Tasty food: சுவையான பரங்கிக்காய் பிரியாணி செய்வது எப்படி?
Jan 25, 2023, 08:46 PM IST
சுவையான பரங்கிக்காய் பிரியாணி செய்வது எப்படி என்பது குறித்து இங்கு காணலாம்.
குளிர்ச்சியான சுபாவம் கொண்டது. இது இனிப்பாக இருப்பதால் இதை சர்க்கரைப் பூசணி என்றும் சொல்வர். பரங்கிக்காயில் வைட்டமின்கள் பி, சி ஆகிய சத்துக்கள் சிறிதளவு உண்டு.
குளிர்ச்சி உடம்பு இருப்பவர்கள் இதை சாப்பிட்டால் உடம்பு சூடு நீங்கும். பித்தம் போகும். பசியை தூண்டும். சிறுநீர் பெருகும். மூல நோய், எரிச்சல், தாகம், வயிற்றுப் பொருமல் ஆகியவற்றை குணப்படுத்தி விடும்.
பரங்கிக் கொடியின் நுனியில் காணப்படும் தளிர்களை கறி செய்து சாப்பிட்டால், வயிற்றுப் பையில் காணப்படும் பொருமல் வாய்வு, குன்மம், வறட்சி முதலிய குறைகள் நீங்கப்பெற்று நல்ல பசி உண்டாகும்.
சுவையான பரங்கிக்காய் பிரியாணி செய்யத் தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி - 2 கப்,
2 கேரட் தோல் சீவி துருவியது
துருவிய பரங்கிக்காய் (பழம் கூடாது) - ஒரு கப்,
எண்ணெய் - 5 டேபிள் ஸ்பூன்,
கொத்தமல்லி - சிறிதளவு,
உப்பு - தேவைக்கேற்ப.
அரைக்க:
புதினா - 6 டேபிள் ஸ்பூன்,
கொத்த மல்லித் தழை - 4 டேபிள் ஸ்பூன்,
தேங்காய்த் துருவல் - கால் கப்,
வேர்க்கடலை - கால் கப்,
பச்சை மிளகாய் - 3,
இஞ்சி - ஒரு சிறிய துண்டு,
மஞ்சள் தூள் - சிட்டிகை,
சின்ன வெங்காயம் - 6.
செய்முறை:
பாசுமதி அரிசியை 15 நிமிடம் ஊற விடவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை விழுதாக அரைக்கவும்.
குக்கரில் எண்ணெய் விட்டு பரங்கிக்காய் துருவலை வதக்கி, பின்னர் அரைத்த விழுதை பச்சை வாசனை போக வதக்கி,
மூன்றரை கப் நீர் விட்டு, உப்பு சேர்த்து, அரிசி சேர்த்து கிளறி குக்கரை மூடவும். ஒரு விசில் வந்ததும் இறக்கி விடவும்.
சுவையான பரங்கிக்காய் பிரியாணி ரெடி. சுடச்சுட பரிமாறவும்.