Jaipuri Bhindi Kurkuri : வெண்டைக்காய் ரோஸ்ட்.. செம ஈஸி.. குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.. இதோ பாருங்க!
Jul 01, 2023, 06:40 AM IST
குழந்தைகளுக்கு பிடித்தமான வெண்டைக்காய் ரோஸ்ட் எப்படி செய்வது என்பது குறித்து பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
வெண்டைக்காய் - 150 கிராம்
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன்
காஷ்மீரி மிளகாய் தூள் - ½ டீஸ்பூன்
கரம் மசாலா - ¼ டீஸ்பூன்
ருசிக்க உப்பு
எலுமிச்சை சாறு ½ டீஸ்பூன்
தண்ணீர் 1 ஸ்பூன் (தேவையென்றால்)
அரிசி மாவு - ½ டீஸ்பூன்
கடலை மாவு - 2 டீஸ்பூன்
சோள மாவு - 1 டீஸ்பூன்
செய்முறை
முதலில் வெண்டைக்காய் எடுத்து கொள்ளுங்கள். அவற்றை இரண்டாக வெட்டி நீட்டமாக வெட்டிக் கொள்ளுங்கள். பின்னர் அதனை ஒரு பாத்திரத்தில் எடுத்து போட்டுக்கொள்ளுங்கள். அதில் இஞ்சி பூண்டு விழுது, அரிசி மாவு, மஞ்சள் தூள், கடலை மாவு, சோள மாவு ,காஷ்மீரி மிளகாய் தூள்,கரம் மசாலா,எலுமிச்சை சாறு, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும். வேண்டும் என்றால் சிறிது தண்ணீர் ஊற்றி மிக்ஸ் செய்து கொள்ளுங்கள்.
பின்னர் அரை மணி நேரம் நன்கு ஊறவைக்கவும். பிறகு கடாயில் எண்னெய் ஊற்றி சூடானதும் மிக்ஸ் பண்ணி வைத்த வெண்டைக்காயை அதில் போட்டு பொறித்து எடுக்கவும். இப்போது சுவையான வெண்டைக்காய் ரோஸ்ட் ரெடி. இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். வீட்டில் செய்து பாருங்கள்.
அதிகமான ரத்த சர்க்கரை அளவு நீரிழிவு நோயின் அறிகுறியாகும். இது தற்போது உலகளவில் மிகவும் பொதுவான வளர்சிதை மாற்ற நோய்களில் ஒன்றாகும். நீரிழிவு நோயாளிகள் தங்கள் சாப்பாட்டு தட்டுகளில் எதைப் பரிமாறுகிறார்கள் என்பதில் குறிப்பாக கவனமாக இருக்க வேண்டும். சமீபத்தில், பல பழங்கள் மற்றும் காய்கறிகளை வைத்து சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் இயற்கை முறையை நிரூபித்துளளனர். நீரிழிவு நோயை அவை எதிர்த்துப் போராடியுள்ளன. வெண்டைக்காய் அவற்றில் ஒன்று.
100 கிராம் வெண்டைக்காயில் 35 கலோரிகள், 1.3 கிராம் புரதம் மற்றும் 0.2 கிராம் கொழுப்பு உள்ளது.வைட்டமின் பி6, ஃபோலேட் போன்ற அத்தியாவசிய வைட்டமின்களுடன் வெண்டைக்காய் நார்ச்சத்துக்கான சிறந்த மூலமாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்