தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Decor Ideas: உங்கள் மொட்டை மாடி மற்றும் முற்றத்தை பண்டிகை காலத்துக்கு ஏற்ப அலங்கரித்து வைப் செய்ய சில யோசனைகள்!

Decor Ideas: உங்கள் மொட்டை மாடி மற்றும் முற்றத்தை பண்டிகை காலத்துக்கு ஏற்ப அலங்கரித்து வைப் செய்ய சில யோசனைகள்!

Marimuthu M HT Tamil

Sep 15, 2024, 08:15 PM IST

google News
Decor Ideas: உங்கள் மொட்டை மாடி மற்றும் முற்றத்தைப் பண்டிகை காலத்துக்கு ஏற்ப அலங்கரித்து வைப் செய்ய சில யோசனைகள் குறித்துக் காண்போம்! (Instagram)
Decor Ideas: உங்கள் மொட்டை மாடி மற்றும் முற்றத்தைப் பண்டிகை காலத்துக்கு ஏற்ப அலங்கரித்து வைப் செய்ய சில யோசனைகள் குறித்துக் காண்போம்!

Decor Ideas: உங்கள் மொட்டை மாடி மற்றும் முற்றத்தைப் பண்டிகை காலத்துக்கு ஏற்ப அலங்கரித்து வைப் செய்ய சில யோசனைகள் குறித்துக் காண்போம்!

Decor Ideas: பண்டிகை காலம் வந்துள்ளதால், உங்கள் வீட்டின் நான்கு சுவர்களைத் தாண்டி, உங்கள் வெளிப்புறப் பகுதிகளிலும் கொண்டாட்ட அதிர்வை நீட்டிக்க வேண்டிய நேரம் இது. 

மொட்டை மாடிகள் மற்றும் உள்முற்றம் ஆகியவை பண்டிகைக்கு ஏற்ற மனநிலையை உருவாக்குகின்றன. 

இது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை உங்கள் வீடுகளில் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிட உதவும். 

மின்னும் விளக்குகள் முதல் துடிப்பான அலங்காரம் வரை, உங்கள் வீட்டின் வெளிப்புற இடத்தைப் பிடித்த ஹேங் அவுட் இடமாக மாற்றுவதற்கு சில வல்லுநர்கள் பல்வேறு பரிந்துரைகளை அளித்துள்ளனர்.

வீட்டின் வெளிப்புறத்தை அலங்கரிக்க வல்லுநர்கள் கூறிய யோசனைகள்:

பண்டிகை காலங்களில், மொட்டை மாடிகள் மற்றும் உள் முற்றங்களை அலங்கரிப்பது பிரதானமாகும். இந்த வெளிப்புற இடத்தோற்றத்தின் அமைப்பு, நம் மனதிற்குள் விழாவினை கொண்டு வந்துவிடுகின்றன. 

மேலும் இது இயற்கை அமைப்பை மேம்படுத்தும் ஒரு ஒத்திசைவான வடிவமைப்பை உருவாக்குகிறது. மேலும், வீட்டின் உட்புறத்தில் செடிகளை வளர்ப்பது, சுற்றுச்சூழலைப் பராமரிக்கவும் உதவும். 

வீட்டில் இருக்கும் பெர்கோலாக்களில் வண்ண விளக்குகளை மாட்டுவது, கட்டடக்கலையை மேம்படுத்த அழகான வடிவமைப்பைக் கொண்டு வர உதவுகின்றன"என்று டிசைன்பிளஸ் கட்டிடக்கலை நிறுவனர் சாயா சர்மா கூறியுள்ளார். 

இதுதொடர்பாக மேலும் அவர் கூறுகையில், "மென்மையான விளக்குகள் சூரியனின் அரவணைப்பைப் பிரதிபலிக்கும் ஒரு மாயாஜால சூழலை சேர்க்கும். மேலும் துணிகளை சில இடங்களில் ஃபிக்ஸ் செய்வது, தாவரங்களை ஆங்காங்கே விளக்கு ஒளியில் மிளிரச் செய்வது, பண்டிகை உணர்வை உயிர்ப்பிக்கும். இந்த சிந்தனையுடன் வடிவமைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்கிறது’’என்றார். 

பண்டிகை கால அலங்காரங்கள்:

பண்டிகை கால அலங்காரங்களில் மிக முக்கியமானது, பண்டிகை காலத்திற்குப் பொருந்தக்கூடிய வசதியான மெத்தைகள், போர்வைகளுடன்கூடிய வெளிப்புற அமைப்பை உருவாக்குவது. மழையின்போது சாரல் விழாதவாறு ஒரு குடில் மற்றும் வசதியான பொருட்களைத் தேர்வுசெய்து, உங்கள் மொட்டை மாடியை தயார் செய்வது, ஒரு பண்டிகை கால நண்பர்களுடன் மகிழ்ச்சியாக அரட்டை அடிக்க உதவும். 

பருவகால தாவரங்கள் மற்றும் அலங்காரம்:

உங்கள் உள்முற்ற வடிவமைப்பில் பானையில் இருக்கும் தாவரங்கள், பண்டிகை காலப்பூக்களை வைத்து அலங்கரிக்கலாம். மேலும், தொங்கும் ஆபரணங்கள், அலங்கார ரிப்பன்கள் நம் மனநிலைக்கு ஏற்றவாறு ஆங்காங்கே தொங்கவிடுவது நமக்கு நல்ல மனநிலையைத் தரக்கூடியது. குறிப்பாக, செம்பருத்தி, சாமந்தி போன்ற அந்தந்த காலப் பூக்களை விழாக்களில் சேர்க்க மறக்காதீர்கள்.

தனிப்பட்ட டச்-அப்கள்:

இறுதியாக, உங்கள் பாணியை பிரதிபலிக்கும் தனிப்பட்ட மெனக்கெடல்களை, அலங்கார பணிகளில் செய்யுங்கள். மோனோகிராம் செய்யப்பட்ட தலையணைகளோ அல்லது பட்டு மெத்தைகளை நம் வீட்டின் மொட்டை மாடியிலோ, முற்றத்திலோ பயன்படுத்துவது, அந்த இடத்தை தனித்துவமாக உங்களுடையதாக மாற்றும். கூடுதலாக, சிறிய நினைவுச்சின்னங்கள், டெரோகோட்டா பொம்மைகள், மணி பிளாண்ட்களுடன் கூடிய அட்டவணை அலங்காரம், பண்டிகை அலங்காரத்திற்கு ஆளுமை உணர்வை சேர்க்கலாம்.

இந்த சிந்தனைமிக்க வடிவமைப்பு யோசனைகளைப் பயன்படுத்துவதன் மூலம், உங்கள் மொட்டை மாடி மற்றும் உள் முற்றம் ஆகியவை, உங்கள் பண்டிகை கொண்டாட்டங்களின் தடையற்ற நீட்டிப்பாக மாற்றலாம். இது பண்டிகை காலத்தை சிறந்த முறையில் மாற்றவும், மகிழ்ச்சியான வெளிப்புற இடத்தை உருவாக்கவும் உதவுகிறது. 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை