Mint Facepack: புதினா பேஸ்பேக்கின் நன்மைகள்
Feb 12, 2023, 11:04 PM IST
புதினா பேஸ்பேக்கின் நன்மைகள் குறித்து இங்கு நாம் அறிந்து கொள்வோம்.
ஒரு சிலருக்கு முகத்தில் எவ்வளவு மேக்கப் போட்டாலும் கொஞ்ச நேரத்திலேயே கலைந்து விடும். முகத்துக்குச் செய்ய வேண்டிய அனைத்து பராமரிப்புகளையும் செய்தாலும் ஏதோ ஒன்று மிஸ் ஆன மாதிரியே இருக்கும். அது மாதிரியான குறைகலை தீர்ப்பதற்கு முதலிடத்தைப் பெற்றுள்ளது புதினா பேஸ் பேக்.
முகத்தில் இருக்கக்கூடிய கரும்புள்ளிகள், கருந்திட்டுகள், பருக்களஅ, சரும வறட்சி போன்ற அனைத்து பிரச்னைகளுக்கும் புதினா நன்மை அளிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது.
புதினா இலையோடு எந்தெந்த பொருள்களை சேர்த்து பேஸ் பேக் தயாரிப்பது என்பதைப் பற்றி இனி பார்க்கலாம்.
புதினாவும் வெள்ளரிக்காயும்-
1 வெள்ளரிக்காய், கைப்பிடி அளவு புதினா இலை, 1 டேபிள் ஸ்பூன் தேன்
முதலில் புதினா இலைகளை நன்றாகக் கழுவிவிட்டு அத்தோடு நறுக்கி வைத்துள்ள வெள்ளரிக்காயை சேர்த்து விட்டு அதன்பின் 1 டேபிள் ஸ்பூன் தேனை சேர்க்கவும்.
இதை நன்றாக மிக்ஸியில் இட்டு அரைக்கவும்.
அரைத்து வைத்த பேஸ்ட்டை தனியாக ஒரு கிண்ணத்தில் வைத்து பிரிட்ஜில் வைக்கவும். பின்னர் தேவைப்படும்போது முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் பேஸ்பேக் போட வேண்டும்.
பேஸ் பேக் நன்றாகக் காய்ந்ததும் குளிர்ந்த நீரினால் முகத்தைக் கழுவி விடவும். வாரத்துக்கு ஒரு முறை இந்த பேஸ் பேக்கை அப்ளை செய்தால் போதும் முகம் நன்றாகப் பொலிவு பெறும்.
புதினாவும் வாழைப்பழமும்-
வாழைப்பழத்தை நன்றாக மசித்து விட்டு அத்துடனஅ ஒரு கைப்பிடி புதினாவை சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்றாக பேஸ்ட் போன்று அரைத்துக் கொள்ளவும்.
அரைத்து வைத்துல்ள பேஸ்ட்டை தனியாக ஒரு கிண்ணத்தில் மாற்றிக்கொண்டு முகம் மற்றும் கழுத்தில் பூசவும்.
சருமத்தில் தடவி 10 நிமிடங்கள் விடவும். பின்னர் சாதாரண நீரில் முகத்தை கழுவி விடவும். இந்த பேஸ் பேக்கை வாரத்துக்கு இரண்டு முறை செய்து வர முகத்தில் பருக்கள், சூரிய ஒளியால் ஏற்படக்கூடிய கருமை, கரும்புள்ளிகள் நீங்கி சருமத்துக்கென தனி பொலிவைத் தரும்.
புதினாவும் எலுமிச்சை சாறும்-
தேவையான அளவு புதினா இலைகள், 1 டேபிள் ஸ்பூன் தேன், 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு
மிக்ஸியில் புதினா இலைகள், தேன், எலுமிச்சை சாறை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்து வைத்த பேஸ்ட்டை முகம் மற்றும் கழுத்தில் உள்ள கருமையான பகுதிகளின் மேல் பூசவும். பேஸ் பேக் காய்ந்ததும் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவி விடுங்கள்.
இந்த முறையை செய்து வர முகத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி சருமத்தில் உள்ள பருக்கள் போய்விடும். முகம் இளமையாகக் காட்சி தரும்.
டாபிக்ஸ்