Ragi dosa : சுவையான ராகி தோசை எப்படி செய்வது? அதற்கு சுவையான தேங்காய் சட்னி செய்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்!
May 17, 2024, 06:45 AM IST
Ragi dosa : சுவையான ராகி தோசை எப்படி செய்வது என்பது குறைத்து பார்க்கலாம். அதேபோல இதற்கு தேங்காய் சட்னி அருமையாக இருக்கும். அது எவ்வாறு செய்வது என்பது குறித்தும் இதில் பார்க்கலாம்.
சுவையான ராகி தோசை
தேவையான பொருட்கள்
ராகி மாவு 1 கப்
ரவா 1/2 கப்
கோதுமை மாவு 1/4 கப்
வெங்காயம் பொடியாக நறுக்கியது
கேரட் துருவியது
கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை பொடியாக நறுக்கவும்
இஞ்சி பொடியாக நறுக்கியது
தயிர் 2 டீஸ்பூன்
உப்பு
மிளகு சிறிது நசுக்கப்பட்டது
செய்முறை
தோசை மாவு நிலைத்தன்மையில் படிப்படியாக தண்ணீர் சேர்த்து ராகி மாவு 1 கப்,
ரவா 1/2 கப், கோதுமை மாவு 1/4 கப், வெங்காயம் பொடியாக நறுக்கியது,
கேரட் துருவியது, கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை பொடியாக நறுக்கவும்,
இஞ்சி பொடியாக நறுக்கியது, தயிர் 2 டீஸ்பூன், உப்பு மிளகு சிறிது நசுக்கப்பட்டது இவை அனைத்து பொருட்களையும் சேர்த்து கலக்கவும்.
கலக்கிய மாவை மூடி 10 நிமிடங்கள் விட்டுவிடுங்கள்.
தோசை சட்டியை சூடாக்கி சிறிது எண்ணெய் ஊற்றி மாவை வட்டமாக ஊற்றி மிதமான தீயில் இருபுறமும் வேகவைக்கவும்.
இப்போது ராகி தோசை ரெடி. இதனை தேங்காய் சட்னியுடன் சூடாக பரிமாறவும்
தேங்காய் சட்னி
தேங்காய், பச்சை மிளகாய், வெங்காயம் 1/2, உப்பு, இஞ்சி சேர்த்து
தாளிக்க: எண்ணெய் , கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை
ராகி சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்
100 கிராம் ராகியில் 320 கலோரிகள் உள்ளன. புரதச்சத்து 7 கிராம் உள்ளது. கார்போட்ரேட் சத்துக்கள் 67 கிராம் உள்ளது. நார்ச்சத்து 11 கிராம் உள்ளது. கால்சிய சத்து 364 மில்லி கிராம் உள்ளது. இரும்புச்சத்து 4.62 மில்லி கிராம் உள்ளது.
நீங்கள் சைவ உணவுப்பிரியர் என்றால் கேழ்வரகு சிறந்த புரதச்சத்தை வழங்குகிறது. இதை நீங்கள் தினசரி உணவிலும் சேர்த்துக்கொள்ளலாம். இது சுவை நிறைந்ததும் கூட ஆகும்.
அதிக நார்ச்சத்து நிறைந்தது. இதனால், கேழ்வரகு உங்கள் செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
ராகி, உடல் எடை குறைப்பதற்கு உதவுகிறது. இதில் உள்ள அதிக புரதச்சத்து அடிக்கடி பசி ஏற்படாமல் தடுக்கிறது.
ராகியில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. அது உடலில் செல்கள் சேதமடைவதை தடுக்கிறது.
ராகியில் தலை முடி ஆரேக்கியத்துக்கு உதவக்கூடிய ஊட்டச்சத்துக்கள், முடி உதிர்வை தடுக்கிறது. தலைமுடி வளர்ச்சியையும் அதிகரிக்கிறது.
ராகியை வழக்கமாக எடுத்துக்கொள்வது உங்கள் எலும்பு மற்றும் பற்களை வலுப்படுத்துகிறது.
கர்ப்பகாலத்திற்கு ஏற்ற உணவென்றால் அது ராகி. இது பால் சுரப்புக்கு மட்டுமல்ல தாய்ப்பாலில் ஊட்டச்சத்துக்களை அதிகரிக்கவும் உதவுகிறது.
நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. இதில் உள்ள நார்ச்சத்துக்கள் ரத்தச்சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
ராகியில் உள்ள ஃபைட்டோ கெமிக்கல்களில் கேன்சருக்கு எதிரான குணம் கொண்டது.
குளூட்டன் இல்லாத டயட் எடுத்துக்கொள்கிறீர்கள் என்றால், அதற்கு ராகி சிறந்த தேர்வு. இயற்கையிலே அது குளுட்டன் ஃப்ரியாக உள்ளது.
குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. இதில் புரதச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து, துத்தநாதம் மற்றும் முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
இதய நோய்களை தடுக்கிறது.
அனீமியாவுக்கு சிகிச்சையளிக்கிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9