தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Girl Baby Names : அரிதான பெண் குழந்தைகள் பெயர்கள் இங்கு அணிவகுக்கின்றன! உங்களுக்கு பிடிச்சத எடுத்துக்கங்க!

Girl Baby Names : அரிதான பெண் குழந்தைகள் பெயர்கள் இங்கு அணிவகுக்கின்றன! உங்களுக்கு பிடிச்சத எடுத்துக்கங்க!

Priyadarshini R HT Tamil

Aug 13, 2024, 03:04 PM IST

google News
Girl Baby Names : அரிதான பெண் குழந்தைகள் பெயர்கள் இங்கு அணிவகுக்கின்றன! உங்களுக்கு பிடித்த பெயரை சூட்டி உங்கள் பெண் குழந்தைகளை அழகு பாருங்கள்.
Girl Baby Names : அரிதான பெண் குழந்தைகள் பெயர்கள் இங்கு அணிவகுக்கின்றன! உங்களுக்கு பிடித்த பெயரை சூட்டி உங்கள் பெண் குழந்தைகளை அழகு பாருங்கள்.

Girl Baby Names : அரிதான பெண் குழந்தைகள் பெயர்கள் இங்கு அணிவகுக்கின்றன! உங்களுக்கு பிடித்த பெயரை சூட்டி உங்கள் பெண் குழந்தைகளை அழகு பாருங்கள்.

பெண் குழந்தைகளுக்கு அரிதாக வைக்கப்படும் பெயர்கள் மற்றும் அதற்காக அர்த்தங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

பெண் குழந்தைகளுக்கு அரிதாக வைக்கப்படும் பெயர்கள்

ஒவ்வொரு பெற்றோருக்கும், அவர்களின் குழந்தைகள் பெயர்கள் அழகாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அதே நேரத்தில் அவை அர்த்தமுள்ள பெயர்களாகவும் இருக்கவேண்டும். தனித்தன்மையான பெயர்களாகவும் அவை இருக்கவேண்டும். நீங்கள் இதுபோன்ற பெண் குழந்தைகளின் பெயர்களை எதிர்பார்த்தால் உங்களுக்கு இந்தப் பெயர்கள் உதவும். உங்கள் வீட்டு இளவரசிக்கு இந்தப் பெயர்களை வைத்து மகிழுங்கள்.

அவ்யா

அவ்யா, அவ்யா என்றால் சூரியனின் முதல் கதிர் என்று பொருள். அது ஒளியையும் கொண்டுவரும். இதமானதாகவும் இருக்கும். உங்கள் குழந்தையும் உங்கள் வீட்டுக்கு இதத்தையும், ஒளியையும் கொண்டுவந்தவர் ஆவார்.

ஆராவி

ஆராவி என்றால், மகிழ்ச்சியை பிரதிபலிப்பவள் அல்லது இதமான இசை போன்றவள் என்ற பொருள். உங்கள் வாழ்க்கையில் உங்கள் குழந்தைகள் கொண்டுவந்த மகிழ்ச்சியை இந்தப்பெயர் குறிக்கிறது.

சைத்தாலி

சைத்தாலி என்றால், தனித்தன்மையான இந்து பெயர், இது பெண் குழந்தைகளுக்கு வைக்கப்படுகிறது. குழந்தைகள் வசந்த காலத்தில் பிறந்தால் அவர்களுக்கு இந்தப் பெயர் வைக்கப்படுகிறது. இது பெங்காலி பெயர். இந்த குழந்தைகள் உங்கள் வாழ்க்கைக்கு வசந்தத்தை கொண்டு வந்தவர்கள் என்று பொருள்.

திவிஜா

திவிஜா என்றால், சொர்க்கத்தில் பிறந்தவள் என்று பொருள். உங்கள் சொர்க்கத்தின் மகளுக்கு விண்ணுலகில் இருந்து அனைத்தையும் தேர்ந்தெடுங்கள்.

எய்லா

எய்லா என்பது, சிறிய இனிமையான பெயர். இதற்கு பூமி என்று பொருள். உங்களின் உலகம் அவர்தான் என்பதை எளிமையாக எடுத்துக்கூறும் பெயராக எய்லா உள்ளது.

ஹிராந்தினி

ஹிராந்தினி என்றால், இசையின் மென்மையானவர் என்று அர்த்தர். இது ஒளி, பிரகாசத்ததைக் கொடுப்பவர் போன்ற அர்த்தங்களையும் அடக்கியது. இது உங்கள் குழந்தை ஆற்றல் நிறைந்தவர் என்பதை குறிப்பிடுகிறது.

இனிகா

இனிகா, என்பது இதமான பெயர். இதற்கு சிறிய பூமி அல்லது சிறிய உலகம் என்று பொருள். உங்கள் குழந்தைக்கு இந்தப் பெயர் நன்றாகவே பொருந்தும் ஏனெனில், இந்தப்பெயரை உங்கள் சிறிய உலகத்துக்கு ஏற்ற பெயர்.

மீஹிகா

மீஹிகா என்றால், பனி, குளிர், இதம் என்று பொருள். மிகவும் தனித்தன்மை வாய்ந்த பெயர். உங்கள் மகளின் தனித்தன்மைக்கு இந்தப் பெயரின் கருணை மற்றும் ஆச்சர்யங்கள் உதவும்.

நம்யா

நம்யா என்றால், மதிக்க தகுதியான நபர் என்று பொருள். உங்கள் குழந்தை அனைவரும் போற்றும் குணநலன்கள் கொண்டவர் என்பதால், உங்கள் குழந்தைக்கு ஏற்ற பெயர் இது. உங்கள் குழந்தைக்கு உங்கள் மனதில் எப்போதும் தனியிடம் உண்டு என்பதை இந்தப்பெயர் குறிப்பிடுகிறது.

ரிஷிமா

ரிஷிமா என்றால், நிலவொளி என்று பொருள். நிலவின் அமைதி, குளுமை, இரவின் பரபரப்பின்மையைக் காட்டுகிறது. உங்கள் வாழ்வில் அமைதியான அழகைக் கொண்டு வந்தவர் உங்கள் குழந்தை என்பதை இந்தப் பெயர் சுட்டிக்காட்டுகிறது.

வர்யா

வர்யா என்றால் மதிப்புமிக்கவள், பொக்கிஷம், உங்கள் குழந்தைக்கு இந்தப்பெயர் மிகவும் பொருத்தமாக இருக்கும். ஏனெனில் உங்கள் குழந்தைதான் உங்கள் வாழ்வின் பொக்கிஷம். உங்கள் மகள் மதிப்புமிக்கவர் என்பதால், உங்கள் குழந்தைக்கு இந்தப் பெயரை சூட்டி மகிழுங்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

 

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.
அடுத்த செய்தி