தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Broccoli Recipe: மொறுமொறுப்பான ப்ரோக்கோலி 65, ப்ரோகோலி டிக்கா ஈஸியாக செய்யலாம்

Broccoli Recipe: மொறுமொறுப்பான ப்ரோக்கோலி 65, ப்ரோகோலி டிக்கா ஈஸியாக செய்யலாம்

Jul 28, 2023, 09:13 AM IST

google News
முட்டைக்கோஸ் வகையை சேர்ந்த சத்துக்கள் நிறைந்த காய்கறியாக திகழும் ப்ராக்கோலி டிக்கி, ப்ராக்கோலி 65 செய்யும் முறையை பார்க்கலாம்
முட்டைக்கோஸ் வகையை சேர்ந்த சத்துக்கள் நிறைந்த காய்கறியாக திகழும் ப்ராக்கோலி டிக்கி, ப்ராக்கோலி 65 செய்யும் முறையை பார்க்கலாம்

முட்டைக்கோஸ் வகையை சேர்ந்த சத்துக்கள் நிறைந்த காய்கறியாக திகழும் ப்ராக்கோலி டிக்கி, ப்ராக்கோலி 65 செய்யும் முறையை பார்க்கலாம்

ப்ராக்கோலியில் உள்ள எளிதில் கரையும் நார்ச்சத்துப் பொருள்கள், நம் உடலில் உள்ள கொலஸ்ட்ரால்களைக் குறைக்க உதவுகின்றன. புற்றுநோய் பாதுகாப்பு காரணியாக இருந்து வரும் ப்ராக்கோலி, புற்றுநோய் வராமல் பாதுகாக்கிறது.

ப்ராக்கோலி இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவினை கட்டுக்குள் வைப்பதாக உள்ளது. வெண்டைக்காய் மற்றும் வல்லாரைக் கீரையை ஞாபக சக்தியை அதிகரிப்பதாக காய்கறியாக ப்ரோக்கோலி உள்ளது. பொரியல், ப்ரை, கூட்டு, குழம்பு என அனைத்து வகை சமையலுக்கும் பொருத்தமானதாக இருக்கும் ப்ராக்கோலியை வைத்து ப்ராக்கோலி டிக்கா, ப்ராக்கோலி 65 செய்யும் முறையை பார்க்கலாம்.

ப்ராக்கோலி டிக்கா செய்வதற்கு தேவையான பொருள்கள்

ப்ராக்கோலி - 250 கிராம்

கேரட் - 2

கடலை மாவு - 3 டேபிள் ஸ்பூன்

அரிசு மாவு -1 டேபிள் ஸ்பூன்

ரவை - 1 டேபிள் ஸ்பூன்

எள் - 2 டிஸ்பூன்

காஷ்மீர் மிளகாய்தூள் - 3 டேபிள் ஸ்பூன்

சில்லி பிளேக்ஸ் - 1 டிஸ்பூன்

பெரிய வெங்காயம் - 1

இஞ்சி நறுக்கியது - 1 டிஸ்பூன்

பூண்டு நறுக்கியது - 1 டிஸ்பூன்

கொத்தமல்லி தழை - தேவைக்கு ஏற்ப

எண்ணெய் - தேவைக்கு ஏற்ப

உப்பு - தேவைக்கு ஏற்ப

செய்முறை:

கேரட் தோல் நீக்கி நன்கு துருவி, வெங்காயத்தை பொடிதாக நறுக்கி வைக்கவும். ப்ராக்கோலியை தண்ணீர் 10 நிமிடங்கள் வரை வேகவைக்கவும். இதன் பின்னர் நன்கு சுத்தம் செய்து துருவி கொள்ள வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் துருவிய ப்ராக்கோலி, கேரட், வெங்காயம், இஞ்சி, பூண்டு, எள், அரிசி மாவு, கடலை மாவு, காஷ்மீர்் மிளகாய் தூள், சில்லி ப்ளேக்ஸ், ரவை, கொல்லமல்லி தழை, உப்பு, எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். இந்த கலவை வடை மாவு பதத்துக்கு வந்தவுடன் 15 நிமிடம் அப்படியே வைத்து விட வேண்டும். பின்னர் அந்த மாவு கலவையை கட்லெட் வடிவத்தில் தட்டையாக்கி கொள்ள வேண்டும்.

வாணலி ஒன்றை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடான பின்பு, கட்லட் போன்று தட்ட வைக்கப்பட்டிருக்கும் ப்ராக்கோலியை எண்ணெய்யில் சிவப்பாக நிறம் மாறும் வரை வறுத்து எடுக்கவும். அவ்வளவுதான் சுவையும், மொறுமொறுப்பும் நிறைந்த ப்ராக்கோலி டிக்க ரெடி. இதற்கு சிறந்த சைடு டிஷ்ஷாக தக்காளி சாஸ், புதினா சட்னி வைத்து கொள்ளலாம்.

ப்ராக்கோலி 65 செய்வதற்கு தேவையான பொருள்கள்

ப்ராக்கோலி சுத்தம் செய்து நறுக்கியது - 1 கப்

மைதா மாவு - 2 டேபிள் ஸ்பூன்

சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன்

இஞ்சி மற்றும் பூண்டு நறுக்கியது - 1 டிஸ்பூன்

கொத்தமல்லி நறுக்கியது - 1 டிஸ்பூன்

கரம் மசாலா - அரை டிஸ்பூன்

காஷ்மீர் மிளகாய் தூள் - 1 டிஸ்பூன்

மிளகுதூள் - 1 டிஸ்பூன்

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை

ப்ராக்கோலி, எண்ணெய் ஆகியவற்றை தவிர மற்ற அனைத்து பொருள்களையும் ஒரு பாத்திரித்தில் வைத்து தேவியான அளவு தண்ணீர் ஊற்றி பஜ்ஜ மாவு பதத்துக்கு கரைத்து கொள்ள வேண்டும். பின் ப்ராக்கோலி துண்டுகளை அந்த கலவை சேர்த்து நன்கு கலந்துகொள்ள வேண்டும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடு ஆனதும் மசாலா, மாவு கலந்த ப்ராக்கோலியை பொன்னிறமாக பொறித்து எடுத்து சாப்பிட்டால் ப்ரோக்கோலி 65 தயார்.

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.
அடுத்த செய்தி