தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Mutton Kothukari Gravy : அட அட .. என்ன சுவை.. நாக்கில் எச்சில் ஊறும் சுவையான மட்டன் கொத்துக்கறி கிரேவி!

Mutton Kothukari Gravy : அட அட .. என்ன சுவை.. நாக்கில் எச்சில் ஊறும் சுவையான மட்டன் கொத்துக்கறி கிரேவி!

Divya Sekar HT Tamil

Jul 16, 2023, 07:10 AM IST

google News
மட்டன் கொத்துக்கறி கிரேவி செய்வது எப்படி என்பது குறித்து இங்கு அறிந்து கொள்வோம்.
மட்டன் கொத்துக்கறி கிரேவி செய்வது எப்படி என்பது குறித்து இங்கு அறிந்து கொள்வோம்.

மட்டன் கொத்துக்கறி கிரேவி செய்வது எப்படி என்பது குறித்து இங்கு அறிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்

மட்டன் கொத்துக்கறி - 250 கிராம்

இஞ்சி, பூண்டு - சிறிது

தேங்காய் - அரை மூடி

தக்காளி - 2

பச்சை மிளகாய் - 2

காய்ந்த மிளகாய் - 10

மல்லி - 2 டேபிள் ஸ்பூன்

சின்ன வெங்காயம் - 10

கொத்த மல்லித்தழை - 2 டேபிள் ஸ்பூன்

கடலை - 1 டேபிள் ஸ்பூன்

ஏலக்காய் - 4

கிராம்பு - 4

பட்டை - 2

மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

எலுமிச்சை - அரை மூடி

புதினா இலை - சிறிதளவு

கசகசா - ஒரு டேபிள் ஸ்பூன்

சீரகம் - அரை டீஸ்பூன்

எண்ணெய் - 5 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

செய்முறை

முதலில் கொத்துக் கறியை எடுத்து தண்ணீரில் நன்கு அலசி கொள்ளவும். பின்னர் துருவி தேங்காயைத் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்து தேங்காய்ப்பால் தனியாக எடுத்து வைக்கவும். இஞ்சி-பூண்டை நன்றாகத் தட்டி வைத்துக் கொள்ளவும்

மசாலா தயாரிக்க, அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மல்லி , பொட்டுக்கடலை, சீரகம், காய்ந்த மிளகாய், கசகசா அனைத்தையும் சேர்த்து ஓரிரு நிமிடங்கள் நன்கு வாசனை வரும் வரை வதக்கவும். நன்கு வதங்கிய உடன் அதை அடுப்பில் இருந்து இறக்கி ஆற வைத்து, சிறிது தண்ணீர் சேர்த்து அம்மியில் வைத்து நைசாக அரைக்கவும்.

இந்த விழுதை எடுத்து வைத்திருக்கும் தேங்காய்ப்பாலில் கலந்து வைக்கவும். பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் கிராம்பு, பட்டை, ஏலக்காய் சேர்த்து வதக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், தட்டிய இஞ்சி-பூண்டு சேர்த்து பச்சை வாசனை நீங்கும் வரை வதக்கவும்.

கொத்த மல்லித்தழை, புதினா இலைகளைச் சேர்த்து இலைகள் சுருங்கும் வரை வதக்கவும். தேவையான உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, கழுவி வைத்துள்ள கொத்துக்கறியைச் சேர்த்து நன்றாக 2 நிமிடங்கள் வதக்கவும். கறிக் கலவையில் தேங்காய்ப்பால்-விழுதுக் கலவையைச் சேர்த்துக் கிளறிவிட்டு 10 - 12 நிமிடங்கள் வேக விடவும். பாத்திரத்தைத் திறந்து எலுமிச்சைச் சாறு பிழிந்து கலக்கி விட்டுப் பரிமாறவும். மிகவும் அருமையான சுவையில் இருக்கும். கண்டிப்பாக வீட்டில் இதை செய்து பாருங்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.
அடுத்த செய்தி