தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Health Tips : சட்டுன்னு குறைக்கணுமா சர்க்கரையை? வாரத்தில் 2 நாள் இதை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள்!

Health Tips : சட்டுன்னு குறைக்கணுமா சர்க்கரையை? வாரத்தில் 2 நாள் இதை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள்!

Priyadarshini R HT Tamil

Feb 27, 2024, 01:36 PM IST

google News
Health Tips : சட்டுன்னு குறைக்கணுமா சர்க்கரையை? வாரத்தில் 2 நாள் இதை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள்!
Health Tips : சட்டுன்னு குறைக்கணுமா சர்க்கரையை? வாரத்தில் 2 நாள் இதை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள்!

Health Tips : சட்டுன்னு குறைக்கணுமா சர்க்கரையை? வாரத்தில் 2 நாள் இதை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள்!

ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க வேண்டுமென்றால், வாரத்தில் நீங்கள் இரண்டு நாட்கள் கட்டாயம் இதை எடுத்துக்கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி, ஹீமோகுளோபின் குறைபாட்டை சரிசெய்யும். ரத்தத்தை சுத்தம் செய்யும். ரத்தத்தில் உள்ள நச்சுக்களை நீக்கிடிவிடும். உடலில் புது ரத்தம் ஊற துவங்கும்.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும். இதில் அதிகளவில் வைட்டமின் சி சத்துக்கள் உள்ளது. இதனால் உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்கும்.

தேவையான பொருட்கள்

சுண்டைக்காய் – ஒரு கப்

எண்ணெய் – 2 ஸ்பூன்

கடுகு – 1 ஸ்பூன்

உளுந்தம் பருப்பு – ஒரு ஸ்பூன்

சீரகம் – ஒரு ஸ்பூன்

புளி – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

பெரிய வெங்காயம் – 1 (நறுக்கியது)

வர மிளகாய் – 7

பூண்டு – 8 பல்

(நுண் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. உடலில் இருக்கக்கூடிய கிருமிகளை அழிக்கிறது. கொழுப்பை கரைக்கிறது. ஆன்டி-ஆக்ஸிடன்ட், ஆன்டி இன்ஃப்ளேமேட்ரியும் உள்ளது. ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். ரத்தத்தில் கொழுப்பு சேர்ந்து, அது ரத்த குழாயில் படிவதையும் தடுக்கிறது. ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் எண்ணிக்கையை பராமரித்து நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவுகிறது.

இதில் இரும்புச்சத்துக்கள் உள்ளது. ரத்த சோகையை எதிர்த்து போராடும். நரம்பு மண்டலத்துக்கு சக்தியை தரும். மலச்சிக்கலை போக்கும். வயிறு தொடர்பான பிரச்னைகளை சரிசெய்யும். மூலம், மூலக்கடுப்பு, மூலச்சூடு என அனைத்தையும் சரிசெய்யும். செரிமானத்தை தூண்டும். தாய்ப்பாலை சுரக்கச்செய்யும். உடலில் உள்ள நச்சுக்களை கரைத்து வெளியேற்றும். சித்த மருத்துவத்தில் சுண்டைக்காயில் பயன்பாடு அதிகம். இதை பல மருந்துகள் தயாரிக்கப் பயன்படுத்துகிறார்கள்.

இதில் உள்ள தயாமின், ரிபோஃப்ளோவின், வாய்ப்புண், சொத்தைப் பற்கள் உருவாவதை தடுக்கிறது. காய்ச்சல் நேரத்தில் உணவில் சுண்டைகக்காயை கட்டாயம் சேர்க்க வேண்டும். ரத்த அணுக்களை அதிகரிப்பதால், காயங்கள் மற்றும் புண்களை அதிகரிக்கும். கண் பார்வைத்திறனை அதிகரிக்கும்.

சுண்டைக்காய் கசக்கும் தன்மை உடையது. கசக்காத ரெசிபியாக்க வேண்டும்.

செய்முறை

சுண்டைக்காயை உரலில் உடைத்து அது இரண்டாக உடைந்தது. அதை உடனாடியாக தண்ணீரில் சேர்த்துவிடவேண்டும். இதை ஒருமுறை மட்டுமே கழுவ வேண்டும்.

ஒரு கடாயில், எண்ணெய், கடுகு, உளுந்தம்பருப்பு, சீரகம் அனைத்தும் பொரிந்தவுடன், நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். வரமிளகாய், பூண்டு மற்றும் சுண்டைக்காய் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

பின்னர் ஆறியவுடன் இதை மிக்ஸி ஜாரில் சேர்த்து, உப்பு, சிறிதளவு புளி சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும்.

இதை சாதத்துடன் எண்ணெய், நெய் விட்டு சாப்பிடலாம். இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி என எதனுடன் வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

வயிற்றில் பூச்சி உள்ள குழந்தைகளுக்கு இந்த துவையல் அடிக்கடி கொடுக்க பூச்சிகள் வெளியேறும். இதை யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து, ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.
அடுத்த செய்தி