Home Decors Idea : உங்கள் படுக்கை அறையில் இந்த மாற்றம்! நிம்மதியான இரவு தூக்கம்! புதிய நாளுக்கான துவக்கம்!
Aug 24, 2024, 02:03 PM IST
Home Decors Idea : உங்கள் படுக்கை அறையில் இந்த மாற்றம் செய்தால், அது உங்களுக்கு நிம்மதியான இரவு உறக்கத்தைத்தரும். அது புதிய நாளுக்கான துவக்கமாக இருக்கும்.
உங்கள் படுக்கை அறையில் இந்த 8 செடிகளை நட்டு வளர்த்தீர்கள் என்றால், அது அந்த அறையில் நல்ல காற்றோட்டத்தை ஏற்படுத்தும். உங்கள் அறைக்கு நேர்மறையான மாற்றத்தைக் கொண்டுவரும். படுக்கையறையில் வைக்கக்கூடிய செடிகள் என்னவென்று முதலில் தெரிந்துகொள்ளுங்கள். உங்கள் வீட்டின் படுக்கையறையிலும் செடிகள் வளர்க்கலாம். அது உங்கள் இரவு உறக்கத்தை மேம்படுத்தும். அறையில் காற்றோட்டத்தை அதிகரிக்கும். இதனால் உங்களின் மனதுக்கு அமைதியும் ஏற்படும். உங்கள் படுக்கை அறையில் அழகு பொருட்கள் மட்டுமின்றி இந்த செடிகளையும் அழகுக்காக வைத்துக்கொள்ளலாம். இது உங்கள் வீட்டிற்கு நல்ல காற்றையும், ஆற்றலையும் கொண்டுவரும். இவற்றை உங்கள் படுக்கை அறையில் வைத்து, நிம்மதியான உறக்கத்துக்கு வழிவகை செய்யுங்கள். அது படுக்கையறையில் உள்ள காற்றை சுத்தம் செய்து உங்கள் சுவாசம் மேம்படவும் உதவும்.
பாஸ்டன் ஃபெர்ன் (Boston Fern)
பாஸ்டன் ஃபெர்ன் என்பது பசுமையான செடியாகும். இது வீட்டில் உள்ள சைலென் மற்றும் ஃபார்மால்டிஹைட் என்ற மாசுக்களை அகற்றும் தன்மை கொண்டது. இது மறைமுக சூரியஒளியிலேயே செழித்து வளரும். இதற்கு தேவைப்படும்போது, எப்போதாவது தண்ணீர் ஊற்றினால் போதும். அடிக்கடி ஊற்ற வேண்டாம் என்பதால், இந்தச் செடியை உங்கள் படுக்கையறையில் வைத்து பராமரிக்கலாம்.
ஆரோஹெட் எனப்படும் அம்புக்குறிச் செடி (Arrow Head)
இது வீட்டுக்குள் வளர்க்க ஏதுவான தாவரமாகும். இதன் இலைகள் அம்புக்குறி போன்ற வடிவில் இருப்பவையாகும். இது பசுமை மற்றும் பழுப்பு வண்ணங்களில் இருக்கும். இது இயற்கையில் காற்றை சுத்தப்படுத்தும். இது வீடுகளில் உள்ள நச்சுக்களை அகற்ற உதவுகிறது. இதை வீட்டுக்குள் வைத்து வளர்க்கலாம்.
மான்ஸ்டெரா (Monstera)
மான்ஸ்டெரா செடியும் பச்சைபசேலென பசுமையாக காட்டியளிக்கும் செடியாகும். இது அழகான இலைகளைக் கொண்டது. இதன் இலைகள் கிழிந்திருக்கும். அது இந்தச் செடிக்கு கூடுதல் அழகு சேர்குகம். இதை உங்கள் வீட்டில் வைத்து வளர்த்தால் உங்கள் வீட்டுக்கு ஒரு பணக்கார தோற்றத்தை ஏற்படுத்தும். எனவே நீங்கள் உங்கள் படுக்கையறையில் இந்தச் செடியையும் வைத்துக்கொள்ளலாம்.
அரிக்கா பால்ம் (Areca Palm)
அரிக்கா பால்ம் என்பது மற்றொரு அழகியச் செடி, சிறிய நீளமான இலைகளை கொண்ட செடியாகும். இதுவும் உங்கள் வீட்டுக்கு அழகான தோற்றத்தை தரும். இதையும் நீங்கள் படுக்கையறையில் வைத்துக்கொள்ளலாம்.
ஸ்னேக் ப்ளான்ட் எனப்படும் பாம்புச் செடி
பாம்புச் செடியின் இலைகள் பாம்புபோல் நீண்டிருக்கும் என்பதால் இதற்கு பாம்புச்செடி என்று பெயர். இந்தச் செடிக்கு குறைவான பராமரிப்பு போதும். இதற்கு குறைவான சூரியஒளி மற்றும் தண்ணீர் போதும். பல ஆண்டுகள் கூட இந்தச் செடி சூரியஒளி இல்லாமல் வளரும். மற்ற பல்புகள் அல்லது வெளிச்சம் தரும் மற்ற பொருட்களிடம் இருந்து தனக்கு தேவையான ஒளியை இது எடுத்து வளரும். வீட்டுக்குள் வளர்க்க ஏற்ற தாவரம் ஆகும்.
அதிர்ஷ்ட மூங்கில்
அதிர்ஷ்ட மூங்கில் செடிகள் மிகவும் சிறிய வகை வீட்டுச்செடிகள் ஆகும். இதை நீங்கள் வளர்ப்பது மிகவும் எளிது. இதை நீங்கள் முறையாக பராமரிக்க வேண்டிய தேவையும் இல்லை. அது தானாகவே அழகாக வளரும். இது உங்கள் வீட்டில் ஒரு இதமான சூழலை உருவாக்கும்.
இசட் இசட் தாவரம்(zz Plant)
குறைவான ஒளியிலும் நன்றாக வளரக்கூடியது இசட் இசட் தாவரம். இதற்கு குறைவான அளவு தண்ணீர் தேவைப்படுகிறது. இதன் இலைகள் வட்டமாகவும், கண்ணாடி போன்றும் தோற்றமளிக்கும். அவை காற்றை சுத்தம் செய்யக்கூடியவை. உங்கள் படுக்கையறைக்கு பளிச் தோற்றத்தை தரும்.
டாபிக்ஸ்