தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Summer Foods For Toddler: கோடையில் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய சத்தான உணவுகள் இதோ!

Summer Foods for Toddler: கோடையில் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய சத்தான உணவுகள் இதோ!

May 09, 2024, 06:02 PM IST

google News
வெயில் வாட்டி வதைக்கும் இந்த கோடை காலத்தில் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை கொடுப்பதன் மூலம் உங்கள் குழந்தைகளின் உடல் ஆரோக்கியம் பேனி பாதுகாக்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் உங்கள் குழந்தைகளுக்கு கொடுக்ககூடிய சத்தான உணவுகள் எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்
வெயில் வாட்டி வதைக்கும் இந்த கோடை காலத்தில் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை கொடுப்பதன் மூலம் உங்கள் குழந்தைகளின் உடல் ஆரோக்கியம் பேனி பாதுகாக்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் உங்கள் குழந்தைகளுக்கு கொடுக்ககூடிய சத்தான உணவுகள் எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்

வெயில் வாட்டி வதைக்கும் இந்த கோடை காலத்தில் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை கொடுப்பதன் மூலம் உங்கள் குழந்தைகளின் உடல் ஆரோக்கியம் பேனி பாதுகாக்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் உங்கள் குழந்தைகளுக்கு கொடுக்ககூடிய சத்தான உணவுகள் எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்

கோடை காலத்தில் நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு தரும் உணவானது அவர்களுக்கு சூட்டை ஏற்படுத்தாமல் இருப்பதை முக்கியமாக கவனிக்க வேண்டும். ஏனென்றால் தவறான உணவுகள் குழந்தைகளின் வயிற்றுக்கு தொல்லை தருவதோடு மட்டுமல்லாமல் அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியையும் குறைத்துவிடும். எனவே அவர்கள் செரிமான ஆரோக்கியத்தை மனதில் வைத்து உடல் ஆற்றலை அதிகரிப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்தும் உணவுகள் சிலவற்றை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

வில்வ பழம் 

மர ஆப்பிள் என்று அழைக்கப்படும் இந்த வில்வ பழம் உங்கள் குழந்தைகளின் கோடை கால உணவு பழக்கத்துக்கு இன்றியமையாமல் இடம்பெற வேண்டும். இவை பல்வேறு நன்மைகளை தருகிறது. இதில் வைட்டமின் ஏ, சி, பி காம்பிளகஸ், தாதுக்கள், பொட்டாசியம், மக்னீசியம் நிறைந்துள்ளது. செரிமானம் தொடர்பான பிரச்னைகளுக்கான சிறந்த உணவாக வில்வ பழங்கள் உள்ளன. இதில் ஆன்டி பாக்டீரியா, ஒட்டுண்ணி எதிர்ப்பு தன்மை அதிகமாக உள்ளது. அதுமட்டுமில்லாமல் இதிலுள்ள மளமிளக்கி பண்புகள் மலச்சிக்கல் ஏற்படுவதை தவிர்க்கிறது. இந்த பழங்களில் உள்ள இரும்பு மற்றும் வைட்டமின் சி, ரத்த சோகை ஏற்படாமல் தடுப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

தயிர்

தயிர் உடலை குளிர்ச்சியாக வைக்கிறது. அதிலுள்ல ப்ரோபையோடிக்ஸ் குழந்தைகளின் குடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. இதில் லேக்டோபேசில்லஸ் நிறைந்தது. ஒரு வகை பாக்டீரியாவான இது குடல் இறக்கத்தை சமநிலைப்படுத்துகிறது. அத்துடனம் அமிலத்தன்மை மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படுவதை தடுக்கிறது. தயிரில் அதிக அளவிலான கால்சியம், பாஸ்பரஸ், புரதம் ஆகியவை வலுவான எலும்புகள், பற்கள் மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சியை பெற உதவுகிறது. தயிரை பல வகைகளில் குழந்தைகளின் உணவுகளோடு சேர்த்து கொடுக்கலாம். ரைத்தா, லஸ்ஸி, மோர், தயிர் சாதம், பழங்கள் சேர்த்து கொடுக்கலாம்.

பார்லே 

கோடைக்கான சிறந்த தானியமாக பார்லே உள்ளது. இதில் அதிகமாக டயட் பைபர், பாஸ்பரஸ், காப்பர், போலேட், செலினியம், மக்னீசியம் நிறைந்துள்ளன. மேற்கூறியவற்றில் உள்ள நார்ச்சத்துக்கள் மென்மையான குடல் இயக்கங்களை உறுதி செய்கிறது. அதேபோல் குடலில் ஆரோக்கியமான பாக்டீரியாக்கள் வளர வழி வகுக்கிறது. கோடை காலத்தில் பார்லியை தண்ணீரில் கலந்து பருகுவதால் உடல் குளிர்ச்சியடையும். இதன் குழந்தைகளுக்கு கஞ்சியாகவும், சூப் மற்றும் பேன் கேக் போன்றும் தயார் செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

சுரைக்காய்

சுரைக்காயில் 96 சதவீதம் வரை தண்ணீர் நிரம்பியுள்ளது. இதன் காரணாக அவை தாகத்தை தணிப்பது மட்டுமல்லாமல், உடலில் குளிர்ச்சியையும் உண்டாக்குகிறது. சுரைக்காயில் தண்ணீர் போக வைட்டமின் சி, ஏ, போலேட், கால்சியம், மக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துகளும் நிரம்பியுள்ளன. இது ஒரு இயற்கை மளமிளக்கியாக இருப்பதால் குழந்தைகளின் செரிமான பிரச்னையை போக்க உதவுகிறது. குடற்புழுக்களை நீக்குவதற்கான சிறந்த உணவாக சுரைக்காய் உள்ளது. இதனை சூப், ரைத்தா, கீர், ரொட்டியின் உள்ள ஸ்டப் செய்து, குழம்பாக என பல்வேறு வகைகளில் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

இளநீர் 

எளிதில் செரிமானம் ஆகக்கூடிய இளநீர், தாயப்பாலுக்கு பிறகு குழந்தைகளுக்கான சிறந்த பானமாக உள்ளது. கோடை காலத்தில் இந்த பானத்தை அடித்துக்கொள்ளும் விதமாக வேறெதுவும் இருப்பதில்லை. இதில் எலக்ட்ரோலைட், பொட்டாசியம் ஆகியவை நிரம்பியுள்ளன. இதன் மூலம் கோடையில் உடலில் நீர் இழப்பு ஏற்படுவது தவிர்க்கப்படுவதுடன், உடலுக்கு ஊட்டம் அளிப்பதாக உள்ளது. பழங்களால் தயார் செய்யப்படும் ஸ்மூத்தீஸ்களுக்கு சிறந்த பேஸ் கலவையாக பயன்படுத்தலாம். இதன் சுவையை மேலும் அதிகரிக்க எலுமிச்சை அல்லது புதினா இலைகளை சேர்த்து பருகலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி