Homemade Ice cream: வீட்டிலேயே செய்யலாம் வாட்டர்மெலான் ஐஸ்க்ரீம்! குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்!
Sep 24, 2024, 12:27 PM IST
Homemade Ice cream:குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவு தான் ஐஸ்க்ரீம், இதனை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஆனால் இப்போது வரும் ஐஸ்க்ரீம்கள் நல்ல முறையில் தயாரிக்கப்படுவதில்லை.
உணவுகளில் பல வெரைட்டிகள் வந்த போதிலும் அவை அனைத்தும் சரியான முறையில் தயாரிக்கபட்டதா என்ற சந்தேகம் இருந்து வருகிறது. பல உணவுகள் எல்லா காலங்களிலும் கிடைக்கின்றன. இருப்பினும் அவற்றில் பெரும்பான்மையானவை கலப்பிடங்கள் செய்யப்பட்டவையாக உள்ளன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவு தான் ஐஸ்க்ரீம், இதனை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஆனால் இப்போது வரும் ஐஸ்க்ரீம்கள் நல்ல முறையில் தயாரிக்கப்படுவதில்லை. பல பிராண்டாட் ஐஸ் க்ரீம்கள் கூட ஃப்ரோசன் டேசர்ட் எனும் பாம் ஆயில் அதிகம் சேர்க்கப்படுவதாக கூறப்படுகிறது.
இத்தகைய ஐஸ் க்ரீம்களை சாப்பிடும் போது உடலில் தேவையற்ற கொழுப்புகளை சேர்ப்பதற்கு வழி வகை செய்கிறது எனவே குழந்தைகளின் உடலில் இத்தகைய கொழுப்புகள் சேரவிடாமல் பார்த்தக் கொள்ள வேண்டும். குழந்தைகள் ஐஸ்க்ரீம் கேட்டு அடம்பிடிக்கும் போது அவர்களுக்கு வீட்டிலேயே எளிமையான முறையில் ஐஸ்க்ரீம் செய்து கொடுக்கலாம். குழந்தைகள் விரும்பும் சுவையில் தர்பூசணி பழத்தில் ஐஸ்க்ரீம் செய்யும் முறையை தெரிந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்
- ஒரு பெரிய தர்பூசணி பழம்
- கால் லிட்டர் பால் அல்லது ஃபிரெஷ் க்ரீம்
- 100 கிராம் சர்க்கரை அல்லது கண்டெனசெட் மில்க்
செய்முறை
முதலில் தர்பூசணி பழத்தை சரி பாதியாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் உள்ள உள்ள பழப்பகுதியை ஒரு கரண்டியை பயன்படுத்தி வெளியில் எடுத்துக் கொள்ள வேண்டும். தர்பூசணி கூடை அப்படியே வைக்க வேண்டும். பின்னர் எடுத்த தர்பூசணி பல்ப் பகுதிகளை ஒரு மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் கொட்டைகளை முன்னதாக எடுத்து விட்டும் அரைக்கலாம்.
அரைத்த கலவையை அந்த தர்பூசணி கூட்டிற்குள் ஊற்ற வேண்டும். அதனுடன் பால் அல்லது ஃபிரெஷ் க்ரீம் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். மேலும் சர்க்கரை அல்லது கண்டெனசெட் மில்க் சேர்த்து கலக்க வேண்டும். இப்போது அந்த தர்பூசணியின் அடிப்பகுதியை சிறிதளவு வெட்டி சமப்படுத்திக் கொள்ள வேண்டும். இதனை ஃபிரிஜ்ஜில் ஃப்ரீஸர் உள்ளே வைத்து கட்டியாக மாறியாதும் எடுத்துக் கொள்ளலாம். இப்போது அதனை தர்பூசணி பழங்களை வெட்டி சாபிடுவது போல சாப்பிடலாம். ருசியான, பாதுகாப்பான ஐஸ்க்ரீம் ரெடி.
மற்ற பழங்களிலும் டிரை செய்யலாம்
இந்த தர்பூசணி பழத்திற்கு பதிலாக வேறு பழங்களையும் வைத்து இந்த ஐஸ் க்ரிம் செய்யலாம். மாம்பழம், ஆப்பிள் உள்பட பல பழங்களில் செய்து பார்க்கலாம். இதனை வேறு வேறு பழங்களில் செய்து தருவதால் குழந்தைகளும் குஷி ஆகி விடுவார்கள். இதனை பெரியவர்களுக்கும் கொடுக்கலாம். கோடை காலங்களில் குழந்தைகள் விரும்பும் உணவுகளை வாங்கி தர வேண்டிய கட்டாயம் எல்லா பெற்றோர்களுக்கும் உள்ளது. ஆனால் சில உணவு பொருட்கள் அவர்களுக்கு வயிற்று உபாதைகள் ஏற்படுத்தலாம். மேலும் சில உடல் நாளாக கோளாறுகள் வர வாய்ப்பு உள்ளது. இதனை முற்றிலும் தவிர்க்க இது போன்ற ரெசிபிக்கள் சிறப்பான தீர்வாக இருக்கும். வீட்டிலேயே செய்து தந்து குழந்தைகளை வியப்பு அடைய செய்யுங்கள்.
டாபிக்ஸ்