தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Sweet Poori Recipe: இன்னைக்கே செய்து பாருங்கள் இனிப்பு பூரி! வீட்டிலேயே செய்யும் அசத்தலான ரெஸிபி உங்களுக்காக!

Sweet Poori Recipe: இன்னைக்கே செய்து பாருங்கள் இனிப்பு பூரி! வீட்டிலேயே செய்யும் அசத்தலான ரெஸிபி உங்களுக்காக!

Suguna Devi P HT Tamil

Sep 24, 2024, 02:08 PM IST

google News
Sweet Poori Recipe: ஸ்வீட் பூரி குழந்தைகளுக்கு விருப்பமான உணவுகளில் ஒன்றாகும். இந்த இனிப்பு பூரி செய்வது மிகவும் சுலபமான ஒரு செயல்முறையாகும். வீட்டில் உள்ள சமையல் பொருட்களை வைத்துக் 20 நிமிடங்களில் இந்த இனிப்பு பூரியை செய்து முடிக்கலாம்.
Sweet Poori Recipe: ஸ்வீட் பூரி குழந்தைகளுக்கு விருப்பமான உணவுகளில் ஒன்றாகும். இந்த இனிப்பு பூரி செய்வது மிகவும் சுலபமான ஒரு செயல்முறையாகும். வீட்டில் உள்ள சமையல் பொருட்களை வைத்துக் 20 நிமிடங்களில் இந்த இனிப்பு பூரியை செய்து முடிக்கலாம்.

Sweet Poori Recipe: ஸ்வீட் பூரி குழந்தைகளுக்கு விருப்பமான உணவுகளில் ஒன்றாகும். இந்த இனிப்பு பூரி செய்வது மிகவும் சுலபமான ஒரு செயல்முறையாகும். வீட்டில் உள்ள சமையல் பொருட்களை வைத்துக் 20 நிமிடங்களில் இந்த இனிப்பு பூரியை செய்து முடிக்கலாம்.

இனிப்பு உணவு பொருட்கள் என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். அவர்களது மனம் விரும்பும் இனிப்பு உணவுகளுடன் சத்தானவற்றையும் கலந்து தருவது ஒரு சிறப்பான உத்தியாகும். அவர்கள் விரும்பும் இனிப்பு நிறைந்த உணவு வகைகளை அவர்களுக்கு சத்துகளை தரும் பொருட்களை கலந்து தருவதன் மூலம் இதனை செய்யலாம். உதாரணமாக ஸ்வீட் பூரி குழந்தைகளுக்கு விருப்பமான உணவுகளில் ஒன்றாகும். இந்த இனிப்பு பூரி செய்வது மிகவும் சுலபமான ஒரு செயல்முறையாகும். வீட்டில் உள்ள சமையல் பொருட்களை வைத்துக் 20 நிமிடங்களில் இந்த இனிப்பு பூரியை செய்து முடிக்கலாம். இதனை செய்யும் முறைகளை இங்கு காண்போம்.

தேவையான பொருட்கள்

1 கப் கோதுமை மாவு

1 கப் ஆல் பர்ப்பஸ் மாவு

2 கப் சர்க்கரை

1 சிட்டிகை உப்பு

1 சிட்டிகை பேக்கிங் சோடா

1/2 டீஸ்பூன் ஏலக்காய் தூள்

தேவையான அளவு எண்ணெய்

200 கிராம் பொட்டுக்கடலை 

செய்முறை

ஒரு பெரிய பாத்திரத்தில் ஒரு கப் கோதுமை மாவையும், ஒரு கப் ஆள் பர்ப்பஸ் மாவையும் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் ஒரு சிட்டிகை உப்பு, ஒரு சிட்டிகை பேக்கிங் சோடா சேர்த்து கலக்கி கொள்ள வேண்டும். இப்போது 2 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு சூடான தண்ணீர் சேர்த்து மாவை பிசைய வேண்டும். பிசைந்த மாவை 15 முதல் 20 நிமிடங்கள் மூடி வைக்கவும்.

பாகு மற்றும் பூரணம் தயாரித்தல் 

பூரியின் உள்ளே வைக்கத் தேவையான பூரணத்தை தயார் செய்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இதற்கு முதலில் பொட்டுக்கடலை, நான்கு ஏலக்காய் துண்டுகள் மற்றும் சர்க்கரை ஆகியவற்றை ஒரு மிக்கிசியில் போட்டு அரைத்து பொடியாக்கி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். 

பின்னர் பூரியை ஊற வைக்க சர்க்கரை பாகு தயாரிக்க வேண்டும். அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதனுள் ஒரு கப் அளவுள்ள சர்க்கரையை சேர்க்க வேண்டும். அதில் அரை டம்ளர் தண்ணீரை ஊற்ற வேண்டும். சிறிதளவு ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். சர்க்கரை பாகு கம்பி பதத்திற்கு வந்தவுடன் பாகை எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். 

பூரியை பொரிக்கலாம் 

மூடி வைத்திருந்த மாவை எடுத்து, உள்ளங்கையில் எண்ணெய் தடவி மாவை சிறு சிறு துண்டுகளாக உருட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். வெவ்வேறு அளவிலான பூரிகளை செய்யலாம். சிறியதாகவும், மீடியம் அளவிலும், பெரிதாகவும் பூரியை உருட்டிக்  கொள்ளலாம். இப்போது பூரி தேய்க்கும் கட்டையில் வைத்து மெல்லிசாக இருக்குமாறு தேய்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். மாவு கட்டையில் ஒட்டாத வண்ணம் காய்ந்த மாவை போட்டு சரிவர தேய்த்து கொள்ள வேண்டும்.இதனை ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். 

இவ்வாறு பொரித்து எடுத்த பூரியை சர்க்கரை பாகில் ஒரு 2 அல்லது 3 நிமிடங்கள் ஊற விட வேண்டும். பூரியின் எல்லா பக்கங்களிலும் சர்க்கரை பாகு நன்கு சேர வேண்டும். பின்னர் இந்த பூரியின் உள்ளே பூரணத்தை வைத்து, அதன் மேல் சிறிதளவு சர்க்கரை பாகை ஊற்றி பரிமாறலாம். 

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.
அடுத்த செய்தி