடுக்கலாம்.

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.
அடுத்த செய்தி