Tissue Issue : துணியை உபயோகிக்காமல் எதற்கெடுத்தாலும், டிஷ்யூவை கையில் எடுப்பவரா? ஆபத்தை பாருங்க!
Tissue Issue : துணியை உபயோகிக்காமல் எதற்கெடுத்தாலும், டிஷ்யூவை கையில் எடுப்பவரா? அதில் எத்தனை ஆபத்து உள்ளது எனப்பாருங்கள்.

இன்றைய நவீன காலத்தில் நாம் எதற்கெடுத்தாலும், டிஷ்யூவை கையில் எடுக்கத் துவங்கிவிட்டோம். துணியையோ, கர்சீப்பையோ உபயோகிப்பதில்லை. அது துணியளவுக்கு ஈரத்தை உறிஞ்சாது. ஆனால் அதை நாம் துடைப்பதற்கு பயன்படுத்தப் பழகிவிட்டோம். அது வெறும் பேப்பர் கிடையாது என்றால் உங்களால் நம்ப முடிகிறது. சில நேரங்களில் பொரித்த உணவுகளை எண்ணெய் உறிஞ்ச வைப்பதற்கு கூட நாம் இப்போது டிஷ்யூ பேப்பர் உபயோகிக்கத் துவங்கிவிட்டோம் அல்லது அதில் உள்ள எண்ணெயை பிழிந்து எடுப்பதற்கும் நாம் டிஷ்யூ பேப்பரை பயன்படுத்துகிறோம். அதில் வேதிப்பொருட்கள் கலக்கப்படுகிறது என்றால் நீங்கள் நம்புவீர்களா? ஆனால், அதுதான் உண்மை. அந்தப் பேப்பரை நாம் உபயோகிக்க பழகிவிட்டோம். ஆனால் இதுவும் தாமதமல்ல, நாம் தொடர்ச்சியாக அந்த பேப்பரை உபயோகிக்க பழகிவிட்டால், அதை நம்மால் மாற்றிக்கொள்ள முயற்சிக்கலாம்.
டிஷ்யூ பேப்பர் தயாரிக்கும் முறை
மறுசுழற்சி செய்யும் பேப்பர்களை பயன்படுத்தி பேப்பர் இயந்திரங்கள் மூலம் டிஷ்யூ பேப்பர்கள் தயாரிக்கப்படுகிறது. இதில் சுத்தம் செய்ய, ஃபேஷியல் செய்ய, பேப்ப்ர் டவல், பேக்கிங் என பல்வேறு வகை டிஷ்யூக்கள் உள்ளது. வளர்ந்த நாடுகளில் இதன் பயன்பாடு 6 மில்லியன் முதல் 21 மில்லியன் வரை உள்ளது. நகரமயமாக்கல் காரணமாக அது அதிகரித்து வருகிறது. மறுசுழற்சி நார்களையும் டிஷ்யூ பேப்பர் தயாரிக்க சில நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. இது பேப்பரை மறுசுழற்சி செய்து தயாரிக்கப்படுகிறது என்பதாலும், சுற்றுச்சூழலுக்கு உகந்தது என்று கூறப்பட்டாலும், இதில் கலக்கப்படும் நச்சுக்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கிறது.
டிஷ்யூ பேப்பரில் உள்ள ஆபத்து
டிஷ்யூ பேப்பர் நல்லது என்றே பலரும் இதுநாள் வரை கருதுகின்றனர். கடையில் நீங்கள் வடை போன்றவற்றை சாப்பிடும்போது அதில் உள்ள எண்ணெயை உறிஞ்ச நியூஸ் பேப்பரை சிலர் பயன்படுத்துவார்கள். அதற்கு பதில் தற்போது டிஷ்யூ பேப்பர்களை பயன்படுத்துகிறார்கள். காரணம் கேட்டால், நியூஸ் பேப்பரில் உள்ள அச்சுக்கள் வடையில் ஒட்டிக்கொள்ள வாய்ப்பு இருக்கும். ஆனால் டிஷ்யூ பேப்பரில் அது தவிர்க்கப்படும் என்று கூறுவார்கள்.