தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Kovakkai Sadam : பேச்சுலர் உங்களுக்கு தான் இந்த டிஸ்.. கோவக்காய் சாதம் எப்படி செய்வது என்று பார்க்கலாமா!

Kovakkai Sadam : பேச்சுலர் உங்களுக்கு தான் இந்த டிஸ்.. கோவக்காய் சாதம் எப்படி செய்வது என்று பார்க்கலாமா!

Divya Sekar HT Tamil

Mar 06, 2024, 12:55 PM IST

google News
கோவைக்காய் சாதம் எப்படி செய்வது என்று பார்க்கலாம். இது பேச்சிலருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
கோவைக்காய் சாதம் எப்படி செய்வது என்று பார்க்கலாம். இது பேச்சிலருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

கோவைக்காய் சாதம் எப்படி செய்வது என்று பார்க்கலாம். இது பேச்சிலருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

கோவக்காய் சாதம்

தேவையான பொருட்கள்

கோவக்காய - 1/4 கிலோ

அரிசி -2 கப்

கடுகு- 1 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு- 1 டீஸ்பூன்

கடலை பருப்பு- 1 டீஸ்பூன்

சிவப்பு மிளகாய்- 5

வறுத்த வேர்க்கடலை- 2 டீஸ்பூன்

பச்சை மிளகாய்- 2

கறிவேப்பிலை

வெங்காயம் -1

தக்காளி -1

பூண்டு -10 நசுக்கியது

மிளகாய் தூள்- 1 டீஸ்பூன்

கொத்தமல்லி தூள் -1/2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன்

புளி சாறு- 2 டீஸ்பூன்

வெல்லம் சிறு துண்டு

பெருங்காயம்- 1/4 டீஸ்பூன்

கொத்துமல்லி தழை

எண்ணெய் 2 டீஸ்பூன்

செய்முறை

கோவைக்காய் சாதம் எப்படி செய்வது என்று பார்க்கலாம். இது பேச்சிலருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

முதலில் ஒரு கடாய் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் எண்ணெய் ஊற்றி. கடுகு சேர்த்து கள்ள பருப்பு, உளுந்தம் பருப்பு,, சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும். பின்னர் அதில் வரமிளகாய், வேர்க்கடலை., கருவேப்பிலை, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி விடவும்

பின்னர் பத்து பல் பூண்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதை இடித்து சேர்க்கவும். அரைக்க தேவையில்லை.. வதக்கி கொண்டிருக்கும் வெங்காயத்தில் இடித்து வைத்த அந்த பூண்டை சேர்த்து கிளறி விடவும். பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும். பின்னர் அதில் தக்காளியை சேர்க்க வேண்டும். பின்னர் நன்கு வதக்கவும்.

வதக்கிய பிறகு அதில் மிளகாய் தூள், மல்லித்தூள், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கி விடவும்.. பின்னர் அதில் நறுக்கி வைத்த கோவைக்காயை சேர்த்து வதக்க வேண்டும். கோவைக்காய் நன்கு வதங்க வேண்டும்.. தேவை என்றால் சிறிது நீர் சேர்த்து வதக்கி விடவும். அடுப்பை சிம்மில் வைத்து வதக்குவது நல்லது. அடிக்கடி வதக்கி தீய விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்..

இப்போது நன்கு வாங்கியதும் அதில் ஒரு டீஸ்பூன் புளி தண்ணீர், பெருங்காயம், சிறிது வெள்ளம் சேர்த்து கிண்டி விடவும.இப்போது வடித்த சாதத்தை இந்த கோவக்காயில் சேர்த்து நன்கு கிண்டி விடவும். இப்பொழுது உங்களுக்கு சுவையான கோவைக்காய் சாதம் ரெடி. இதனை வீட்டில் சமைத்து பாருங்கள் மிகவும் அருமையாக இருக்கும். நேரமும் உங்களுக்கு மிச்சம் ஆகும். கோவக்காய் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்ல ஒரு உணவாக உள்ளது. எனவே இதனை வாரத்தில் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டால் நல்லது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.
அடுத்த செய்தி