BSNL அறிமுகம் செய்த 'ஃப்ரீடம் 75' திட்டம்!
Aug 15, 2022, 01:12 PM IST
75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் விதமாக அதிவேக ஃபைபர் இன்டர்நெட் சேவையில் “ஃப்ரீடம் 75” என்ற திட்டத்தை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் 75வது சுதந்திர தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் பல நிறுவனங்கள் சலுகைகளில் கொடுத்து வருகின்றனர். அதேபோல் பிஎஸ்என்எல் மிகப்பெரிய சலுகை வழங்கி உள்ளது.
சுதந்திர தினத்தைச் சிறப்பிக்கும் வகையில் 'ஃப்ரீடம் 75' என்று அதிவேக ஃபைபர் இன்டர்நெட் சேவையை 275 ரூபாய்க்கு சலுகையாக வழங்கி உள்ளது. இது குறித்து கடலூர் மாவட்ட பிஎஸ்என்எல் பொதுச் செயலாளர் ஜெயக்குமார் ஜெயவேலு செய்து குறிப்பு ஒன்றே வெளியிட்டுள்ளார்.
அதில், " ஃப்ரீடம் 75 என்ற புதிய பைபர் சலுகை திட்டத்தை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தி உள்ளது. எஃப்டிடிஹச் (Ftth) அதிவேக ஃபைபர் இன்டர்நெட் சேவையில் மாதம் 499 ரூபாய் அல்லது 599 ரூபாய் திட்டத்தில் புதிய இணைப்பு பெறும் வாடிக்கையாளர்கள் 275 செலுத்தி 75 நாட்களுக்குச் சலுகைகளைப் பெற்றுக் கொள்ளலாம். 999 ரூபாய் திட்டத்தில் சோனி லைவ், யூடியூப், ஜீ, ஓட், ஹாட் ஸ்டார் போன்ற ஓடிடி போன்றவைகள் அடங்கியுள்ளது. இந்த புதிய இணைப்புக்கு முதல் 75 நாட்கள் 775 ரூபாய் செலுத்தினால் போதும்.
இந்த சலுகையானது இன்று (ஆகஸ்ட் 15) முதல் 30 நாட்களுக்குக் கொடுக்கப்படுகிறது. 2399 மற்றும் 2999 போன்ற 365 நாட்கள் வேலிடிட்டி திட்டங்களில் இணைந்திருக்கும் மொபைல் வாடிக்கையாளர்களுக்கு 75ஜிபி டேட்டா அதிகமாக வழங்கப்படும். வரும் 31ஆம் தேதி வரை இச்சலுகை கொடுக்கப்படுகிறது. மேலும் தகவலுக்கு உங்களுக்கு அருகில் உள்ள பிஎஸ்என்எல் மையங்களை அணுகித் தெரிந்து கொள்ளலாம்" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
டாபிக்ஸ்