தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  இதய ஆரோக்கியம் முதல் நோய் எதிர்ப்பு சக்தி வரை! புரோட்டீன் மில்க் ஷேக் செய்வது எப்படி?

இதய ஆரோக்கியம் முதல் நோய் எதிர்ப்பு சக்தி வரை! புரோட்டீன் மில்க் ஷேக் செய்வது எப்படி?

Suguna Devi P HT Tamil

Nov 17, 2024, 12:47 PM IST

google News
புரத சத்தை எளிமையாக வழங்கும் ஒரு உணவுப் பொருள் தான் பாதாம் மற்றும் பேரீட்சை பழங்கள் கலந்து செய்யப்பட்ட புரோட்டீன் ஷேக். இதனை எளிமையாக நமது வீடுகளில் செய்து குடிக்கலாம். இதனை தினமும் குடிக்கும் போது உடலின் உறுப்புகள் சீராக இயங்கும். இதனை எளிமையாக வீட்டிலேயே எப்படி செய்வது என்பதை இங்கு காண்போம். (Pixabay)
புரத சத்தை எளிமையாக வழங்கும் ஒரு உணவுப் பொருள் தான் பாதாம் மற்றும் பேரீட்சை பழங்கள் கலந்து செய்யப்பட்ட புரோட்டீன் ஷேக். இதனை எளிமையாக நமது வீடுகளில் செய்து குடிக்கலாம். இதனை தினமும் குடிக்கும் போது உடலின் உறுப்புகள் சீராக இயங்கும். இதனை எளிமையாக வீட்டிலேயே எப்படி செய்வது என்பதை இங்கு காண்போம்.

புரத சத்தை எளிமையாக வழங்கும் ஒரு உணவுப் பொருள் தான் பாதாம் மற்றும் பேரீட்சை பழங்கள் கலந்து செய்யப்பட்ட புரோட்டீன் ஷேக். இதனை எளிமையாக நமது வீடுகளில் செய்து குடிக்கலாம். இதனை தினமும் குடிக்கும் போது உடலின் உறுப்புகள் சீராக இயங்கும். இதனை எளிமையாக வீட்டிலேயே எப்படி செய்வது என்பதை இங்கு காண்போம்.

உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு அனைத்து விதமான ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுகின்றன. உடலின் பல உறுப்புகள் சீராக இயங்குவதற்கு இரும்பு சத்து, புரத சத்து, கால்சியம் உட்பட அனைத்தும் சரியான அளவில் கிடைக்க வேண்டும். மேலும் இதற்கான ஆதராமாக சில உணவுப் பொருட்களே கிடைக்கின்றன. புரத சத்தை எளிமையாக வழங்கும் ஒரு உணவுப் பொருள் தான் பாதாம் மற்றும் பேரீட்சை பழங்கள் கலந்து செய்யப்பட்ட புரோட்டீன் ஷேக். இதனை எளிமையாக நமது வீடுகளில் செய்து குடிக்கலாம். இதனை தினமும் குடிக்கும் போது உடலின் உறுப்புகள் சீராக இயங்கும். இதனை எளிமையாக வீட்டிலேயே எப்படி செய்வது என்பதை இங்கு காண்போம். 

 தேவையான பொருட்கள் 

அரை  கப் முழு பொட்டு கடலை 

20 ஊற வைத்து பாதாம் பருப்பு  

ஒரு வாழைப்பழம்

4 முதல் 5 விதை நீக்கிய பேரீச்சம்பழம்

3 கப் காய்ச்சி ஆறவைத்த பால் 

செய்முறை

முதலில் பாதாம் பருப்பை எடுத்து தண்ணீரில் ஊறவைத்து தோலை நீக்கி ஒரு பாத்திரத்தில் தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக  ஒரு மிக்சர் ஜாரில் முழு பொட்டு கடலை மற்றும் ஊறவைத்த பாதாம் சேர்த்து நன்றாக பொடியாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக ஒரு பிளெண்டரில், நறுக்கிய வாழைப்பழம், விதை நீக்கிய பேரீச்சம்பழம், அரைத்த பொட்டு கடலை பாதாம் பவுடர், காய்ச்சி ஆறவைத்த பால் சேர்த்து அனைத்தையும் ஒன்றாக கலக்கவும்.

 இதனை நன்றாக அரைத்து எடுத்து மேலும் கூடுதலாக பால் சேர்க்க வேண்டும். மீண்டும் அனைத்தையும் கலக்கவும். ஒரு கிளாஸில் பானத்தை ஊற்றி, நறுக்கிய வாழைப்பழங்கள் மற்றும் நறுக்கிய பிஸ்தா மற்றும் பாதாம் கொண்டு அலங்கரிக்கவும். இப்பொழுது ஆரோக்யமான புரோட்டீன் மில்க் ஷேக் தயார். இதனை உங்களது வீடுகளில் செய்து பார்த்து அணைவருக்கும் கொடுத்து மகிழுங்கள். 

புரோட்டீன் ஷேக் பயன்கள் 

இரத்த சர்க்கரை: பாதாம் மற்றும் பேரிச்சம்பழம் சேர்த்து சாப்பிடுவது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக்க உதவும்.

இதய ஆரோக்கியம்: பேரீச்சம்பழத்தில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் அர்ஜினைன் உள்ளன, இவை இதயத்தின் உள்பகுதியை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், சரியான இரத்த ஓட்டத்தை உறுதி செய்யவும் உதவும். பாதாம் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது மற்றும் கொலஸ்ட்ரால் அளவை சமப்படுத்த உதவுகிறது.

மூளை ஆரோக்கியம்: வீக்கத்தைக் குறைக்கவும் அல்சைமர் நோயை உருவாக்கும் அபாயத்தைக் குறைக்கவும் பேரிச்சம்பழம் உதவும்.

எலும்பு ஆரோக்கியம்: பாதாமில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளது, இது எலும்புகள் மற்றும் பற்களை வலுப்படுத்த ஒன்றாக வேலை செய்கிறது.

செரிமானம்: பாதாம் மற்றும் பேரீச்சம்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது, இது செரிமானத்திற்கு உதவுவதோடு, நீண்ட நேரம் முழுதாக உணர வைக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி: பாதாமில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பைட்டோ கெமிக்கல்கள் போன்ற தாவர கலவைகள் உள்ளன.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒரு போதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை