தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Grow With Dogs: நாய் வளர்ப்பதால் குறையும் நோய் ஆபத்து! ஆய்வு சொல்வது என்ன?

Grow With Dogs: நாய் வளர்ப்பதால் குறையும் நோய் ஆபத்து! ஆய்வு சொல்வது என்ன?

Suguna Devi P HT Tamil

Sep 27, 2024, 05:18 PM IST

google News
Grow With Dogs: டொராண்டோ பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியின்படி நாய்களுடன் வளர்வது சிறந்த குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் மற்றும் சில நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் உதவுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
Grow With Dogs: டொராண்டோ பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியின்படி நாய்களுடன் வளர்வது சிறந்த குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் மற்றும் சில நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் உதவுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

Grow With Dogs: டொராண்டோ பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியின்படி நாய்களுடன் வளர்வது சிறந்த குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் மற்றும் சில நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் உதவுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

வீடுகளில் செல்லப்பிராணிகளை வளர்க்கும் பழக்கம் பலருக்கு இருக்கிறது. இருப்பினும் சிலருக்கு இதில் எந்த வித நாட்டமும் இல்லை. ஏனெனில் செல்லப்பிராணிகளை வளர்க்கும் போது அதில் பல சிக்கல்கள் உள்ளன. அதனை பாராமரிப்பதும், பாதுகாப்பாக வைத்திருப்பதும் மிகவும் பொறுப்பான செயலாகும். சிலர் இதனை விரும்புவதில்லை. ஆனால் சமீபத்தில் வெளியாகியுள்ள ஆய்வில் நாய் வளர்ப்பதில் உள்ள நற்பலன்களை விவரித்துள்ளது. டொராண்டோ பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியின்படி நாய்களுடன் வளர்வது சிறந்த குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் மற்றும் சில நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் உதவுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

நாய்கள் 'மனிதனின் சிறந்த நண்பன்' என காலம் காலமாக கூறப்பட்டு வாரப்படுகிறது. இந்த நன்றி அதிகம் உள்ள தோழர்கள் தங்கள் வால்கள் மற்றும் முட்டாள்தனமான செயல்களால் நம் நாட்களை மகிழ்ச்சியாக மாற்றுகிறார்கள்.  ஆனால் நாயுடன் வளர்வது உங்கள் குடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? டொராண்டோ பல்கலைக்கழகம் மற்றும் சினாய் ஹெல்த் ஆகியவற்றின் ஆய்வு நாய் வளர்ப்பதில் இருக்கும் முக்கியமான ஆரோக்கிய பலன்களை ஆராய்ந்து வெளியிட்டுள்ளது.  குழந்தை பருவத்தில் நாய்களுடன் நேரத்தை செலவிடுவது ஆரோக்கியமான குடல் மற்றும் கிரோன் எனும் கூடல் அழற்சி நோயை உருவாக்கும் அபாயத்தை குறைப்பதாக தெரியவந்துள்ளது.

கிரோன் நோய் 

கிரோன் நோய் என்பது இரைப்பைக் குழாயில் ஏற்படும் வீக்கத்தால் உண்டாகும் கடுமையான குடல் அழற்சி நிலையாகும். இது காலப்போக்கில் குறிப்பிடத்தக்க உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது. இந்த நோய் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மோசமாக பாதிக்கும் என்பதால், ஆரம்பகால கட்டத்திலேயே கண்டறிவதன்  அவசியத்தை ஆராய்ச்சியாளர்கள் முக்கியம் என வலியுறுத்துகின்றனர். இந்த நோய் ஏற்படுவதற்கான ஆதாரத்தை கண்டறிந்து அதனை தவிர்க்க பரிந்துரைக்கப்பட வேண்டும் என்பதை ஆராய்ச்சியாளர்களின் முதன்மை கருத்து ஆகும். மேலும் இந்த நோய் வளர்ச்சிக்கு பங்களிக்கக்கூடிய சுற்றுச்சூழல் காரணிகளில் கவனம் செலுத்த வேண்டும். அதனை மட்டுபடுத்த முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். 

இதில் சுவாரசியம் என்னவென்றால் நாய்களுடன் வளர்வது இந்த நோயின் வாய்ப்பைக் குறைக்கிறது. நாய்களுடன் வளரும் ஆரம்பகால வெளிப்பாடாக குடல் பாக்டீரியா, குடல் ஊடுருவல் மற்றும் இரத்த உயிரியக்கவியல் ஆகியவற்றில் நேர்மறையான மாற்றங்கள் நிகழ்கின்றன. ஒரு நாயுடன் வாழும்போது இந்த நன்மையான மாற்றங்கள் ஏன் நிகழ்கின்றன என்பதை ஆராய்ச்சியாளர்களால் துல்லியமாக சுட்டிக்காட்ட முடியவில்லை என்றாலும், அவர்களின் தரவு இந்த இணைப்பை வலுவாக பரிந்துரைக்கிறது.

மற்ற அபாயங்கள் 

கிரோன் நோயின் வளர்ச்சியை பாதிக்கக்கூடிய பல சுற்றுச்சூழல் காரணிகளையும் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து உள்ளனர். உதாரணமாக, வாழ்க்கையின் குழந்தை பருவத்தின்  முதல் ஆண்டில் ஒரு பெரிய குடும்பத்துடன் வாழ்வது ஆபத்தை கணிசமாகக் குறைக்கிறது. இருப்பினும், ஆய்வின் போது, ​​தங்கள் வீட்டில் பறவைகளை வைத்திருந்த நபர்களுக்கு கிரோன் நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் எனத் தெரியவந்துள்ளது. ஒரு நபருக்கு இந்த நோய் வருவதற்கான வாய்ப்பு மரபியல் வழியாகவும் அதிகமான ஆபத்தைக் கொண்டுள்ளது.  இந்த நோய் பாதிப்பை வலுவடைய சுற்றுச்சூழல் காரணிகள் எவ்வாறு அடிப்படை என்பதை இந்த ஆய்வு எடுத்துக்காட்டுகிறது. இந்த காரணிகள் ஆபத்தை அதிகரிக்கலாம் அல்லது குறைக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. 

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.
அடுத்த செய்தி