Vegetable Dosa: கோதுமை மாவில் சுவையான கிரிஸ்பி வெஜிடபிள் தோசை
Oct 13, 2023, 07:30 AM IST
சுவையான கிரிஸ்பி வெஜிடபிள் தோசை எப்படி செய்வது என பார்க்கலாம்.
தோசை என்பது பலரின் விருப்பமான காலை உணவு. ஆனால் அதற்கு முந்தைய இரவே அதை தயார் செய்து வைத்து கொள்ள வேண்டும். ஆனால் ஒரு நிமிடம் போதும். வெளியில் செல்லாமல் வீட்டிலேயே மிருதுவான சுவையான தோசை செய்யலாம்.
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு - 1 கப்
அரிசி மாவு - அரை கப்
கேரட் - 1
வெங்காயம் - 1
மிளகுத்தூள் - 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 பொடியாக நறுக்கியது
கொத்தமல்லி - பொடியாக நறுக்கியது
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
சீரகம் - அரை ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
நெய் - தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை எடுத்துக் கொள்ளவும். அதனுடன் அரிசி மாவு சேர்த்து கலக்கவும்.
நன்கு கலந்தவுடன் உப்பு, சீரகம் சேர்த்து நன்கு கலக்கவும். தோசை மாவு செய்ய போதுமான தண்ணீர் சேர்க்கவும்.
மாவு எவ்வளவு நன்றாகக் கலக்கப்படுகிறதோ, அவ்வளவு நன்றாக தோசை வரும். இந்த கலவையை மூடி 10 முதல் 15 நிமிடங்கள் ஒதுக்கி வைக்கவும்.
இப்போது அடுப்பை பற்ற வைத்து தோசை கல் வைத்து சூடாகும் வரை காத்திருக்கவும்.
சிறிது எண்ணெய் சேர்த்து நறுக்கிய காய்கறிகளைச் சேர்க்கவும். அதனுடன் பச்சை மிளகாயையும் சேர்த்து மென்மையாகும் வரை வேக விடவும்.
அடுப்பில் இருந்து அதை ஒரு பாத்திரத்தில் மாற்றி கொள்ளவும். இப்போது அதே தோசை கல்லை போட்டு கல் காய்ந்தவுடன் சூடான மாவு கலவையை ஊற்றி பரப்பவும்.
அதன் மீது வறுத்த காய்கறிகளை சேர்த்துகொத்தமல்லி தூவி வேகவிடவும். தோசையின் ஓரங்களில் நெய் ஊற்றவும்.
ஒரு பக்கம் சமைத்த பிறகு, தோசையை மறுபுறம் கவனமாகப் புரட்டி மேலும் சிறிது நேரம் வறுக்கவும். மிருதுவான சூடான வெஜிடபிள் தோசை தயார்.
இதை உங்களுக்கு பிடித்த சட்னியுடன் சுவைக்கலாம்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்