உங்கள் வீட்டின் தோட்டத்தை மணமணக்க வைக்கும் நறுமணம் மிக்க மலர்கள் எவை என்பதை பார்க்கலாம்
By Muthu Vinayagam Kosalairaman Aug 13, 2024
Hindustan Times Tamil
நறுமண மிக்க மலர்கள் இயற்கையான ஏர் ப்ரஷ்னர்களாக செயல்படுகின்றன. இவற்றின் புத்துணர்வு அளிக்கும் மனம் மனஅழுதத்தை குறைப்பதோடு, சுற்றுப்புற துர்நாற்றத்தையும் போக்குகிறது
உங்கள் வீட்டின் தோட்டம் அல்லது முகப்பு பகுதிகளில் வளர்க்ககூடிய நறுமணம் மிக்க மலர்கள் எவை என்பதை பார்க்கலாம்
மல்லி
ஜாஸ்மின் என்று அழைக்கப்படும் மல்லி பூக்கள் இனிமையான நறுமணத்தை வெளிப்படுத்துகிறது இரவு நேரத்தில் வெளிப்படுத்துகிறது. இதன் காரணமாக இந்த பூக்கள் இரவின் இளவரசி என்று அழைக்கிறார்கள். இந்த பூக்கள் வெள்ளை நிறத்தில் கொத்தாக வளர்கின்றன
ஹனிசக்கிள்
ட்யூப் போன்ற தோற்றத்தில் இருக்கும் இந்த பூக்கள் பெயருக்கு ஏற்றார் போல் தேன் போல் இனிமையான நறுமணத்துடன் இருக்கும். முழு சூரிய ஒளியில் ஓரளவு செழித்து வளரும் இந்த பூக்கள் உங்கள் தோட்டத்தில் கண்டிப்பாக வளர்க்ககூடிய நறுமணம் மிக்க தாவரமாகும்
ரோஜா
ரோஜா பூ நறுமணத்தை பற்றி தனியாக குறிப்பிட வேண்டியதில்லை. அதன் மெய்சிலிர்க்க வைக்கும் நறுமணம் பற்றி அனைவரும் அறிவார்கள். பல வண்ணங்களில் இருக்கும் ரோஜா பூக்கள் நன்கு வடிகட்டிய மண் மற்றும் முழு சூரிய ஒளியில் வளர்கிறது
காட்டு வேம்பூ
லிலாக் என்று அழைக்கப்படும் காட்டு வேம்பூ பூக்கள் வாசனை திரவியம் போன்ற நறுமணத்தை பகலிலும், இரவிலும் வெளிப்படுத்துகிறது. கொத்தாக வளரக்கூடிய இந்த மலர்கள் உங்கள் வீட்டு தோட்டத்துக்கு பொருத்தமானதாக இருக்கும்
ட்யூப் ரோஸ்
ரஜ்னிகந்தா என்று அழைக்கப்படும் ட்யூப் ரோஸ் பூக்கள் நீண்டு தண்டுகளில் கொத்தாக வளருகின்றன. இனிமையான மணமயக்கும் நறுமண பூக்களாக இவை இருக்கின்றன
ஜெயம் ரவி அண்மையில் தன்னுடைய மனைவியை ஆர்த்தியை பிரிவதாக கூறி அறிக்கை வெளியிட்ட நிலையில், அதற்கு ஆர்த்தி தன்னுடைய பதிலை கொடுத்திருக்கிறார்.