தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  உங்கள் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை அழிக்கும் 8 நச்சுப் பழக்கங்கள் இவைதான்!

உங்கள் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை அழிக்கும் 8 நச்சுப் பழக்கங்கள் இவைதான்!

Priyadarshini R HT Tamil

Nov 08, 2024, 07:00 AM IST

google News
உங்கள் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை அழிக்கும் 8 நச்சுப் பழக்கங்கள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
உங்கள் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை அழிக்கும் 8 நச்சுப் பழக்கங்கள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

உங்கள் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை அழிக்கும் 8 நச்சுப் பழக்கங்கள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

உங்கள் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை அழித்து, வயிற்றின் ஆரோக்கியத்தைப்போக்கும் நச்சுப்பழக்கங்கள் என்னவென்றும், அவற்றை எப்படி தடுப்பது என்றும் பாருங்கள். நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்களோ, அதுதான் நீங்கள் என்பது மிகுந்த உண்மை நிறைந்த வார்த்தைகள், இது நீங்கள் சாப்பிடும் உணவை மட்டும் குறிப்பது கிடையாது. நீங்கள் என்ன பழக்கங்களைக் கொண்டுள்ளீர்கள் என்பதையும் குறிக்கிறது. இவையனைத்தும் உங்கள் குடல் ஆரோக்கியத்தை பாதிக்கிறது. எனவே இந்த நச்சுப்பழக்கங்களை நீங்கள் தவிர்த்தால், அது உங்கள் உடலில் ஒட்டுமொத்தமாக எண்ணற்ற ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கிறது. இது உங்கள் குடல் கோளாறுகளை போக்குகிறது.

அன்றாட வழக்கத்தை மாற்றுவது

நீங்கள் அன்றாடமாக ஒரு வழக்கத்தை வைத்துக்கொள்ளவில்லையென்றால், அது உங்கள் உடலின் உட்புற கடிகாரத்தைப் பாதிக்கிறது. அது உங்கள் வயிற்றில் எத்தனை சிறப்பான செரிமானம் நடந்தாலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே சாப்பாட்டை தவிர்ப்பது, நேரம் தவறி சாப்பிடுவது, நீண்ட நேரம் சாப்பாடு உட்கொள்ளாமல் இருப்பது, இதனால் வயிற்றுக்கோளாறுகள், செரிமான பிரச்னைகள் மற்றும் ஆசிட் எதிர்ப்புகள் நடக்கிறது.

இரவு

இரவு தாமதமாக உறங்கச் செல்வது மற்றும் உணவு உட்கொள்வது இரண்டும் உடலுக்கு எண்ணற்ற தீமைகளைக் கொண்டுவருகிறது. இதனால் பெரிய கோளாறுகள் ஏற்படாததுபோல் தோன்றலாம். ஆனால் உறக்கம் தடைபட்டால், அது செரிமான ஹார்மோன்கள் உற்பத்தியைக் குறைக்கிறது. குடல் பாக்டீரியாக்களின் சமஅளவைப் போக்குகிறது. உறக்கமின்மையால் உங்களுக்கு மனஅழுத்தம் ஏற்படுகிறது. இது உங்கள் வயிறு கோளாறுகளை மோசமாக்குகிறது. இது உங்கள் வயிற்றுக்கு பதப்படுத்தப்பட்ட உணவுகள் கொடுக்கும் கேட்டைக் கொடுக்கிறது.

சாப்பாடு

சரியாக சாப்பிடாதது, சாப்பாட்டை தவிர்ப்பது செரிமானக் கோளாறுகளை அதிகம் ஏற்படுத்துகிறது. சாப்பாட்டை நீண்ட நேரம் தவிர்ப்பதால், செரிமான மண்டலம் வழக்கமற்ற முறையில் இயங்கும். இதனால், வயிறு உப்புசம், அசிடிட்டி மற்றும் வயிறு எரிச்சல் ஆகியவை ஏற்படுகிறது. உங்கள் குடல் ஆரோக்கியத்தை பாதிக்கும்.

காலை உணவை தவிர்ப்பது

காலை உணவு என்பதுதான் ஒரு நாளின் முக்கிய உணவு ஆகும். இரவு முழுவதும் இருக்கும் விரதத்தைப் போக்குவது காலை உணவுதான். உங்கள் நாளை துவக்க உடலுக்கு தேவையான ஒன்று. இது உங்கள் உடலின் வளர்சிதைக்கும் உதவுகிறது. உங்கள் செரிமான ஆரோக்கியம் நீங்கள் காலை உணவை தவிர்ப்பது கடுமையான பாதிப்புக்களை ஏற்படுத்தும். இதனால் நீங்கள் நாளின் மற்ற நேரத்தில் அதிகம் உண்பீர்கள். இது உங்கள் வயிற்றுக்கு அதிக சிரமத்தைத் தரும்.

போதிய நார்ச்சத்துக்கள் சாப்பிடாதது

நார்ச்சத்துக்கள் தான் ஆரோக்கியமான குடலின் ஆதாரம். நாம் நார்ச்சத்துக்கள் அதிகம் எடுப்பதில்லை. பழங்கள் மற்றும் காய்கறிகளில்தான் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. உங்கள் செரிமான மண்டலத்தில் உள்ள உணவை தள்ள உதவுவதே நார்ச்சத்துக்கள்தான். இது உங்கள் குடல் பாக்டீரியாக்களுக்கு துணையாக உள்ளது. மலச்சிக்கல் மற்றும் வயிறு உப்புசம் போன்றவற்றைத் தடுக்கிறது.

மனஅழுத்தம்

நாள்பட்ட மனஅழுத்தம் வயிறு ஆரோக்கியத்தை பாதிக்கும். இதகால் செரிமானத்தில் தாமதம் முதல் எண்ணற்ற கோளாறுகளை ஏற்படுத்தும். இதனால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல்போகும். நீங்கள் அதிக மனஉளைச்சலில் இருக்கும்போது, உங்கள் உடல் அதிக கார்டிசாலை உற்பத்தி செய்கிறது. இது உங்கள் குடல் பாக்டீரியாக்களை அடித்து விரட்டும் ஹார்மோன் ஆகும். இதனால் உங்களுக்கு வயிற்றில் வலி உப்புசம் உள்ளிட்ட பல்வேறுகோளாறுகள் ஏற்படுகின்றன.

சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள்

சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் சாப்பிடுவது உங்களுக்கு ஏற்றதாக இருக்கலாம். ஆனால் அவை உங்கள் குடலில் நச்சுக்களை உருவாக்குகிறது. இந்த உணவுகளில் நார்ச்சத்துக்கள் குறைவாக இரக்கும். அதிகளவில் நச்சுக்கள்தான் கலந்திருக்கும். இதில் உள்ள பிரிசர்வேட்டிவ்கள் மற்றும் செயற்கை சர்க்கரை ஆகியவை உங்கள் குடலில் அழுத்தத்தை ஏற்படுத்தி, வயிற்றில் உள்ள பாக்டீரியாக்களை இயற்கை முறையில் சமமாக்கி, வயிறு வீக்கம் ஆகியவற்றைப் போக்குகிறது.

குறைவாக தண்ணீர் பருகுவது

உணவை உடைக்க தண்ணீர் பயன்படுகிறது. இது உங்கள் உடலில் உள்ள ஊட்டச்சத்துக்களை நன்முறையில் உறிஞ்சுகிறது. இது மலச்சிக்கலைத் தடுக்கிறது. போதிய அளவு நீங்கள் அன்றாடம் தண்ணீர் பருகுவது மிகவும் முக்கியமானதாகும். இதனால் உங்கள் செரிமான ஆரோக்கியம் மேம்படும். உங்கள் வயிறு உப்புசம் நீங்கும். உங்கள் வயிற்றில் உள்ள அசவுகர்யங்கள் போகும்.

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை