Street Food Masala Poori: ரோட்டுக்கடை ஸ்டைலில் சுவையான மசாலா பூரி! ஈஸியா செய்யலாம்!
Sep 29, 2024, 09:39 AM IST
Street Food Masala Poori: பெரிய ஹோட்டல்களில் சாப்பிடும் உணவுகளை விட சிறியதாக ரோட்டுக் கடைகளில் விற்கப்படும் உணவுகள் மிகுந்த ரூசியுடன் இருக்கும். அந்த உணவையே அதிககியமான மக்கள் விரும்பி உண்ணுகின்றனர்.
பெரிய ஹோட்டல்களில் சாப்பிடும் உணவுகளை விட சிறியதாக ரோட்டுக் கடைகளில் விற்கப்படும் உணவுகள் மிகுந்த ரூசியுடன் இருக்கும். அந்த உணவையே அதிகமான மக்கள் விரும்பி உண்ணுகின்றனர். இந்த ரோட்டுக்கடை உணவுகள் வரிசையில் அதிகமானோரால் விரும்பி சாப்பிடப்படும் உணவாக மசாலா பூரி இருந்து வருகிறது. நம் அனைவருக்கும் மிகவும் பிடித்த மசாலா பூரியை வீட்டிலேயே செய்யும் எளிமையான முறையை இங்கு காண்போம்.
தேவையான பொருட்கள்
2 உருளைக்கிழங்கு
2 பெரிய வெங்காயம்
8 முதல் 9 தக்காளி
சிறிதளவு பச்சை மிளகாய்
4 முதல் 5 பூண்டு
சிறிதளவு இஞ்சி
ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள்
ஒரு டீஸ்பூன் மிளகாய் தூள்
ஒரு டீஸ்பூன் ஆம்சூர் தூள்
ஒரு டீஸ்பூன் சாட் மசாலா
ஒரு டீஸ்பூன் சீரக தூள்
ஒரு டீஸ்பூன் மல்லி தூள்
ஒரு டீஸ்பூன் கரம் மசாலா
ஒரு டீஸ்பூன் பிளாக் சால்ட்
ஒரு டீஸ்பூன் இஞ்சி பொடி
ஒரு டீஸ்பூன் பொடித்த வெல்லம்
1 எலுமிச்சம் பழம்
பேரிச்சம்பழம்
சிறிதளவு புளி
10 முதல் 12 பூரி
அரை கப் ஓமப் பொடி
அரை கப் கொத்தமல்லி
அரை கப் புதினா
தேவையான அளவு எண்ணெய்
தேவையான அளவு தண்ணீர்
தேவையான அளவு உப்பு
செய்முறை
மசாலா செய்வதற்கு பட்டாணியை முந்தைய நாள் இரவே ஊற வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, புதினா, பூண்டு, இஞ்சி, மற்றும் பேரிச்சம் பழம் ஆகியவற்றை நறுக்கி கொள்ளவும். புளியை ஊற வைத்து தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் புலி சட்னி செய்வதற்கு ஒரு மிக்ஸியில் பச்சை மிளகாய், புதினா, இஞ்சி, கொத்தமல்லி, எலுமிச்சை சாறு, தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அதில் பேரீச்சம் பழத்தை பொட்டு வேக வைக்கவும். பின்னர் அதில் புளி தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். அது நன்றாக வெந்த பிறகு அதில் சீரக தூள், காஷ்மீரி மிளகாய் தூள், உப்பு, ப்ளாக் சால்ட், மல்லி தூள், பொடித்த வெல்லம், மற்றும் இஞ்சி பொடியை சேர்த்து அதை நன்கு கிளறி விடவும். அதில் தண்ணீர் சேர்த்து சிறிது நேரம் வேக விடவும். பின்னர் அதனை ஆற வைத்து மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு குக்கரில் ஊற வைத்த பட்டாணி மற்றும் உருளைக்கிழங்கை ஆறு முதல் ஏழு விசில் சூட்டில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். நன்றாக வெந்ததும் இதனை மசித்து எடுத்துக் கொள்ளவும். இப்பொழுது ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும். இவை ஆறிய பின் இவற்றையம் மிக்சியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். பின்பு அதில் மசாலா பேஸ்ட், காஷ்மீரி மிளகாய் தூள் சாட் மசாலா, மஞ்சள் தூள், கரம் மசாலா, மற்றும் ஒ உப்பு சேர்த்து அதை நன்கு கலந்து விடவும். பின்பு அதில் சுமார் அரை கப் அளவு தண்ணீர் சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு அதை சுமார் பத்து நிமிடம் வரை வேக விடவும்.
சிறிது நேரத்திற்கு பின் மசித்து வைத்திருக்கும் பட்டாணி மற்றும் உருளைக்கிழங்கு கலவையை சேர்த்து அதனுடன் சுமார் இரண்டு கப் அளவு தண்ணீர் ஊற்றி அதை நன்கு கலந்து விடவும். அதில் பட்டாணி, கொத்தமல்லியை சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு ஒரு மூடி போட்டு வேக விடவும். பின்பு ஒரு தட்டில் தயார் செய்த அணைததுயும் போட்டு, பூரியை உடைத்து விட்டு, ஓமப்பொடியை தூவி எடுத்து சாப்பிடவும். மிகவும் ருசியான ரோட்டுக்கடை மசாலா பூரி தயார்.
டாபிக்ஸ்