தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Herbal Drinks For Summer: உடல் உஷ்ணம், சரும பாதுகாப்பு..! கோடையில் நோய் பாதிப்பை தடுக்கும் மூலிகை குடிநீர்கள்

Herbal Drinks for Summer: உடல் உஷ்ணம், சரும பாதுகாப்பு..! கோடையில் நோய் பாதிப்பை தடுக்கும் மூலிகை குடிநீர்கள்

Mar 22, 2024, 05:49 PM IST

google News
கோடையில் உடல் உஷ்ணம், பித்தத்தை குறைத்து ஆற்றலும், நோய் எதிர்ப்பு சக்தியையும் தரக்கூடிய சில மூலிகை பானங்கள் இருக்கின்றன. அவை பற்றி தெரிந்து கொள்ளலாம்
கோடையில் உடல் உஷ்ணம், பித்தத்தை குறைத்து ஆற்றலும், நோய் எதிர்ப்பு சக்தியையும் தரக்கூடிய சில மூலிகை பானங்கள் இருக்கின்றன. அவை பற்றி தெரிந்து கொள்ளலாம்

கோடையில் உடல் உஷ்ணம், பித்தத்தை குறைத்து ஆற்றலும், நோய் எதிர்ப்பு சக்தியையும் தரக்கூடிய சில மூலிகை பானங்கள் இருக்கின்றன. அவை பற்றி தெரிந்து கொள்ளலாம்

கோடை காலம் தொடங்கிவிட்டதால் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கமானது அதிகரித்து வருகிறது. அதிக வெப்பம் காரணமாக உடலில் உஷ்ணம் அதிகரித்து அதுதொடர்பாக நோய் பாதிப்புகளையும், தொற்றுகளையும் ஏற்படுத்தலாம்.

அதேபோல் தண்ணீர் காரணமாகவும் சில நோய் தொற்றுகள் உண்டாகி உடலில் உபாதைகளை ஏற்படுத்தலாம். உடல் சூட்டை கட்டுப்படுத்தவும், உஷ்ணம் காரணமாக ஏற்படும் நோய் பாதிப்பை தவிர்க்கவும் அன்றாடம் பரும் தேநீர், காபிகளுக்கு பதிலாக சில மூலிகை குடிநீர் பருகுவதை பழக்கமாக்கி கொள்ளலாம். இதன் மூலம் உடலுக்கு ஆற்றல் கிடைப்பதுடன், நோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கலாம்

உடலுக்கு சக்தியை கொடுப்பதோடு மட்டுமல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க உதவும் மூலிகை குடிநீர்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்

ஆவாரம் பூ குடிநீர்

ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டதாக ஆவாரம் பூ இருக்கிறது. சர்க்கரை நோய் பாதிப்பு கட்டுப்படுத்தும் தன்மையை கொண்டிருக்கும் இந்த ஆவாரம் பூக்கள் அல்லது காய வைத்த இதன் பொடிகளை தண்ணீரில் கொதிக்க வைத்து பருகலாம்.

இது உடல் சூடு, நீர்க்கடுப்பு, உதிரப்போக்கு, குடல் புண், வயிற்று புண் போன்றவற்றை நீக்க உதவுகிறது. ஒழுகற்ற மாதவிலக்கு, பித்தம் அதிகமாக இருப்பவர்களும் ஆவாரம் பூ குடிநீர் பருகலாம்

சர்க்கரை நோய் பாதிப்பு இருப்பவர்களுக்கு சிறந்த குடிநீராக இருப்பதுடன், ரத்தத்தை சுத்தப்படுத்தவும், உடலில் இருக்கும் தேவையற்ற கழிவுகளை நீக்கவும் செய்கிறது. இது எல்லாவற்றுக்கும் மேலாக சருமத்துக்கு மினுமினுப்பும் பொழிவும் தருகிறது.

துளசி குடிநீர்

அநேகம் பேர் வீட்டிலும் இருக்ககூடிய செடியாக துளசி உள்ளது. வெறும் வயிற்றில் துளிசி இலைகள் உண்டாலே எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை பெறலாம். சிறந்த அருமருந்தாக இருந்து வரும் துளிசியுடன், சீரகம் சேர்த்து தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும்.

இந்த நீரை தொடர்ந்து பருகி வருவதன் மூலம் உடல் சூடு, பித்தம், பித்தம் போன்றவை தணியும். மஞ்சள்காமாலை, மலேரியா, கலாரா போன்ற நோய் பாதிப்புகள் ஏற்படுவதை தடுக்கும்.

அதேபோல் தொண்டை சலி, வறட்டு இருமல், புகைச்சல், தலையில் நீர் கோர்தல் போன்றவற்ரை நீக்குவதுடன் ரத்தத்தையும் சுத்தப்படுத்தும்

வல்லாரை நீர்

பல்வேறு நோய் பாதிப்புகளுக்கு கொடுக்கப்படும் மருந்துகளுக்கு துணை மருந்தாக வல்லாரை இருந்து வருகிறது. மூளைக்கும் அதன் செயல்பாட்டுக்கும் ஏற்ற மருந்தாக இருந்து வரும் வல்லாரை, ஞாபக சக்தியை அதிகரிக்க உதவுகிறது

காய வைத்த வல்லாரை பொடியை நீரில் போட்டு கொதிக்க வைத்து பருகலாம். இது ரத்தத்தில் ஏற்படும் இரும்புசத்து குறைப்பாட்டை போக்கி, ரத்த சோகையை நீக்கும். நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுக்கும். மூட்டு வலிக்கு சிறந்த மருந்தாக இந்த வல்லாரை நீர் இருந்து வருகிறது.

கரிசாலை நீர்

கண்களின் ஆரோக்கியத்தை பேனி கூர்மையான பார்வையை பெற உதவுகிறது கரிசாலை. அதுமட்டுமில்லாமல் உடலுக்கு தேவையான இரும்புச்சத்துகளையும் தருகிறது. வெள்ளை கரிசாலை இலை எடுத்து, அதனுடன் முசுமுசுக்கை இலை, சீரக்கத்தூள், பணங்கற்கண்டு ஆகியவை சேர்த்து நீரில் கொதிக்க வைத்து காலை, மாலை என இரு நேரங்களிலும் பருகலாம்.

இது ரத்தத்தில் இருக்கும் பித்தத்தை குறைத்து, ரத்த அழுதத்ததை சீராக வைக்க உதவுகிறது. எலும்புகள் தேய்மானம் அடைவதை தடுக்கும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை