தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Bread Vadai: பெஸ்ட் ஈவினிங் ஸ்நாக்ஸ் பிரட் வடை செய்வது எப்படி? பக்கா ரெஸிபி இதோ!

Bread Vadai: பெஸ்ட் ஈவினிங் ஸ்நாக்ஸ் பிரட் வடை செய்வது எப்படி? பக்கா ரெஸிபி இதோ!

Suguna Devi P HT Tamil

Sep 25, 2024, 12:57 PM IST

google News
Bread Vadai: மாலை நேரங்களில் நமது வீடுகளில் டீயுடன் ஏதேனும் ஸ்நாக்ஸ் இருந்தால் ரிலாக்ஸ் ஆக சாப்பிட்டு நேரத்தை கழிக்கும் வழக்கம் இருந்து வருகிறது.
Bread Vadai: மாலை நேரங்களில் நமது வீடுகளில் டீயுடன் ஏதேனும் ஸ்நாக்ஸ் இருந்தால் ரிலாக்ஸ் ஆக சாப்பிட்டு நேரத்தை கழிக்கும் வழக்கம் இருந்து வருகிறது.

Bread Vadai: மாலை நேரங்களில் நமது வீடுகளில் டீயுடன் ஏதேனும் ஸ்நாக்ஸ் இருந்தால் ரிலாக்ஸ் ஆக சாப்பிட்டு நேரத்தை கழிக்கும் வழக்கம் இருந்து வருகிறது.

பள்ளிகளில் இருந்து  வரும் குழந்தைகள், அலுவலகத்தில் வேலை முடித்து வரும் என அனைவரும் அதிக பசியுடன் வருவார். மேலும் இரவு உணவிற்கு முன்னதாக மாலை நேரங்களில் நமது வீடுகளில் டீயுடன் ஏதேனும் ஸ்நாக்ஸ் இருந்தால் ரிலாக்ஸ் ஆக சாப்பிட்டு நேரத்தை கழிக்கும் வழக்கம் இருந்து வருகிறது. எனவே அவர்களுக்கு தினம் தினம் வெரைட்டியான, சுவையான ஸ்நாக்ஸ் செய்து தருவது என்பது கடினமான காரியம் தான். 

வழக்கம் போல செய்யும் பண்டங்களை செய்து கொடுத்தால், போர் என குழந்தைகள் வேண்டாம் என மறுத்து விடுகின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு என வித விதமான ஸ்நாக்ஸ் செய்ய வேண்டிய சுஜால் ஏற்படுகிறாகட்டு. இதற்காகவே நாம் நாள் தோறும் வடையில் ஒரு புது விதமாக செய்முறையை காணலாம். நாம் வீடுகளில் இருக்கும் பிரட் துண்டுகளை வைத்து சுவையான வடை செய்யும் முறையை இணக்கு காணலாம். 

தேவையான பொருட்கள் 

பிரட் துண்டுகள் 

3 வேக வைத்த முட்டைகள் 

சிறிதளவு இஞ்சி பூண்டு பேஸ்ட் 

அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் 

ஒரு டீஸ்பூன் மிளகாய் தூள் 

அரை டீஸ்பூன் கரம் மசாலா தூள் 

2 டேபிள் ஸ்பூன் சோள மாவு 

ஒரு பெரிய வெங்காயம் 

சிறிதளவு கொத்தமல்லி இலை 

தேவையான அளவு உப்பு 

செய்முறை 

முதலில் இரண்டு பிரட் துண்டுகளை மிக்ஸியில் போட்டு அரைத்து பொடியாக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்கு தேவையான இஞ்சி பூண்டு பேஸ்டை நாமே தயாரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு பெரிய கலவை பாத்திரத்தை எடுத்து அதில் பிரட் துண்டுகள், முட்டை, இஞ்சி பூண்டு பேஸ்ட், நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி ஆகியவைகளை போட்டு நன்றாக கிளற வேண்டும். 

பின்னர் அதில் மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், மிளகாய் தூள், சோள மாவு மற்றும் தேவையான அளவு உப்பை போட்டு நன்றாக பிசைந்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை சிறு சிறு பகுதிகளாக உருட்டி, வடை போல தாத்தா வேண்டும். பின்னர் அரைத்து வைத்திருந்த பிரட் துகளில் நன்கு பிரத்த வேண்டும். வடை போடுவதற்கு அடுப்பில் ஒரு கடாயை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய வைக்க வேண்டும். நன்றாக எண்ணெய் காய்ந்த நிலையில் தட்டி வைத்த வடையை போட்டு பொரிக்க வேண்டும். இரு பக்கமும் நன்றாக வெந்த பின்னர் எடுத்து பரிமாறலாம். சுவையான சூடான ஈவினிங் ஸ்நாக்ஸ் ரெடி. 

இது போன்ற ஸ்நாக்ஸ் செய்து கொடுத்து உங்களது வீட்டில் உள்ளவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துங்கள். மேலும் இந்த பிரட் வடை முழுக்க வீட்டிலேயே செய்த காரணத்தினால் மிகவும் சுத்தமானதாக இருக்கும். வெளி கடைகளில் விற்கப்படும் வடை சுத்தமான எண்ணெயில் பொரிக்கப்படாதவையாக இருக்கலாம். எனவே குழந்தைகளையும் வீடுகளில் செய்வதை சாப்பிட பழக்குங்கள். அவர்களும் சுவையான உணவுகளை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். வீட்டில் உள்ள பெரியவர்களுக்கும்  இது மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும். 

 

 

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.
அடுத்த செய்தி